பாலம்

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

ஸ்ரீபன்


ஆற்றைக் கடக்கையில்
படகோட்டியின் கை வலித்தது
காத்திருப்புக்கள் அதிகமாயின

ஆற்றுக்கு நடுவே பாலம்
காத்திருந்தவரின் பேச்சு
வலுப் பெற்றது

ஊர் கூடியது முயற்சி பலித்தது
இப்போது ஆற்றுக்கு நடுவே
பாலம்

நாட்கள் கடந்தன
பாலம் எம்முடையது
உரிமை கோரியது ஒரு கூட்டம்
உரிமை இழந்தது ஒரு கூட்டம்
பாலம் பாதுகாப்பு வலயத்துக்குள் வந்தது
பாவனை இல்லாமல் போனது

காற்று புயல்
மழை வெள்ளம்
பாலம் விழுந்தது
இருந்த இடம் தெரியாமல் போனது

ஆற்றைக் கடக்கையில்
படகோட்டியின் கை வலித்தது
காத்திருப்புக்கள் அதிகமாயின
;இப்போது
பாலம் வேண்டுமென்று யாரும் கேட்கவில்லை

காத்திருப்புக்கள் பழகிப்போனது

Series Navigation

ஸ்ரீபன்

ஸ்ரீபன்

பாலம்

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

எஸ்ஸார்சி


ஆமாம் அந்தப்பாலம் தான் இடிந்துவிட்டிருக்கிறது. செங்குன்றத்தில் ஊரை வலம் வந்து ஒடுவது மணிமுத்தாறு. செங்குன்ற நகரை இருகூறு ஆக்கிய இந்த ஆற்றின் மீது பிரிட்டி ?காரன் என்றோ கட்டிய பாலம். இன்று இடிந்து போய்விட்ட இந்த செங்குன்றத்து முதிய பாலத்திற்கும் அவனுக்கும் என்னவோ தொடர்பு இருப்பதை விளக்காமாய் சொல்லாவிட்டாலும் சுருக்கமாகவேனும் சொல்லிவிட வேண்டியதுதான். மணிமுத்தாற்றுப்பாலம் தானாகவே இடிந்து போகவேண்டும். பண்ணுகின்ற வியாபாரத்துக்கும் தொழிலுக்கும் பங்கம் ஏதுமே இல்லாது அதே இடத்தில் தரைப் பாலம் கட்டி விட்டால் சரியே என்கிறபடி இந்தக்கரை அந்தக்கரை கட்டிடவாசிகள் பிரார்தித்தது வீண் போகவில்லை. இடிந்த போன அதே இடத்தில் தரைப்பாலம் வந்தும்விட்டது.

இன்று நடந்ததுபோல்தான் இருக்கிறது இதே ஆற்றுப்பாலம் மீதுதான். விளையாட்டாய்ஆண்டுகள் பதினைந்துக்குமேல் ஒடிவிட்டது. அன்று நடுஇரவு. பதினோரு மணி. சாலையில் யாரும் சென்று கொண்டிருக்கவில்லை அவன் தன் பணி முடித்து,தந்தி அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தான். பாலம் தாண்டியே அவன் வசிப்பிடம்.

அப்பா வாங்கிக்கொடுத்து அரை செயின் கவர் போர்த்திக்கொண்டஅதே சைக்கிளில் தான் அன்றும் அவன் ?ீராட வேண்டியிருந்தது. மணிமுத்தாற்றுப்பாலத்தின் இரண்டாவது கண் (கமான்) அருகே சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். ஒரு சீப்பு மஞ்சள் வாழைப்பழம். பழமலைஅப்பன் திருக்கோவில் சாலை முக்கில் வாங்கிக் கையில் வைத்துக்கொண்டான். மனைவி சொல்லினுப்பியது.

மறந்து போகமுடியுமா என்ன.

பாலத்தின் இடதுபக்க ஒரமாய் நான்கு பேருக்கு இப்படி அப்படி நின்றுகொண்டிருந்தார்கள். ஏனோ டக் என்று அவன் சைக்கிளின் ?ாண்டில் பாரைப்பிடித்து நிறுத்தினார்கள்.

?நான் ராமசந்திரன், தந்தி ஆபிசிலே வேல பாக்குறென். என் வண்டியை ஏன் நிறுத்துறீங்க ஏன் என்ன ஆச்சி ஏன் நீங்க எல்லாம் யாரு ?

பெயரைச்சொல்லாமல் இருந்திருக்கலாமோ என்னவோ. பெயர் சொன்னமாத்திரத்தில் ஆளுக்கு ஒன்றாய் அவன் கன்னத்தில் பட் பட்டென்று அறை தந்தனர். அதிர்ந்து போய் நின்றான் அவன். கையில் வைத்திருந்த வாழைப்பழ சீப்பு உருக்குலைந்து போயிற்று. முதுகிலும் கை கால்களிலும்

அடித்து உதைத்து கீழே தள்ளினர். கீழே விழுந்த அவன் மீது சைக்கிளை நெட்டித்தள்ளிவிட்டு அனைவரும் நொடியில் கலைந்து போனார்கள்.

பாலத்தின் ஒரமாய் சைக்கிளின் கீழ் கிடந்த அவனைப்பார்த்த பாதசாரிகள் சிலர்,

?குடிக்கர கழுத குடிச்சுட்டு வூட்டுல மொடங்க்கிலாம்ல ? சொல்லிப்போயினர்.

மேல்சட்டை கிழிந்து தொங்கிகொண்டிருந்தது. வாழைப்பழம் சிதறி மூலைக்கொன்றாய் கொழ கொழ என அசிங்கமாய்க்கிடந்தது. அவனை முகத்தில் அடித்தவர்கலின் கை நகங்களின் கீரல் பட்டு கன்னத்தில் குருதி கசிந்து கொண்டிருந்தது.

அவன் மெல்ல எழுந்தான். சைக்கிளைத்திருப்பி வந்தவழியே ந டக்க ஆரம்பித்தான்.

அடி எடுத்து வைக்கவே முடியாமல் கால் வலி எடுத்தது. தலையிலும் நல்ல வலி.

மேல்சட்டை கிழிந்து போனதை கழற்றி சைக்கிள் காரியரில் மடித்துவைத்துக்கொண்டான்.

கடைத்தெரு தாண்டித்தான் காவல் நிலயம். போவதா வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்தான். நடந்ததைச்சொல்லிவிட்டுத்தான் செல்ல வேண்டும் என தீர்மானித்து நடக்க ஆரம்பித்தான். அவர்கள் ஏன் நம்மை வழிமறித்து இப்படி அடிக்கவேண்டும் . மூளையைக்குழப்பிக்கொண்டான். ஒன்றுமே விடை கிடைக்கவில்லை. அவனுக்குத்தெரிந்தவரை அவன் தவறு ஏதும் யாருக்கு ம் செய்து விடவில்லை. பின் ஏன் இந்த அசிங்கம். அவமானம். காவல் நிலையம் முன்பாக சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.

யாரையும் காணோம். மணி பன்னிரெண்டை தொட்டுக்கொண்டிருந்தது. கதவும் சாத்தப்பட்டுக்கிடந்தது. அவன் லேசாக கதவை தள்ளிப்பார்த்தான். கதவு நகர்ந்து திறந்துகொண்டது. எட்டிப்பார்த்தான், உள்ளே பனியன் கைலி அணிந்த காவலர்

வெகு ே ?ாராய் உறங்கிகொண்டிருந்தார்.

?சார் சார் ? என்று குரல் கொடுத்தான்.

புரண்டு படுத்துக்கொண்ட அவர் ? எதுவா இருந்தாலும் காலைல பேசிக்குவோம் ?

பதில் சொன்னார். நின்று நின்று பார்த்தான், உடம்பு வலி தாங்கவேமுடியாமல் இருந்தது. காவலர் முக்கால் மப்பில் இருந்ததை அவன் அனுமானித்தான்.

காவல் நிலைய டயல் இல்லாத் தொலைபேசியை கையில் எடுத்துக்கொண்டான். அவன் தன்னுடைய தந்தி அதிகாரிக்கு வி ?யத்தைச்சொல்லி விடுவது நல்லது என்று முயன்று பார்த்தான். ?எழுபத்தொன்பது குடுங்க ? கட்டளைதந்தான் . அவன் அதிகாரி வீட்டு எண்அது. போனை எடுத்த அதிகாரி அவன் பாலக்கரை சமீபம் யாரோ சிலரால் வழி மறித்து அடிக்கப்பட்டான் என்பது விளங்கிகொண்டவுடன் ஒன்றுமே சம்பந்தம் இல்லாதவராய்

? யாரு வேணும் உங்களுக்கு இது தோலு மண்டி பாயி வூடு. நான் பெரிய பாயிதான் பேசுறேன் ? சட்டமாய் பொய் சொன்னார்.

?சார் சார் நான் ராமசந்திரன் சார் உங்களுக்கும் கீழ தந்தி ஆபிசுல பத்து வரு ?மா வேல பாக்குற கிளார்க்கு சார் ?

சொல்லிப்பார்த்தான் , ஆனாலும் பேசும்போதே போனை வைத்துவிட்டு ஒதுங்கிகொண்டார். சாமார்த்தியமான தந்தி அதிகாரிதான். காரிய சாமர்த்தியம்.

பலான சாதிக்காரர்களுக்கு ரத்ததிலேயே இது கலந்து விட்டிருக்கிறது. பகுத் றிவை

கொஞ்சம் ஆப் செய்து விட்டுத்தான் காரியம் பார்க்கவேண்டியிருக்கிறது.

அரைத்தூக்கத்தில் இருந்த காவலர் எழுந்து.

?சோறுதான் திங்குறயா இல்ல பீய துண்றயா ? சொல்லி டெலிபோன் ரிசிவரை பிடுங்கிக்கொண்டு

?காலையில வாப்பா போ நல்ல புள்ள இல்ல போ போ ?

மீண்டும் படுத்து உறங்க ஆரம்பித்தார். முக்கால் மப்பு காவலருக்கு முழுதாகி இருந்தது. அவன் சைக்கிளை உருட்டிக்கொண்டு கடைத்தெருவில் நொண்டி நொண்டி நடந்து கொண்டிருந்தான்.

அதே பாலம். சமுத்திரகுப்பம் செல்லும் சாலையில் பெரிய பள்ளிக்கூடம் அருகே சிறிது நேரம் நின்று இளைப்பாறினான். தனக்குயாரெல்லாம் எதிரிகள் என்று மனம் கணக்குப்பார்த்துக்கொண்டே இருந்தது. எப்படியெல்லாம் கணக்குப்போட்டாலும் விடை வரவேஇல்லை. பள்ளிக்கூடத்துக்கு எதிரில் ரெட்டியார் பெட்ரோல் பங்க் முன்பாக லாரியை பின்பக்கமாய் ச க்கரம் கழற்றி இருவர் ரிப்பேர் செய்து கொண்டிருந்தார்கள்.

?சைக்கிளை ஏறி வுட்டு கிட்டுப்போகவேண்டியத்தானெ ?

லாரி ரிப்பேர் செய்பவர்களில் ஒருவன் குரல் கொடுத்தான். அவன் வேலையை மட்டும் பார்க்கலாம். அதிகப்பிரசங்கிகள் ?னத்தொகை இங்கு எப்போதும் அதிகம்

பதில் ஏதும் சொல்லாமல் அவன் நடந்துகொண்டிருந்தான்.

?ஆளு மப்புல போவுது பாத்தா தெரியில ?

இன்னொருவன் அவனுக்கு பதில் சொன்னான். ஒரு வம்பும் வேண்டாம் நேரம் சரியில்லை என்று சைக்கிளை உருட்டினான். சாலை ஒரம் நின்றிருந்த இரவு டூட்டி நாய்கள் அவனைப்பார்த்து அச்சத்தில் ஒதுங்கிக்கொண்டன.

மலயாளப்படம் மட்டுமே செந்தமிழர்க்கு காண்பிக்கும் மகே ? சினிமாத்தியேட்டரில் இரண்டாவது காட்சி முடிந்து மக்கள் அரைத்தூக்கத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். சைக்கிள் ஏறி விடமுடியாதபடிக்குத்தான் உடல் நிலை இருந்தது. மனநிலை அதற்கும் மேலாக மோசமாகி இருந்ததை உணர்ந்தான். வீட்டின் காலிங் பெல்லை அடித்தான்.

மனைவி இரும்பு கேட்டினை தி றந்து லைட்டை போட்டு முடித்தாள்.

?ஏன் என்ன இதெல்லாம் ? பதறிப்போனாள்.

சத்தம் போடாதே ?

?என்ன ஆச்சிங்க ? அவள் கற்பனையில் கூட தன் கணவன் இந்த அலங்கோலத்தில் வருவான் என்று எதிர் பார்த்திருக்கமாட்டாள்.

யாரோ வழி மறிச்சி அடிச்சிட்டானுவ ?

?ஏன் ?

?எனக்கும் ஏன்னு தெரியில்ல ?

?ரொம்ப அடியா ?

தலையிலிருந்து கால்வரைத்தொட்டுப்பார்த்தாள். வெந்நீர் வைத்து உடல் முழுவதும் ஒத்தடம் தந்தாள். அவள் கண்களிலிருந்து நீர் அருவியாகி வந்துகொண்டே இருந்தது. எதுவும் பேசாமல் இருந்தாள்.

அவன் தங்கை வாங்கிக்கொடுத்த அந்த ஒரே ஒரு சட்டைதான் இன்று கிழிந்து போய் வீடு வந்திருக்கிறது. அவன், தங்கைக்கு வாழ்க்கை அமைத்துக்கொடுத்த அவ லட்சணத்திற்கு இந்த அடிக்கூட சற்று குறைச்சல்தான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

?ஒண்ணும் யோசனை வேண்டாம் படுங்க ? என்றாள்.

மறுநாள் காலை நண்பர்கள் செய்தி அறிந்து விசாரிக்க அவன் வீடு வந்துபோனார்கள். பார்க்க வந்த தருமங்குடி கிராமத்து மூத்த சகோதரன் வீட்டின் நடுவாய் அமர்ந்து கொண்டு ஊர் உலகத்தை திட்டி தீர்த்து கொண்டிருந்தார். அவனோ ஒரு ஆட்டோ வைத்துக்கொண்டு காவல் நிலையம் நோக்கிப்பயணமானான். காவல் நிலையம் களைக்கட்டி இருந்தது.

?வாங்க எல்லாம் கேள்வி பட்டோம். அரசாங்க டாக்டருக்கு சீட்டு எ ழுதி தர்ரோம். போயி பாத்துட்டு வந்துடுங்க ? காவல் நிலைய அதிகாரி சட்டெனக்கட்டளை தந்தார். சொன்னபடியே அரசாங்க மருத்துவமனைக்குச்சென்று ஒரு ஊசி போட்டுக்கொண்டு வெள்ளை மாத்திரைகள் சிலது வாங்கிக்கொண்டு காவல் நிலையம் மீண்டான்.

?ஒண்ணும் பிரச்சினை இல்லயே ?

ஒன்றும் பதில் சொல்லாமல் இருந்தான். உதவி ஆய்வாளர் என்று அவரின் தலைக்கு மேலாக எழுதித்தொங்கிக்கொண்டிருந்தது.

?உக்காருங்க ?

அவன் உட்கார்ந்து கொண்டான்.அவனும் அவரும் மட்டுமே அந்த அறையில் இருந்தார்கள்.தினமும் ஒரு நல்லது செய் என்று என்று அச்சடித்த காகிதம் அழகாக மேசையில் கண்ணாடிக்குக்கீழாய் சயனித்து இருந்தது.

ஆபிசுலே என்ன பிரச்சின

ஒண்ணும் இல்லங்களே

போலீசிலே எதுயும் மறைக்கக்கூடாது

ஒண்னும் மறைக்கலிங்க

உங்க ஆபிசுல பொம்பளைங்க வேல பாக்குறாங்கதானே

ஆமாம் சார்

இப்ப சொல்லுங்க என்ன நடந்துச்சி

ரெண்டு நாளைக்கி மின்னாடி எங்க ஆபிசுல டுயூட்டி டயத்துல ஒருத்தரு லேடிசு பக்கத்துல உக்காந்து இருக்கறப்பவே காலு மேல காலு போட்டுகிட்டு இருந்தாரு. பாக்க அசிங்கமாவே தெரிஞ்சது.

சரிதான். இப்பதானே விசயம் வருது.

இது சரியில்ல ஆக நல்லா உக்காருங்கன்னு சொன்னேன்

அப்புறம் என்னா ஆச்சி மேல சொல்லுங்க

அவ்வளவு தான் வேற ஒண்ணும் இல்லயே

என்னா ஒண்ணும் இல்ல. நீரு ஒரு தலைவரு ஆமானா

ஆமாம்சார். எங்க ஆபிசுலே மொத்தமே முப்பது பேரு வேல பாக்குறம். இதுல ரெண்டு சங்கம்.

உட்ட கதய சொல்லுங்க. உங்க சங்கத்து பொம்பள டூட்டில இருக்ககுள்ளதான அப்பிடி நடந்துச்சி

ஆமாம் சார்.

காலு மேல போட்டுகிட்டு அண்ணைக்கு டூட்டிபாத்த அவரும் ஒரு தலைவ்ருதானே

ஆமாம்சார்

நீரு இது வி ?யம் அவரு கிட்ட தனியா சொல்லி இருக்குலாம்ல

எப்பிடி சாரு. எது எதுக்கு நேரம் காலம் பாக்குறதுன்னு இருக்குல்ல

தடிப்பாதான் பேசுறீரு.

ஒண்ணும் பேசுலைங்களே

என்னா நொள்ளங்களே. நேத்து ராத்திரி உம்ம டூட்டி எப்பமுடிஞ்து

டூட்டி பன்னெண்டு மனிக்குத்தான் முடியும். ஆனா

ஆனா ஆவன்னா. நீரு பாலத்துல பதினொரு மணிக்கு அடி பட்டிருக்கிறதா சொல்லுறீரு

ஆமாம் சார். பன்னெண்டு மணிக்கு வரவேண்டியவரு கொஞ்சம் மின்னாடி பதினொரு மணிக்கு வந்துடுவாரு. அகால நேரங்கறதனாலே. எங்க ஆபிசுலே காலம் காலமா இப்பிடி நடக்கற விசயம்தான். கொஞ்சம் மின்னால போய்விடுவோம் அவ்வளவுதான் ஒண்ணும் புதுசு இல்லயே சாரு

இந்தக்கத இங்க வேணாம்.நீரு போனது தப்பு.

அதுக்கு எங்க ஆபிசரு இருக்காரு. கேப்பாரு. அவருக்கும் தெரிஞ்ச சேதிதானே

இப்ப சந்திக்கு வந்துபோச்சில்ல. பேசாம போ ஒய். ஒண்ணும் கம்ப்ளெயின்ட் வேணாம் தெரிதா.

நடந்ததை ரிகார்டு பண்ணிடுமில்ல சாரு

பண்ணுலாம். ஆனா என்னா பிரயோசனம்.நீரு டூட்டி முடியறதுக்கு மின்னடியே உட்டுக்கு போனது பிரச்சினை ஆகி இப்ப தண்டனை வந்தா என்னா செய்வீரு. வர்ர ப்ரொமோ ?ன் கூடல்ல உமக்கு தள்ளி பூடும். இந்த சேதியே வெளில தெரிஞ்சா அவமானம் வேறல்ல. நல்லா யோசனை பண்ணிகணும். பின்னால வருத்தப்பட்டு என்னா இருக்கு.

அது என் ஆபிசு வி ?யம் நானே பாத்துகுவேன். நடந்து போன அசம்பாவிதத்துக்குகு நீங்க கம்ப்ளெயின்ட் வாங்கிகணும்ல

உங்க ஆபிசுல வேலபாத்த தம் புருசன் செத்துபோனதால கருணை அடிப்படைல வேல கிடைச்சி வேலயும்செய்யுற ஒரு பொண்ணுகிட்ட நீரு எதுவும் விகல்பமா பேசுல

சார் என்ன ஏதேதோ முரணா பேசிக்கிட்டு போறிங்க.

நீ நல்லா யோசனை பண்ணிகணும். பின்னால முழிக்கப்போறீரு

இவ்வளவு நீங்க பேச வேண்டாம் சாரு. முதல்ல எப் ஐ ஆர் போட்டுக்குடுங்க எனக்கு.

அத வச்சிகிட்டு எந்த நாக்க வழிக்கபோறீரு

சார் இதுல ஏதோ சதி இருக்குது.

?இருக்குதுதான் ? அழுத்திச்சொன்னார்

என்னசார்

?உன்னால என்னா செய்யமுடியும். செஞ்சிகு. நம்பள யோசன கேட்டுட்டுதான் உனக்கு இதுவும் பாலத்துல நடந்துச்சி. எதையும் கேட்டு கிட்டு செஞ்சா வழி சொல்லுவோம். அதுல ஒண்ணும் கொறஞ்சிட மாட்டாறு. பலானவங்க வேண்டியவங்க என்னை கேட்டாங்க சொன்னம். அவ்வளவுதான். இந்தாரும் எப் ஐ ஆரு. நீம்புரும் ஆசப்படுறீரு. அத பிரேம் போட்டு பத்திரமா வச்சிகும். வெத்து படிப்பு அந்த இதுக்குகூட ஆவாது தெரிதா. ஆனாலும் இந்த அதப்பு யாருக்கும் கூடாதுப்பா. ?

ஏதோ சாதித்து விட்டதாய் எண்ணியஅவன் அந்த வெற்றுக்காகிதத்தோடு வீட்டுக்கு நடந்தான். இதுபோல் எத்தனையோ காகிதங்கள் கோத்து கோத்து வத்திருக்கிறானாம். பிராப்தம் இல்லாமல் எது தான் நடக்கும் சொல்லுங்கள். அவன் மனைவி, தன் கணவன் இனி திருந்திடுவான் என எதிர்பார்த்ததுதான் நடக்கவில்லை.

—-

essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி