மனைவியின் சிநேகிதர்

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

அன்பாதவன்


இளமை ததும்ப செந்நிறமாய்
சிரித்தபடி உரையாடும் இவரே
என் மனைவியின் சிநேகிதர்.

அறுபட்ட பால்யத்தின்
தீடார் ஒட்டலாய் புதிய வரவு.

யாருமில்லாத போது வருபவர்
போவதெப்பதோதென
எவருக்கும் தெரியாது.

குழந்தைகளுக்கென வாங்கிவரும்
திண்பண்டங்கள் பெரும்பாலும்
மனைவிக்கு பிடித்தவாயிருப்பது
எதேச்சயானது தான்.

சிரிக்க சிரிக்க ரகஸ்யகுரலில்
பேசுபவரின்
மொழிகள் புரிவதில்லை எனக்கு.

ரகஸ்யங்களிளான உரையாடல்கள் மீது
வெளிச்சம் விழாத வண்ணம்
தொடரும் சாமர்த்தியம் ரசிக்கத்தக்கது.
எதற்கும் எரிந்து விழுபவளூக்கு
சிநேகிதரிடம் பேசும்போது
சிரிப்பலைப் பொங்கும்.

நான் உள்ளே நுழையும்போது மட்டும்
அவசர வேலையிருக்கும்
நண்பருக்கு.

என் வருகையால் உடைபடும் ரகசியம்
சாதாரணத்திற்கு மாறி
அபத்தத்திற்கு தாவும்.

எவையும் கோபமூட்டுவதில்லை
மாறாக கற்றுக் கொடுக்கின்றன
நண்பர்களின் மனைவிகளுக்கு
சிநேகிதனாய் இருப்பது எப்படியென.

—-
jpashivammumbai@rediffmail.com

Series Navigation