மலிவு எண்ணையும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டியும்!

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

கோபாலா ராஜா.



உலகில் எந்த ஒரு நாடக இருந்தாலும் அரசியல்வாதிகளின் ‘கடைத் தேங்காயைப் பிள்ளையாருக்கு உடைக்கும்’ எண்ணம் அவர்களின் ‘இலவசத்’ திட்டங்களில் தெரிய வரும். இந்த திட்டங்களினால் நாட்டு மக்களுக்கு எந்த ஒரு பெரிய பயனும் கிடைக்கா விட்டாலும் அவர்களின் வாக்கு பெட்டிகள் நிறையும் வாய்ப்பு அதிகம். தத்தம் செல்வாக்கை வளர்ப்பதில் உள்ள சுயநலம் அன்றி மக்களின் வளம் கருதிய செயல்பாடு எதுவும் இத்திட்டங்களில் காண கிடைப்பதில்லை.நம் நாட்டில் இத்தகைய பல நூறு திட்டங்களை காண முடியும், ஆனால் வெனிசுலாவின் தலைவர் ஹுகோ சவெழ்ஸ் தந்த மலிவு விலை எண்ணெய் ஒரு பெரும் உதாரணம்.
ஹுகோ ரபாஎல் சவெழ்ஸ் பிரியாஸ் என்ற ஹுகோ சவெழ்ஸ் தென்னமெரிக்க நாடுகளின் மற்ற பிற மக்களின் பிரதிநிதிகளைப் போல ஏழை குடும்பத்தில் பிறந்து ராணுவ கல்லூரியில் பயிற்சி பெற்றவர். இவரது இளமைக் காலம் பல இடம் பெயர்தலும் உறவினர் வளர்ப்பிலும் கழிந்தாலும் ராணுவப் பயிற்சியும் அங்கு படிப்படியாய் உயர்ந்ததிலும் திறமையும் ஆளுமையும் கொண்டவர் என்பதற்கு சான்று. 1980 களில் கண்டுபிடிக்கப் பட்ட பெட்ரோல் வளம் வெநிசுலவை தென்னமெரிக்க நாடுகளில் பணக்கார நாடக உயர்த்தியது. புதுப் பணம் தந்த போதை அதனால் அகல கால் வைத்த அதிபர் கார்லோஸ் அன்றேஸ் பெறேழ்சை எதிர்த்து ஹுகோ செய்த ராணுவ புரட்சி இரண்டே நாட்களில் முறியடிக்கப் பட்டது. தன் தோல்வியை ஒப்பு கொண்டு இரண்டு ஆண்டு சிறைக்குச் சென்ற அவரை 1994 ல் அப்போதைய அதிபர் ரபாஎல் கல்தேற வெளி கொணர்ந்தார். சிறையிலிருந்து வெளி வந்த சவேழ்ஸின் ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்து தேர்தலில் பங்கேற்றார். இதற்கு அவரது தீ கக்கும் பேச்சும் மாறுதலை வேண்டிய மக்களும் காரணங்கள். அமெரிக்க டைம் பத்திரிக்கை இவரை இரண்டு முறை (2005,2006) நூறு முக்கிய தலைவர்கள் பட்டியலில் தேர்ந்தேடுதது வெனிசுலாவின் அரசியல் மாற்றங்களும் சவேழ்ஸின் அமெரிக்க எகதிபதியத்தை எதிர்க்கும் எண்ணங்களும் அதை பாமரத் தனத்தில் பேசிய பேச்சுக்க்களும்தான். கியூபாவின் காச்ற்றோவையும் ஈரானின் அஹாமதிநேஜடயும் லிபியாவின் கடாபியையும் நண்பர்களாக காட்டிக் கொண்ட செவழ்சின் அமெரிக்காவை வெறுப்பேற்றும் செயல்கள் அவரின் பேச்சுக்களில் அமெரிக்க கோண்டோலீச ரைஸ் ஒரு ‘தென்னமேரிக்க் ஞான சூன்யம்’ என்ற வருண்ணிததும், ஐ நா சபையில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷை ‘சாத்தான்’ என்று அழைத்ததும் அமெரிக்காவிற்கு எதிரான போர் கொடியாகக் காணலாம்.
ஆனால் இந்தப் போர் பெயரளவிலேயே என்பதற்கு அமெரிக்க வெனிசுலா வர்த்தக பரிமாற்றம் ஒரு சான்று. அமெரிக்காவின் எண்ணெய் இறக்குமதியில் 6% வெநிசுலவிளிருந்துதான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அமெரிக்காவின் பெரிய எண்ணெய் நிறுவனமான சிட்கோ (CITGO) வில் பெரும் பங்கு வெனிசுலா வைத்து இருக்கிறது. கார்களுக்கு பெட்ரோல் பம்புகள் முலம் பெட்ரோல் விற்பனை செய்யும் இந்நிறுவனம் தற்போது வடகிழக்கு மாநிலங்களுக்கு சூடேற்ற எண்ணெய் (heating oil) மலிவு விலையில் தர முன்வந்துள்ளது. தற்சமயம் அமெரிக்காவில் பனிக் காலமாதலால் வார்த்தையலும் சூடேற்றும் சவெழ் சூடேற்ற எண்ணெய் தருவது அரசியலில் சாணக்யம் வாய்ந்த ஒரு முயற்சி. ஏழ்மை கோட்டிற்கு கீழே உள்ள அமெரிக்கர்களுக்கு குறைந்த விலையில் எண்ணெய் தருவதாக கூறுகிறது சிட்கோ டிவி விளம்பரங்களில்.
வெனிசுலாவின் தனி மனித வருமானம் அமெரிக்கா ஏழ்மை கோட்டை விட கீழுள்ள நிலையில் அமெரிக்கா ஏழைகளைப் பற்றி கவலைப் படுவதென்பது தன் வீட்டில் சாப்பாட்டிற்கு உணவு கேட்டால் பக்கத்து வீட்டுக்கு கலர் டிவி கொடுக்க பாய்ந்து செல்வது போலிருக்கிறது. பெரியண்ணன் என்ற முறையில் அமெரிக்கா மத்ய கிழக்கு நாடுகளில் எதேச்சிதாரிகளை நண்பர்களாக உறவாடிக் கொண்டே மக்களாட்சி உபதேசம் செய்து கொண்டிருக்கும் வேளையில் அந்நாட்டின் வேலிக்குள் ஓணானை விட முயலும் சவெழ்ஸ் ஒரு பெரியதொரு தலைவலி.
==================================================
http://en.wikipedia.org/wiki/Hugo_Ch%C3%A1vez
http://en.wikipedia.org/wiki/Poverty_line


gopalar@hotmail.com

Series Navigation