மலர் மன்னனின் …..மனவெளிக்கு!

This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

தாஜ்


14th jun, ’07 திண்ணையில், நாகூர் ரூமிக்கு கண்டனத்தையும் / நாட்பான வார்த்தைகளில் தனது ஆதங்கத்தையும் முன் வைத்தி ருக்கிறார் மலர் மன்னன். அவரது கண்டனம் குறித்து இங்கே நான் எதுவும் எழுத வரவில்லை. அது அவர்களின் சங்கதி! மலர் மன்னனின் நட்பான வார்த்தைகளில் மிளிரும் அவரது ஆதங்கத்தை ஒட்டிதான் இந்த மடல்! இன்னும் சரியாகச் சொன்னால், அவரது ஆதங்கத்தை முன்வைத்து அவருக்கான எனது ஆதங்கத்தை வெளிப்படுத்த முனைவதும்!

“நாகூர் ரூமியின் தொடக்க காலத்தில் அவரது எழுத்தில் ஒரு சிறு பொறி இருப்பதைக் கண்டு அதனை ஊதிப் பெருக்க முனை ந்தவர்களுள் நானும் ஒருவன். கணையாழியில் அவரது படைப்புகள் இடம்பெறச் செய்வதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு. மே லும், கால் இதழிலும் அவரது கவிதைகள் சிலவற்றை வெளியிட்ட நினைவு உள்ளது.”

“படைப்பிலக்கியத்தில் சாதனைகள் செய்வதற்கான பல சாத்தியக்கூறுகள் நாகூர் ரூமியிடம் இன்னமும் வற்றிவிடவில்லை. மார்க்க அறிஞர் என்கிற புஜ கீர்த்தி லௌகீக ரீதியாக ஒரு வேளை அவருக்கு நிரம்பப் பயன்களைத் தரக்கூடும். ஆனால் அதில் சபல ப்பட்டுவிடாமல் படைப்பாற்றலில் அவர் கவனம் செலுத்துவாரேயானால் அது அவருக்கு லௌகீகப் பயன் தராவிடினும் தற்காலத் தமிழ் இலக்கியத்தில்ஒரு நிரந்தரமான அந்தஸ்தைத் தரக் கூடும். தஞ்சை மாவட்டத் தமிழ் பேசும் முகமதிய சமூகத்தின் பிரத்தியே கச் சாயல்களை மிக விரிவான சீலையில் வரைந்து தரக்கூடிய தூரிகை நாகூர் ரூமியிடம் உள்ளது. அது காய்ந்துபோய் அவர் வீட் டின் எங்கோ ஒரு மூலையில் கிடக்கிறது. அதை வேண்டாத குப்பை என்று வீட்டில் இருக்கிறவர்கள் வீசி எறிந்துவிடுமுன் நாகூர் ரூமி தேடி எடுத்துக் கொள்வது நல்லது. ரூமியின் தொடக்க கால ஊக்குவிப்பாளர்களில் ஒருவன் என்கிற முறையில் இதைச் சொ ல்ல எனக்கு அனுமதி உண்டு என நம்புகிறேன்.” – மலர் மன்னன்.

திரு. மலர் மன்னனின் இந்த செய்தி, இரண்டு அடுக்குகள் கொண்டாக இருக்கிறது.

முதல் தகவலில், ரூமியின் ஆரம்பக்கால இலக்கிய உந்தல்களுக்கு தான் உதவியதாக மலர்மன்னன் சொல்லிக் கொள்கிறார். இருக் கலாம். இல்லாமலும் இருக்கலாம்! இந்தச் செய்தி எனக்குப் புதிய தகவலாகவே இருக்கிறது. ரூமியின் ‘குட்டி வாப்பா’என்கிற குறு நாவல் கணையாழி பரிசுப் போட்டியில் தேர்வு செய்யப்பட்டு, பிரசுரமும் ஆனது. பரிசுப் போட்டிக்கு கதை எழுதுகிறவனின் செயல்பாடு என்பது, அதை எழுதி சம்பந்தப்பட்ட இதழுக்கு அனுப்பிவைப்பதோடு முடிந்துவிடுகிறது. அப்படித்தான் ரூமியின் செயல்பாடும் இருந்திருக்கும். தேர்வு கமிட்டியில் அங்கம் வகித்ததாகக் கூறும் மலர் மன்னனுக்கு ரூமியின் குறுநாவல் பிடித்துப் போயிருக்கலாம். அதனால் வேண்டுமானால் ஆர்வம் கொண்டவராக அவர், அந்த குறுநாவலை தேர்வும் செய்திருக்கலாம். அதற்காக மலர் மன்னன் ரூமிக்கு நான் உதவினேன் என்று உரிமை கொண்டாடுவது அதிகம்! ரூமியின் ஆரம்பக்கால மொழிமாற்றக் கவிதை களையும், மேற்கத்திய கவிஞர்கள் குறித்த கட்டுரைகளையும் கேட்டு வாங்கி வெளியிட்ட மீட்சியும், அதன் ஆசிரியர் பிரம்ம ராஜ னும் இப்படி ரூமியை உரிமை கொண்டாடக் கூடுமென்றால்… அது ஓரளவு சரியாக இருக்கும்.

மலர் மன்னன் குறிப்பிட்டு இருப்பது மாதிரி, நாகூர் பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்களின் நடைமுறை, சொல்வழக்கு போன்றன வெல்லாம் பிறபகுதி இஸ்லாமியர்களிடமிருந்து வித்தியாசம் கொண்டது. அந்த மக்களின் அழகியலை, யதார்த்தம் பிசகாமல் பதிவு செய்த குறுநாவல்தான் ரூமியின் ‘குட்டி வாப்பா’. படைப்பாளி ஆபிதீனின் கதைக் களம் என்பதும் முழுக்க முழுக்க அந்த மண் சார்ந்ததுதான். ஆபிதீனின் படைப்புகளை அதன் நுட்பம் கண்டு வாசிப்பவர்கள் அந்த மண்ணையும், மக்களை இன்னும் தெளிவு பட அறிய வாய்ப்பு உண்டு. என்னுடைய புரிதலைத்தாண்டி, ரூமியின் இலக்கியவளர்ச்சிக்கு உதவிய விசயத்தில் மலர் மன்னனின் கூற்று சரிதான் என்கிற பட்சம், ரூமி குறித்த அவரது ஆதங்கமும் மிகச் சரியானதே!

இரண்டாவது தகவலில், ரூமியின் இலக்கிய ஆகுருதியைப் பற்றி மலர் மன்னன் அழகான கவிதை நயத்துடன் பேசியிருக்கிறார். நானெல்லாம் விரும்பிப் படித்த ‘கால்’ சிற்றிதழின் ஆசிரியர் ஆயிற்றே! அவரின் அந்த கவிதை மிடுக்கு அப்படியே இருக்கிறது! ரூமி, மார்க்க அறிஞர் கோதாவில் மதம் குறித்து எழுதுவதிலிருந்து இலக்கியத்தின் பக்கம் கவனம் செலுத்துவாரேயானால் அவர் இன்னும் பிரகாசிக்க வாய்ப்பிருப்பதை நட்போடு, ஆதங்கப்பட்டிருக்கிறார் மலர் மன்னன். ரூமி மீதான் அவரது அன்பு நிஜமா னது. இப்பொழுது மட்டுமல்ல, திண்னையில் ரூமி குறித்து அவர் எழுதியபோதெல்லாம் இந்த வாஞ்சையான அன்பை கவனித்திரு க்கிறேன்! அது, அன்றைக்கு மறைய வெளிப்பட்டது, இன்றைக்கோ அது முழு நிலா!

சமீப ஆண்டுகளாக ரூமி, கிழக்குப் பதிப்பகத்தார்களின் விருப்பங்களுக்கு இணங்க,பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார். இதன் பப்ளிஷர் பத்ரி சேஷாதிரி, சீஃப் எடிட்டர் பா.ராகவன். இரண்டு பேர்களுமே பிராமண நண்பர்கள். அவர்கள்தான், ரூமி எதை எழுதித் தரவேண்டும் என தீர்மானிப்பவர்கள். ரூமி அதை ஏற்பவராகவும், செயல்படுபவராகவும் இருக்கிறார். ரூமியின் புத்தகங்கள் எல்லாமே மதரீதியான புத்தகங்கள் அல்ல. இதுவரை அப்படி அவர் ஒரே ஒரு புத்தகம்தான் எழுதியிருக்கிறார். பெரும்பாலும் அவரது புத்தகப் பணியில் பாதிக்குப் பாதி மொழிமாற்றுப் புத்தகங்கள்தான்! பாக்கிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதையான ‘In the Line of Fire’ / ஹோமரின் ‘இலியட்’காவியத்தின் முழு தமிழாக்கம் போன்றவைகள் அவரது மொழிமாற்று வரிசையில் சமீபத்திய வெளியீடு!

அந்த பதிப்பகத்தின் வழியே ரூமியின் நேரடி எழுத்தாக, காமராஜ் பற்றிய சுயசரிதை/ ‘அடுத்த வினாடி’ என்கிற தன்னம்பிக்கைப் புத்தகம் / மாணவர்களுக்கு நம்பிக்கை விதைக்கும் புத்தகம் என்று நிறைய எழுதியிருக்கிறார். எழுதிக்கொண்டும் இருக்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு, ‘எய்ட்ஸ்’ குறித்த விழிப்புணர்வு தரும் பயன் தக்கப் புத்தகம் கூட எழுதினார். அவரை மதசம்பந்தமான புத்தகம் மட்டுமே எழுதுகிறவர் மாதிரி முகமன்படுத்துவதும், மார்க்க அறிஞர் என்பதும் ரொம்ப அதிகம். பதிப்பகத்தாரின் வேண் டுகோளின்படி, அவர் பிற புத்தகங்கள் எழுதுவது மாதிரிதான் மதசம்பந்தமான புத்தகமும் அவருக்கு! அவர் ஆன்மீகம் சார்ந்த வர் என்பதால் அந்த புத்தகம் எழுதியப்போது ஆழ்ந்துப் போயிருக்கிறார். நானும் அதை அவரது சறுக்கலாகத்தான் பார்த்தேன். மதம் சார்ந்து எழுதும் எல்லா ஆன்மீகவாதிகளிடமும் நான் இந்தச் சறுக்கலைப் பார்க்கிறேன்!அவர்களால் அதைத் தவிர்க்க முடி யாது போலிருக்கிறது.

படைப்பாற்றலில் ரூமி தொடர்ந்து கவனம் செய்யவேண்டும் என்பதில், மலர் மன்னனை ஒத்த அதே எண்ணம் எனக்கும் உண்டு.
அவரது தூரிகை காய்ந்துப் போகவில்லை என்று மலர் மன்னன் போலவே நானும் கருதுகிறேன். ரூமி, உலக கவிதைகளை மொழி மாற்றம் செய்துத் தந்த அந்தக் காலக்கட்டம் எத்தனை நிஜமானது! மனிதன் காலத்துக்குள்ளே வட்டமிடுபவன்! ரூமி இலக்கியப் படைப்புக்குள் வரும் காலமும் வரும். அன்றைக்கு மதத்தின் அகம் புறம் பற்றிய கட்டுகளின் நிஜத்தை அவர் நிச்சயம் சொல்லக் கூடும். நம்புகிறேன்.

ரூமி குறித்து, மலர் மன்னன் முன் வைக்கும் ஆதங்கத்தை காண்ட எனக்கு முதலில் அவரது அன்பு குறித்தும், அந்த ஆழ்மன வெளிப்பாடுக் குறித்தும் நீண்டநேரம் யோசித்ததில் மனம் சிலிர்த்தேன்! ஒருவர் மீதான அன்பை எத்தனை இரும்புத் திரையிட்டா லும் மறைக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துக் கொண்டேன். அது குறித்த இன்னொரு யோசிப்பில், மலர் மன்னன் எனக்குள் மிகப் பெரிய கேள்வியாக எழுந்து நின்றார்.

ரூமி, மதம் குறித்து ஒரு புத்தகம் (அவர் அப்படி எழுதியது ஒன்றா, இரண்டாவென்று தெரியவில்லை. மதம் குறித்த எந்த ஒரு சங்கதிகளிலும் பெரிதாய் எனக்கு ஆர்வம் ஏற்படுவது கிடையாது!) எழுதியதை வைத்து அவரை பிரச்சனைக்குள் இழுக்கும் மலர் மன்னன், தன்னை தினம் தினம் கண்ணாடியில் பார்த்துக் கொள்பவர்தானா? என்ற ஐயம் எழுந்தது. படைப்பாளி ஒருவர், மதம் சார்ந்தப் புத்தகங்கள் எழுதப் போவதென்பது லௌகீக ரீதியாக பயன்தரும் என்றாலும்….. காலத்தால் நிற்கும் படைப்புகளை படைப்பதுதான் அவருக்கு அழகு என்கிற மிகப் பெரிய உண்மையை முத்தாய்ப்பாக பேசியிருக்கிற மலர் மன்னன், இப்பொழுது என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு தெரியுமா? போகட்டும், அவருக்கு ‘கால்’ மலர் மன்னன் யார் என்றாவது தெரியுமா? மனதை கல்லாக்கிக் கொண்டு ஏன்தான் இப்படி மதம் மதம் என்று அலைகிறார்களோ?

மலர் மன்னன் அவர்களே, ரூமிக்கு ஒரு நீதி, உங்களுக்கு ஒரு நீதியா? இலக்கிய ‘சகா’ என்கிற அன்புடனும், அதுகொண்ட ஆத ங்கத்துடனும் கோரிக்கையாகவே இதைச் சொல்கிறேன். சத்தியத்தின் மனவெளியில் தீர அமர்ந்து சுய பரிசோதனையில் ஈடுப்படு ங்கள். அப்பொழுதுதான் இப்பொழுதான உங்களது நிலைப்பாட்டின் யதார்த்தம் புரியும். கடவுளையும், மதத்தையும் தூர வைத்து
பார்க்கும் நான், உங்களது நிழலில் நின்று இப்பொழுது ஒன்றைச் சொல்கிறேன். கடவுளின் அனுகிரம் இல்லாமல் யாரும் யாரையும் அடக்கி விடவோ, ஒடுக்கி விடவோ முடியாது. சரியா? ஒப்புக்கொள்கிறீர்களா? தவிர, சப்தமொல்லாம் எதிர் வினையைத்தான் நிகழ்த்தும். ஆப்கானிஸ்தான், ஈராக், நேப்பாளம், உத்திரப் பிரதேசம் க ண்டதெல்லாம் அதுதான். யார் யாரோ பார்லிமெண்டில் போய் அமர்வதற்கும், பதவி சுகம் காணுவதற்கும் அடிப்படை இலக்கியவாதியாகிய நாம் ஏன் மாரடிக்கவேண்டும்? நமக்கு அழகு உண்மையை உண்மையாக உரக்க உரைத்தல். முடிந்தால் அதை கலையின் வேலைப்பாடோடு மக்களின் மனதில் தைக்க உரைப் பது. அன்புடன் இன்னொன்றையும் ஞாபகப் படுத்துகிறேன். உங்களது தூரிகையும் அபூர்வமானதுதான்! அதுவும் காயாத, இத்துப் போகாத, சாகா வரம் கொண்டதுதான். நம்புங்கள்.

********************
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்