மனிதனாய் தவிர்த்து

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

இயை அப்துல்லாஹ்


ஒரு கங்கு போல
தொண்டைக்குழிக்குள்
திரளுகிறது வாழ்க்கை.

விறைத்துதிரும் பட்டாம்பூச்சி
சிறகில் தொம்மென்று
விழுகிறது பனித்துளி.
கண்ணுக்குள் ஊசி முனையாய்
குத்துகிறது மரணம்.

அதுவாகவே மேல் தடவிப்போகிற
குளிர் தென்றலை
ரசிக்க விடாமல் திரை போடுகிறது
ஒரு இரவுப்பாடல்.

துப்பாக்கி ரவையினால்
வருகிற மரணம் நொடிப்பொழுதில்
கழுத்தை முறிக்கிறது.

எல்லோரும் அழுதிருக்க
வழிகிறது வாழ்க்கை.
தூக்கம், கனவு, விழிப்பு எல்லாமே
மரணத்தை நிறைத்திருக்கின்றன.

எழுதும் பேனாவின் முனை கூட
மீள வந்து பிடரியில்
குத்துவதான அச்சம்

கல்லாய்—- பேயாய் கணங்களாய்
வல்மிருகமாகி பறவையாய்
எல்லாப்பிறப்பும் பிறந்திருக்கலாம்
அல்லாஹ்வே
மனிதனாய் தவிர்த்து….

இயை அப்துல்லாஹ்
லண்டன்
24.02.2006
anasnawas@yahoo.com

Series Navigation