பரிச்சியம்

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

தமிழ்மணவாளன்


எதிரில் வருபவர் என்னைப்பார்த்து
புன்னகைக்கிறார்
கையுயர்த்தி.

பேருந்துகள் கடக்கும்
குறுகிய பொழுதிலும்
புருவம் உயர்த்தி
சமிஞ்கை கொடுக்கிறார்
சன்னலோரம் உட்கார்ந்திருப்பவர்.

நெகிழ்ந்த நட்பு மட்டுமின்றி
நேயங்களும்
நிகழ்த்தி விடுகின்றன
இவைகளை.

என் வணக்கமும்
குழப்பத்தை உருவாக்கியிருக்கக்கூடும்
சிலருக்கு.

சிக்கலில் தவித்த
ஓர் அந்திப் பொழுதில்
அன்னோன்யமாய் விசாரித்து
எரிபொருள் தந்துதவினார்
ஒருவர்.

முகம் பரிச்சயமானது தானெனினும்
மேலறிய
அவரிடமே கேட்பது உசிதமின்றி
பின்னோக்கி நினைவுகளை

அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்
இன்னமும் நான்.

***
—தமிழ்மணவாளன்

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்