புதுச்சேரியில் தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

முனைவர் மு.இளங்கோவன்புதுச்சேரி தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் தமிழ்க்காவல் என்னும் இணைய இதழ் தொடக்கவிழா புதுச்சேரியில் உள்ள புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் 15.06.2008 ஞாயிறு மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.இணைய உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் இவ்விதழ் வெளியீடும் தொடக்க விழாவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.கணிப்பொறி,இணையத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டு இணையம் பற்றியும்,தமிழ் வலைப்பதிவுகள் பற்றியும் விளக்க உள்ளனர்.

நிகழ்ச்சிக்குப் பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்கள் தலைமை தாங்குகிறார்.முனைவர் இரா.திருமுருகனார் தொடக்கவுரையாற்றவும்,முனைவர் தமிழப்பன் அவர்கள் நோக்கவுரையாற்றவும் உள்ளனர். தமிழ்க்காவல் இதழை வடிவமைத்த பொறிஞர் வே.முருகையன் வடிவமைப்பு விளக்கம் சொல்ல உள்ளார்.நா.நந்திவர்மன்,முனைவர் மு.இளங்கோவன் ஏ.வெங்கடேசு ஆகியோர் இணைய வளர்ச்சி பற்றி உரையாற்ற உள்ளனர்.தி.பா.சாந்தசீலன்,இரா.செம்பியன்,முவ.பரணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.நன்றியுரை இரா.இளமுருகன்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் உறுப்பினர்கள் அரங்கில் செயல் விளக்கம் வழித் தமிழ் இணையப் பயன்பாட்டை விளக்க உள்ளனர்.தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையினர் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.

பார்க்கவும் :

http://www.thamizhkkaaval.net/
தொடர்பிற்கு :
முனைவர் இரா.திருமுருகன்
செல்பேசி : + 91 9362664390
பேசி : +91 413 – 221191

முனைவர் மு.இளங்கோவன்
செல்பேசி : + 91 9442029053

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்