This entry is in the series 20090806_Issue

பா.சத்தியமோகன்


04.8.09

— பா.சத்தியமோகன்

எல்லோரும் பாரம் உணர்கிறோம்

நெஞ்சுதான் என்றில்லை ஒவ்வொரு அங்கத்திலும்

பாரம் உணர்கிறோம் ஒவ்வொரு அணுவிலும்

ஆனால் நான் கூற முடியும்

பாரத்தின் முனை ஒருவருக்கே செல்கின்றது

ஒருவர்தான் தாங்கவேண்டிவருகிறது

அறுந்துவிடும் போன்ற கயிற்றை

பாரமுள்ள கயிற்றை

மறுபுறம் இழுப்பது யார் என்று காண முடியாத தொலைவு

சவுக்கு துள்ளும் சப்தம் காற்றில் கேட்கிறது

முனையில் பாரம் சுமப்பவனே

சவுக்கினால் அடிப்பவனா என நீ கேட்கும்போது

நான் மெளனமாகிறேன்

பரவலாக இலைகளை உதிர்த்துச் செல்வேன் பதில்கள் போல!

எனது பதில்கள் விழுமிடம்

கடலாக இருக்க விழைவேன் நண்ப!

தயவு செய்து சேறு வேண்டாம்

ஒரு யோசனை –

அதிகம் வலிக்குமிடத்தை

ஒவ்வொருவரும் கை மாற்றிக் கொள்வோம்

இப்போது உன் முறை

எனது பாரத்தை ஏற்றுக் கொள்வாயா ?

*****

Series Navigation