பிக்பாக்கெட்
பொன்னி வளவன்

பெண்ணே!
பல்லவன் பேருந்தில்
கருப்பு மை தீட்டிய
உன்
கயல் விழிகள் பேசிய
காதல் மொழிகளில்
கனநேரம்
மயங்கி நின்ற நான்…
பயணச்சீட்டு
எடுப்பதற்காக
பாக்கெட்டில்
கை வைத்தவுடன்
பதறிப்போனேன்
பணம்
அங்கு இல்லாததால் ?!
***
Ravichandran_Somu@yahoo.com