போதுமானது

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

வளத்தூர் தி .ராஜேஷ்


————————
இப்பொழுது தொடங்கிய
இந்த நொடி
உயிர்ப்புடன் இருப்பதற்கு
அதன் இயக்கம் காரணமாவதற்கு
முன்பாகவே
நினைக்கப்படுதலில்
முழுமை அடைந்து விட்டது .

என் நொடிகள் அனைத்தும்
காலத்தால் செய்யப்பட்டது
அல்ல
யாதுமற்ற வெறுமையின்
வெற்றிடத்தில் சேகரித்த
மிச்சங்கள் மட்டுமே .

என் மன மகிழ்வு அனைத்தும்
இறுக்கமான நிலையில்
இருந்தே தொடங்குகிறது
அதனதன் வாழ்வதனை
அதனதன் நொடிகளாய்
கழிக்கின்றது.

என் அக மேற்பரப்பில் வழிகின்ற
நீர்மம் திட நிலையை
அடைவதற்கு பல
யுகங்கள் காத்திருக்க
அவசியமில்லை
இந்த கனமேற்றும்
தனிமை போதுமானது .
-வளத்தூர் தி .ராஜேஷ்

Series Navigation