பிரியும் பாதையும் பிரியா மனமும்

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

நா.கண்ணன்


பரந்து கிடப்பதால்
பல வழிகள்.
பாதைகள் பிரிவது
இயற்கை.
முடிவற்றவைப்
போல் தோன்றும்
பாதைகளும்
முடிகின்றன.
சிலவை
அல்பமாய்
சிலவை
நீண்ட நெடிய
பயணத்திற்குப் பின்.
சில பாதைகள்
விட்ட இடத்திலிருந்தே
தொடங்குகின்றன.
அன்று
செதுக்கிய
மரச் சிற்பம்
காற்று
மழை
கதிர்
பட்டு
கரைந்து
போயிருந்தது.
என்
உலகமென்றில்லை
உன்
உலகிலும்
கரைந்து போன
கனவுகளுடன்
மல்லுக்கட்டக்கூடாது.
விட்ட இடத்திலே
எதுவுமே இருப்பதில்லை
நகர்ந்து கொண்டிருக்கும்
உலகில்
உலகிற்கு
நன்றியுடன்
வந்தனம் சொல்லிப்
பழகவேண்டும்.
மேலும் இழப்பதற்கு
இல்லை என்பது
சுதந்திரம் என்றால்
நீ கேட்கவா போகிறாய்.
அன்று
தெளிந்த
நாளாக
பரந்து கிடந்தது.
எல்லாம்
எல்லோரும்
பார்வைப் பரப்பில்
சம ஆகுரிதியுடன்.
விடை பெறுவது
கடினம்தான்.
விட்ட குறைகள்
முடிக்காத வேலைகள்
நின்ற துயரம்
கடைசியாய்
குழந்தைக்கு
பால் கரைத்து விட்டுப்
போயிருக்கலாம்தான்.
ஆனாலும்
ஆற்றொழுக்கின்
அமைதிக்கு
பங்கமில்லாமல்
போபவை
போகட்டும்
என்று விட்டு
விலகி நிற்கப்
பழக…….

nkannan@freenet.de

Series Navigation

நா.கண்ணன்

நா.கண்ணன்