பதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டி!

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

அறிவிப்பு


பதிவுகள் படைப்பாளிகளே! வாசகர்களே! பதிவுகள் இணைய இதழ் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர்

மத்தியில் ‘ ஆதரவுடன் சிறுகதைப் போட்டியொன்றினை நடாத்த முன்

வந்துள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இச்சிறுகதைப் போட்டிக்குத் தனது

படைப்புகளை அனுப்ப விரும்புவோர் பின் வரும் போட்டி விதிகளுக்கமையவே அனுப்ப வேண்டும்.

போட்டி விதிகள் வருமாறு:

1.. ஒருவர் போட்டிக்கு ஒரு படைப்பொன்றையே அனுப்ப வேண்டும்.

2.. படைப்புகள் மின்னஞ்சல் மூலம் முரசு அஞ்சல் பாவித்து (tscu_inaimathi அல்லது ஏதாவது

முரசு அஞ்சல் எழுத்தொன்று) அல்லது பாமினி எழுத்தினைப் பாவித்து அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: editor@pathivukal.com அல்லது ngiri2704@rogers.com

3.. படைப்புகள் கூறும் பொருள் எது பற்றியதாகவுமிருக்கலாம்.

4.. படைப்புகள் வேறெங்கும் ஏற்கனவே வெளிவந்திருக்கக் கூடாது. சொந்தக் கற்பனையாகவிருக்க

வேண்டும். மொழிபெயர்ப்பாகவோ , தழுவலாகவோ இருக்கக் கூடாது.

5.. பரிசு பெறும் படைப்புகளை ‘பதிவுகள் இதழில் வெளிவரும் வரையில் வேறேங்கும்

பிரசுரத்துக்கு அனுப்பக் கூடாது.

6.. படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசித் திகதி: டி.ம்பர் 23, 2004

7.. போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்களை fனவரி 23, 2005 அன்றி பதிவுகள்

இதழில் அறிவிப்போம். வெற்றி பெற்றவர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அறிவிப்போம்.

8.. முதற் பரிசு: 200 கனேடிய டாலர்கள்; இரண்டாவது பரிசு: 100 கனேடிய டாலர்கள்;

மூன்றாம் பரிசு: 75 கனேடிய டாலர்கள். பரிசுப் பணம் காசோலைகளாக அனுப்பி வைக்கப்படும்.

9.. படைப்புகளை அனுப்பும் படைப்பாளிகள் தங்கள் பெயர் (முழுப் பெயர்), முகவரி, போன்ற

விபரங்களைப் படைப்புகளுடன் அனுப்பி வைக்க வேண்டும். வெற்றி பெற்றவர்களை மேலதிக

விபரங்களுக்காக அணுகுவோம்.

—-

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு