புதிய சாதிகள்

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

ஜோதிர்லதா கிரிஜா


”அம்மா, அம்மா!” என்று; ஒரு குரல் வாசற்புறத்திலிருந்து தயக்கமாகவும் தேய்ந்தும் கேட்டது. குரல் யாருக்கு

உரியது என்பதை ஊகிக்க முடியாதவாறு அது அடங்கி ஒலித்ததால், தாயாரம்மா சமையற்கட்டிலிருந்து

வெளிப்பட்டாள்.

கதவுக்கு அப்பால் நின்றிருந்த மனிதரைப் பார்த்ததும் அவள் முகம் சிறிது கோணல் கொண்டது. முகத்துப்

புன்சிரிப்பு உடனே அழிந்து அதில் ஒரு கடுமை குடி புகுந்தது.

“வணக்கமுங்க. சொகமா யிருக்கீங்களாம்மா ? பாத்து எம்புட்டு நாளாயிப் போச்சு!” – ஒரு காலத்தில் அவர்

அவளை ஒருமையில் விளித்ததுண்டு.

“வணக்கம், வணக்கம். கொஞ்சம் இருங்க. வந்துர்றேன். அடுப்பில பால் வெச்சிருக்குறேன்” என்று பொய்

சொல்லிவிட்டுத் தாயாரம்மா புன்னகை காட்டாமல் வீச்சு நடையில் சமையலறைக்குள் நுழைந்தாள்.

நமசிவாயத்துக்கு முகம் அறுந்து போயிற்று. தாயாரம்மா, மிகவும் துடியான குரலில், ‘வணக்கம், வணக்கம்’

என்று இரண்டு வணக்கங்களை மிகக் குறக்கமாக ஒருசேரச் சொன்னதில் காட்டிய ஏனோதானோத் தன்மை அவர்

மனத்தில் தைத்தது.

‘சின்னப்பலேர்ந்து பாத்துப் பேசிப் பளகின பொண்ணு. எப்படி மாறிப் போயிறுச்சு! எல்லாம் காசு செய்யிற

வேலை’

நமசிவாயத்துக்குக் கால்கள் கடுத்தன. கிட்டத்தட்ட று கல் தொலைவு நடந்தே வந்த களைப்பில் மூச்சு

வாங்கிற்று. கதவுக்கு இப்பால் இரண்டு சோ•ப்பக்கள் போடப்பட்டிருந்தன. எதிரே இரண்டு டா பாய்கள்

வீற்றிருந்தன. சுவரோரத்தில் நான்கு தேக்கு நாற்காலிகள் பளபளத்தன. ஏதாவதொன்றில் கால் மடக்கி

உட்கார்ந்தால் தேவலை போல் அவர் கால்கள் கெஞ்சின. நிலை வாசலில் உடம்பு முழுவதையும் சரித்துச் சாய்ந்து

நின்று கால்களைச் சிறிது தொய்யவிட்டு வலியைக் குறைத்துக்கொள்ள முயன்றார். சில்லென்று இரண்டு குவளைத்

தண்ணீர் குடித்தால்தான் மூச்சு வாங்கல் நிற்கும் என்று பட்டது.

னால், அவர் நிலை வாசலில் சாய்ந்து நின்றுகொண்டே இருக்க வேண்டிய தாயிற்று. உள்ளே போன தாயாரம்மா

திரும்புகிற வழியாய் இல்லை. அவள் தன்னை வேண்டுமென்றே உட்காரச் சொல்லாமல் உள்ளே போய்விட்டதில்

தென்பட்ட புறக்கணிப்பின் சிறுமையால் தாக்குண்டு அவர் திரும்பிப் போய்விடலாமா என்று கூட கணம் போல்

நினைத்தார். சின்ன வயதிலிருந்து தான் அறிந்த பெண் இன்று பெரிய இடத்தில் வாழ்க்கைப் பட்டுப் “பெரிய

சாதி”யில் இணைந்துவிட்ட ஒன்றாலேயே அன்னியமாகிப் போன விந்தை அவரை அயர்த்திற்று. அந்தக் கறுப்பில்

கூட ஒரு மினுமினுப்பு வந்துவிட்டது. மழையில் நனைந்து இறக்கைகளை அடித்துக்கொள்ளும் காக்கைக்குரிய

மினுமினுப்பு.

துரைசாமியின் மகள். அவர் பிள்ளைப்பேற்று அறையில் அவளைப் பார்த்திருப்பவர். பக்கத்துக் குடிசையில்

இருந்த போது அவளைத் தூக்கி ஒரு பெரியப்பனுக்குரிய வாஞ்சையுடன் கொஞ்சியவர். தாயாரம்மாவின் அப்பனை

விட அவர் பத்து வயது மூத்தவராதலின், பெரியப்பா என்கிற நினைப்பே அவருக்கு எப்போதும் வந்தது. அவளும்

அவரைப் பெரியப்பா என்றே கூப்பிட்டதும் உண்டு.

‘வாங்க, பெரியப்பா! சொகந்தானா நீங்களும் ? உக்காருங்க நாக்காலியில. இதோ வந்துர்றேன்’ ரொம்பக்

களைப்பாத் தெரியிறீங்களே ? என்ன சாப்பிட்றீங்க ?’ என்றெல்லாம் உபசரித்திருக்க வேண்டியவள், கண்களால்

கூடச் சிரிக்காமல், ’எதுக்கு வந்திருக்காரு இந்த மனுஷன் ?’ என்கிற கேள்விக்குறி காட்டிச் சடக்கென்று உள்ளே

போனதில் புரிபட்டுப் போன நிராகரிப்பு மேலும் மேலும் உறைக்க, அவரது சிறுமை உணர்ச்சி ழம் கொண்டு

அவரைத் துன்புறுத்தியது.

மனத்தை அழுத்திய துயரத்தில் கண்களில் நீர் துளிக்கும் போல் யிற்று. தம்மைத் தாக்கிய அவமானத்தில்

திருபிப் போய்விடும் எண்ணம் வந்தாலும், வந்த வேலையை முடித்துக் கொள்ள முடியாமல் திரும்பிப் போவது

பொருளற்றது என்பதாலும், தாயாரம்மா மேலும் தம்மிடம் எப்படித்தான் நடந்து கொள்ளுகிறாள் என்பதை

முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வலிலும் அவர் தமது சிறுமையை வெற்றிகொள்ள முயன்றார்.

“சேகர், சேகர்!” என்று தாயாரம்மா சமையற்கட்டில் இருந்தபடியே குரல் கொடுத்தாள். அந்தப் பெரிய

கூடத்தின் தெற்குப் புற அறையிலிருந்து புசுபுசுவென்று கன்னம் முழுக்கப் பரவிய மீசையுடன் ஒரு மாநிற இளைஞன்

வெளிப்பட்டான்.

கதவு நிலையில் சாய்ந்து நின்றிருந்த நமசிவாயத்தைப் பார்த்ததும், “யாருங்க ? என்ன வேணும் ?” என்றான்.

“உங்கம்மாவைப் பாக்க வந்தேம்ப்பா. அவங்க என்னையப் பாத்தாச்சு.

இருக்கச் சொல்லிட்டு உள்ளே போயிருக்காங்க,” என்று அவர் பதில் சொன்னார்.

அவனும் அவரை உட்காரப் பணிக்காமல் உள்ளே போனான். தாயாரம்மாவும் அவனுமாய்க் குசுகுசுவென்று என்னமோ

பேசிக்கொண்டார்கள்.

சற்றுப் பொறுத்து வெளியே வந்தவன், “இந்தாங்க, இதைக் குடிங்க,” என்று ஒரு தம்ப்ளரை அவரிடம்

நீட்டினான். எலுமிச்சைச்சாறு. ஏதோ எலுமிச்சைச் சாற்றை வாங்கிக் குடிப்பதற்கென்றே மெனக்கெட்டுக்

கிளம்பி வந்திருக்கிறவன் என்று தம்மைப் பற்றித் தாயாரம்மா நினைத்துவிட்டது போல் அவருள் ஓர் அவமானம்

திரும்பவும் விளைந்தது. அதை மறுதலிக்கவும் இயலாதவாறு நீர் வேட்கை தொண்டையை வறட்டியது. வாங்கி

மடக் மடக்கென்று குடித்தார். அவருக்குச் சில பிராமணக் குடும்பங்களுடன் பழக்கம் உண்டு. குடிக்க எதைக்

கொடுத்தாலும், ‘ஒசத்திச் சாப்பிடுங்கோ பெரியவரே. எச்சலாக்க வேண்டாம்’ என்பார்கள். ‘ நல்லது

தானேம்மா ? எச்சில் பண்ணமாட்டேம்மா’ என்றவாறு தூக்கிக் குடிப்பார்.

நின்றுகொண்டே குடித்த அவரைப் பார்த்துக்கொண்டே அவன் பக்கத்தில் நின்றான். ‘உட்கார்ந்து குடியுங்கள்’ என்று

கூடச் சொல்லவில்லை. பார்த்தால் நிறைய படித்தவன் மாதிரி தெரிந்தான். ‘என்ன பிள்ளைகள்!’ என்று மனம்

கசந்ததில், எலுமிச்சைச்சாறு கூடக் கொஞ்சம் கசந்தது.

குடித்த பிறகு தம்ப்ளரை அவர் அவனிடம் திருப்பிக் கொடுத்தார். அதை வாங்க்ினான். பிறகு அதைச்

சமையற்கட்டுக்கு எடுத்துக்கொண்டு போனான்.

“அடுக்களை மோரியில் போடாதடா. போயி வெளி முத்தத்தில வேலைக்கரி கிட்ட போடு. தூக்கித்தானே

குடிச்சாரு ?’ என்று தாயாரம்மா கேட்டது தெளிவாய் அவர் செவிகளில் விழுந்தது.

தாயாரம்மாவின் கணவர் பெரியநாயகம் பெரிய பதவியில் இருப்பவர். பத்து வகுப்புகள் படித்துள்ள தம்

பேரனுக்கு ஏதேனும் வேலை பெற்றுத் தர

முடியுமா என்று கேட்பதற்காக நமசிவாயம் வந்திருந்தார். படித்து மூன்று ண்டுகள் கிவிட்டன. வீட்டில் கவனிப்பு

இல்லாமையால், அவன் சுமாரான மதிப்பெண்கள் பெற்றுத்தான் தேர்ச்சி பெற்றிருந்தான். தொண்ணூறு,

தொண்ணூற்றைந்து என்றெல்லாம் மதிப்பெண்கள் வாங்குகிறவர்களோடு போட்டி போட்டு அவனால் இந்தப் பிறவியில்

கடைத்தேற முடியாது என்பதை அவர் விரைவிலேயே கண்டு கொண்டார்.

மூத்த பேரன் படிக்க மறுத்துவிட்டான். கட்டட வேலை செய்து அவ்வப்போது சம்பாதிக்கிறான். முத்து கடைசி

பேரன். அவனை மட்டும் அவர் படிக்க வைத்தார். படித்து முடித்ததும் பெரிய வாழ்க்கை அமைந்துவிடும் என்கிற

பிரமையிலிருந்து அவர் விடுபட்டு எத்தனையோ நாள்களாகிவிட்டன. பக்கத்து வீட்டுத் தாயாரம்மா ஒரு

கிறிஸ்துவரைக் காதலித்துத் தன் தகப்பனின் விருப்பத்துக்கு எதிராக அவனை மணந்துகொண்டிருந்தாள். அவள்

அப்பன் அவளைத் திட்டித் தீர்த்த போது, தாம் மட்டும் ‘பெரியப்ப’னாய், அழகாய்த் தாயாரம்மாவுக்கு

வக்காலத்து வாங்கிப் பேசியது இப்போது ஞாபகத்துக்கு வந்தது. தாயாரம்மாவுக்கு அதெல்லாம் ஞாபகத்தில்

இருந்தால் இப்படித் தம்மை நிற்க வைத்துவிட்டு உள்ளே போயிருப்பாளா என்கிற கேள்வி நெஞ்சில் குத்தியது.

அழுதுகொண்டு தம்மிடம் முறையிட்ட தாயாரம்மாவைத் தேற்றியதோடு அவளுக்கு எதிரிலேயே அவள் அப்பனைக்

கோபித்து அவளுக்குத் தாம் பரிந்து பேசியவை யெல்லாம் நினைவில் நெருட அவர் பழைய நினைவுகளில்

பிரமை தட்டி நின்று கொண்டிருந்தார்.

‘கடவுளுக்கு விருப்பமானவர்கள்’ என்கிற பொருளில் காந்தியால் அரிசன் என்று பெயர் சூட்டப்பட்ட

பெருமைக்குரிய குடும்பத்துப் பெண்ணான தாயாரம்மா தானும் கிறித்துவ மதத்தைத் தழுவியதும் அவருக்குத்

தெரியும். அதன் பிறகே அவள் மருமகளாக அந்தக் குடும்பத்துக்குள் புக முடிந்தது என்னும் கதையும் அவருக்குத்

தெரியும். தாயாரம்மாவுக்குத் தன் அப்பாமீது கொள்ளை அன்பு. அதனால் அவரது சியுடனேயேய தன் எண்ணத்தை

சாதித்துக்கொள்ள அவள் பெரிதும் அவாவினாள். அதற்குத்தான் அவள் நமசிவாயத்தின் உதவியை அவள் காதல்

வயப்பட்டிருந்த நாளில் அடிக்கடி நாடினாள். தன் அப்பனின் மீது நமசிவாயம் கொண்டிருந்த ளுகையை அவள்

தனக்குச் சாதகப்படுத்திக்கொண்டாள். முழு விருப்பம் இல்லாவிடினும், கடைசியில் நமசிவாயத்தின்

அறிவுரைகளால் அவள் அப்பன் கலியாணத்துக்கு மட்டும் வந்து சி வழங்கிப் போகுமளவுக்கு இறங்கி வந்தார்.

பணமும் பவிசும் வந்துவிட்டால் மனிதர்களுக்குப் பழைய கதை யெல்லாம் மறந்தா போய்விடும் என்று எண்ணி அவர்

மாய்ந்து போனார்.

எலுமிச்சைச் சாறு உள்ளே இறங்கியதும் பெற்ற தெம்பில் நேராக நிற்கலானார். தாம் ஒரு காலத்தில்

தெம்பாக உடலுழைப்புச் செய்துகொண்டிருந்த போது இதே ராஜம்மாவுக்கு எத்தனை நாள்களுக்குத் தாம் சோறு

போட்டதுண்டு என்பது ஞாபகத்துக்கு வரவே செய்தது.

ஐந்தாறு ண்டுகளுக்கு முன்னால் கூட ஒரு தரம் அவர் இந்த வீட்டுக்கு வந்ததுண்டு. அப்போதெல்லாம் இந்த அளவுக்கு

அவமானம் விளைந்தது கிடையாது. திருமணம் ன பிறகு சில தடவைகள் வந்திருக்கிறார். அப்போதெல்லாம்

அன்பாகவே பேசியிருக்கிறாள். சிறுகச் சிறுக அவள் நடத்தையில் மாறுதல் விளைந்ததை அவர்

பாராட்டவில்லை. இரண்டு ண்டுகளுக்கு முன் ஒரு தடவை வந்த போது, ‘அவருக்குச் சாப்பாடு போட்டு அனுப்பு’ என்று

அவள் சொன்னது ஒரு மாதிரியாக அவருக்குப் பட்டாலும், ‘பெரிய குடும்பத்துப் பொண்ணாயிறுச்சு. வந்து

பரிமாற முடியுமா முன்ன மாதிரி ? அதுக்கு எத்தனையோ சோலி இருக்கும்’ என்று சமாதானமுற்றார். னால் இன்று

தம்மை அவள் நடத்திய தினுசிலிருந்து அவளது புறக்கணிப்பும் விரும்பாமையும் தெற்றெனத் தெரிந்து போயின.

அவர்களுக்குத் திருமணம் ன புதிதில், ‘பெரியவரே’ என்று விளித்துக் கொண்டிருந்த அவள் கணவர்

பெரியநாயகம் கூட நாளாவட்டத்தில் எப்படியும் விளிக்காமல் மொட்டையாகப் பேசத் தொடங்கியதையும்

இப்போது நினைத்துப் பார்த்தார்.

பையன் அவரைக் கடந்து செல்ல முயன்றபோது, “அப்பா வர்றதுக்கு நாளியாகுமா ?” என்றார்.

அவன் அவருக்குப் பதில் சொல்லாமல், “அம்மா! இவரை இருக்கச் சொல்லட்டா, இல்லாட்டி போகச்

சொல்லட்டா ?” என்று கூவினான்.

“விசயம் என்னன்னு கேளேன் நீதான்.”

“என்ன விசயம்னு கேக்கச் சொல்றாக அம்மா.”

“எம் பேரனுக்கு ஒரு வேலை வேணும். பத்தாப்பு வரையில் படிச்சிருக்குறான். சராசரிக்கு அம்பது மார்க்குதான்

வாங்கி யிருக்குறான். அப்பா கம்பெனியில ஏதாச்சும் வேலை கிடைக்குமான்னு கேக்கத்தான் வந்தேன். உங்கப்பா

இல்லியா தம்பி ?”

“அப்பா வெளியூர் பொயிருக்காரு. வேலை யெல்லாம் கிடைக்கிறது அம்புட்டு சுலபமில்லே. மார்க்கு பத்தாது.

டைப்பிங்காவது கத்துக்கச் சொல்லுங்க.”

“அதுக்கெல்லாம் காசுக்கு நான் எங்கிட்டுப் போவேந்தம்பி ?”

பையன் பெரிதாய்ச் சிரித்தான். “அதுக்கு என்னங்க செய்யிறது ? நாளைக்கு நூறு நூறாக் கொணாந்து

குடுப்பானில்ல உங்க பேரன் ?”

அந்தச் சிரிப்பு அவரை அறைந்தது.

“அம்மா கிட்ட சொல்லுப்பா விசயத்தை. கேட்டாங்களே ?”

உள்ளே போய்விட்டு அவன் உடனே திரும்பினான்.

“எங்க சொந்தக்காரங்களுக்கே வேலை போட்டுத் தரமுடியல்லையாம் எங்கப்பாவால. அதனால எங்கப்பாவைத்

தொந்தரவு பண்ண வர வேணாம்னு சொல்லச் சொன்னாங்க.”

“ரொம்ப சரிப்பா. இனிமேப்பட்டு வரமாட்டேன்,” என்றபடி அவர் படி இறங்கினார். வயிற்றுக்குள் போய்

அவரைக் குளுமைப்படுத்திய எலுமிச்சைச்சாறு இப்போது வயிற்றை என்னவோ செய்ய, வெறுப்புடன் வாய்க்குள் விரல்

செருகி அந்த வீட்டு வாசலிலேயே கட்டாய வாந்தி எடுத்த பின் அருகில் இருந்த தெருக்குழாயில் கை கழுவி,

வாய் கொப்பளித்து நடந்து போனார்.

“அண்ணா” பொங்கல் மலர், 1985.

jothigirija@hotmail.com

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா