பிறைநிலா அரைநிலா
Published September 16, 2005 • By
மரியம்ஜோ
மரியம்ஜோ

—-
மறுமுனை குரல் கேட்க
கூர்மையடைகிறதுன் காதுகள்
வந்த அழைப்புகளில்
செய்த அழைப்புகளில்
வாடிக்கை எண் தேடுகிறாய்
குறுஞ்செய்திகளை
படித்து குழம்புகிறாய் நாளும்
போகையிலும்
திரும்புகையிலும்
‘எங்கன்னு கேளு ‘ என்று
விசாரிக்கச் சொல்கிறாய்
யாரையேனும்.
அவசரக் கிளம்பளாலும்
தாமத வருகையாலும்
எரிச்சலடைகிறாய்
கைப்பை துலாவுகிறாய்
புத்தகப் பக்கங்களை
புரட்டிப் பார்க்கிறாய்
தூங்கி விட்டேனா என
உறுதி செய்து விட்டுத்
தூங்கப் போகிறாய்
பரிதாபமாக இருக்கிறது
உன் ஆண்மை கண்டு.
மரியம்ஜோ
மும்பை
mariyamjoe@gmail.com