மறுபடியும்

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

பவளமணி பிரகாசம்


துட்டுள்ள சீமாட்டி
கேட்டுப் பெற்றனள்
செத்துப் போய்விட்ட
செல்லப் பூனையின்
அசலான நகலின்
அன்போடு போற்றிட

ஐயகோ! இது என்ன சோதனை!
ஐயங்கள் செய்யுதே வாதனை!
மாண்ட உறவினை,
மனைவியை, மகனை
மற்றும் நண்பனை
மறுபடியும் பிறப்பித்து
தொடரும் கதையினால்
தொடராதோ குழப்பமே ?

விதியோடு விளையாட
மதி கொண்ட கிறுக்கிலே
மரிக்குமோ ஒரு துன்பம் ?
பிறக்குமோ மறு துன்பம் ?
வினையாகும் விஞ்ஞானம்
விளைவிக்கும் விபரீதம்

மற்றுமொரு மும்தாஜால்
மறையுமே தாஜ்மஹால்
அநித்தியம் அற்றபின்
அர்த்தமென்ன வாழ்விலே ?
அடுத்த பிறவியேது ?
அனுபவத்தின் புதுமையெங்கே ?
ஆழ்துயரின் அழகேது ?
அழியாதோ அகிலமே
விரவுகின்ற வெறுமையில் ?

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

மறுபடியும்

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

பவளமணி பிரகாசம்


கும்மென்ற இருட்டான இரவும்
குப்பென்று புலர்ந்துவிடும் ஒரு பொழுதில்,
சருகை உதிர்த்த மொட்டை மரமும்
சடுதியில் துளிர்க்கும் அடுத்த பருவத்தில்,
இறப்பிங்கு இறுதியில்லை-
இன்னும் இன்னும் உயிர் பிறக்கும்.
மதிகெட்டு மாந்தர் மாண்பை இழந்தாலும்
மறுபடியும் மலர்ந்துவிடும் மானிடமே.

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்