பெரியபுராணம் – 8

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

பா. சத்தியமோகன்


91.

படர்ந்த பேரொளி தோன்றி பலமணிகள் கட்டிய நகர வீதி-
தோண்டிச்சென்ற பன்றியாலும் பறந்துசென்றஅன்னத்தாலும்
தொடரப்பட்ட சிவன், தம்அடியாரான வன்தொண்டர்க்குத் தூதுபோக
நடந்த செந்தாமரையால் திருவடி மணம் வீசுமே.

92.

சிவந்த கண்களை உடைய மாதர் தெருவில் தெளிக்கும்
சிவந்த குங்குமத்தின் சேற்றை
குழலில் அவர்கள் சூடிய மலர்மாலை பூந்துகள்கள்
பரந்து மேவி உலர்த்திவிடும்.

93.

காளை ஊர்தியில் வள்ளல் தியாகராயப் பெருமானின் ஊர்வலம்
திருவாரூரின் பக்கங்களெல்லாம்தெளிந்த ஓசைத்திருப்பதிகங்கள்
கிளிகள் பாட நாகணவாய்ப் பறவைகள் கேட்கும் என்றால்
யார்தாம் மனம் உருகார் ?

94.

கடைவீதிகள்
ஒளிமிக்க அணிகள் பொருந்தியிருத்தலால்-
அசைவிலாத பேரொலிகளால்-
நெருங்கிய பலப்பல பொருள்வகைகள் கொண்டிருத்தலால்-
பலவகை விளக்குகள் கொண்ட மரக்கலம் உடைமையால்-
அலைகள் போல் எழும் அசைவினால் பேரிரைச்சலால்-
மலை காடு நாடு கியவற்றின் பண்டங்களை வளங்களுடன்
கொண்டுவரும் றுகளால்-
கடைவீதிகளும் கடலே!

95.

தெருக்களில்-
மறைகள் மட்டுமல்ல யானைகளும் எதிரெதிர் முழங்குவன
வண`ங்கப்படும் வானவர்களும்
தோரண மாலைகளும்
சூழ உள்ளன

96.

தலைமுதல் நிலம்வரை தொங்கும் சடைமுடியினர், சைவர், துறவியர்
வாழ்ந்த மனமுடைய முனிவர், வேதியர்
விரும்பிய இன்பத்துறையில் கலந்தவர்
சுற்றிலும்சூழ்ந்த பல்வேறிடங்களைக்கொண்ட தொல்நகரம் திருவாரூர்.

97.

நிலமகளின் அழகார்ந்த நீண்ட நெற்றித்திலகம் போல
சோழர் அரசு செய்யும் இந்நகரம்
மலர்மகளின் தாமரை போல் மலர்ந்து
அலகிலாச் சிறப்புடையது திருவாரூர்

98.

அப்படிப்பட்ட தொல்நகரின் அரசன்
செங்கதிரோன் சூரியனின் மரபில் தோன்றியவன்
நிலைபெற்ற புகழுடை அநபாயன் வழியில் முன்னவன்
மின்னும் மாமணிகளைப் பூண்ட மனுவேந்தனே வான்

99.

மண்ணில் வாழ்கின்ற அனைத்துயிர்க்கும்
கண்ணாகி உயிராகி காவல் செய்தனன்
இவ்வுலகோர் மட்டுமல்ல விண்ணுலகோரும் மகிழ
எண்ணிலா வேள்விகள் சிறப்பாய்ச் செய்தனன்

100.

வெற்றிபொருந்திய தன் ணைச்சக்கரம் குவலயம் சூழ
அவ்வாணையால் மன்னர் தரும் திறை கடைவாயிலில் சூழ
சினம் நீக்கிய செம்மையால்
தி மனு மன்னவன் பெற்ற மனுநீதி தனக்கென க்கிக்கொண்டான்

101.

மேலும் மேலும் வளர்கின்ற வேதவடிவினர்; புற்றை இடமாகக்கொண்டவர்
எங்கும் கியிருந்த வன்மீகநாதரின் பூசனைக்கு
சிவாகமம் விதித்தவாறே ராய்ந்து
நிபந்தங்களை ஏற்படுத்தினான்

102.

அறம் பொருள் இன்பம் அமைந்த அறவழியில் நின்றும்
பாவங்களை அழித்தும் உலகைக் காத்து வந்த நாளில்
சிறந்த நல்தவத்தால் தேவி திருமணி வயிற்றில்
இளஞ்சிங்கம் போன்ற மைந்தன் பிறந்தான் உலகம் போற்ற.

103.

முயன்று செய்த தவத்தால் பெற்ற நிகரிலா இளங்குமரன்
சிவத்தை அடையும் தெய்வக்கலைகள் பல கற்றதோடு
குதிரை, யானை, தேர்ப்படை தொழில்களும் பெற்று
பிறவி செய்த பேறோ எனும்படி பண்பு மிகக் கொண்டான்.

104.

அளவிலா கலைகள் யாவும் நிரம்பப் பெற்ற மகனை எண்ணி
அரும்பெறும் தந்தை உளம்மகிழ் காதல் கொள்ள
மென்மேலும் ந்ற்குணங்கள் இளவரசனாம் தகுதியடைய
ஒளிவளரும் கதிரவன்போல் விளங்கிடும் ஒருநாளில் —

105.

சந்திரன் போலும் வெண்கொற்றக் குடையுடை மன்னன் அரண்மனை நீங்கி
மற்ற அரசிளைஞர்கள் சூழ முகில்கள் தவழும் மாடவீதியில்
மணங்கமழ் மாலை சூடிய தோளில் கலவைச்சாந்து அணிந்த இளைஞன்
படைசூழ தேரில் ஏறிச்சென்றான் காட்சிபெற.

-திருஅருளால் தொடரும்.
—-
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்