பொலிரட்டும் பொங்கல்!!!

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

பிரியா ஆர்.சி.


பச்சரிசியும் பாலும் பொங்க வேண்டிய நாள்
பொங்கி நிற்பது உழவரின் நெஞ்சம் மட்டும்!

மழை பெய்து ஆறுகள் பொங்கியிருந்தால்
ஒருவேளை பொங்கியிருக்குமோ பச்சரிசிப்பொங்கல் ?
பொங்கிய காவேரியைப் பகிர்ந்திருந்தால்
ஒருவேளைப் புலர்ந்திருக்குமோ புன்சிரிப்புடன் பொங்கல் ?

நெய்பவனுக்கு ஆடையில்லை பட்டாசு
செய்பவனுக்கு தீபாவளியில்லை
பொங்கல் மட்டும் என்ன விதிவிலக்கா ?

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழிக்க வேண்டாம்
மாநில எல்லைக்கோடுகள் அழிக்கப்பட்டால் போதும்!

வாடிய பயிரும் வற்றிய வயிரும் கண்டு
விதியிதென்று ஒதுங்க வேண்டாம்
கதியற்றவருக்கு ஆதரவு கொடுங்கள் போதும்!

பால் போன்ற மனதும் பச்சரிசிச் சிரிப்பும் பெற்று
அன்பும் பன்பும் அறநெறியும் வளர்ந்து
மண் நனைந்து மனம் மகிழ்ந்து உழவரனைவருக்கும்
மகிழ்ச்சி பொங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

rcpriya@yahoo.com

Series Navigation