படித்ததும் புரிந்ததும்..(7) குலுக்கல் முறையில் அமைச்சர் – சொல்லி மறந்த கதை;

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

விஜயன்



சரியான விடை எழுதும் நேயருக்கு குலுக்கல் முறையில் போத்தீஸ் வழங்கும் பட்டு புடவை! போன்ற நவீன குலுக்கல் “குரல்” கேட்டு பழகியவர்களுக்கு, குலுக்கல் முறையில் அமைச்சர் தேர்வு, ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.
அக்டோபர் 19 : கேரளத்தில் கேரள காங்கிரஸ் (ஜே) பிரிவைச் சேர்ந்த “மோனஸ் ஜோசப்” பொதுப்பணி அமைச்சராக கட்சி நிர்வாகக் கூட்டத்தில் குலுக்கல் முறையில் தேர்வு – இன்று பதவி ஏற்றார். கேரள காங்கிரஸ் (ஜே) கட்சியைச் சார்ந்த (கேரளாவில் காங்கிரஸ் கட்சியில் கிட்டத்தட்ட ஆங்கில எழுத்தில் உள்ள எல்லா எழுத்துக்கும் ஒரு கட்சி உள்ளது!) முன்னாள் பொதுப்பணி அமைச்சர் ஐ.ஜே. ஜோசப், விமானப் பணிப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக, சென்ற வருடம் அக்டோபர் மாதம் சென்னை போலீஸாரால் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதன் காரணமாய் மந்திரிப் பதவியை ராஜினாமா செய்து, அவர் இடத்தில் அந்த கட்சியை சேர்ந்த குரிவிலா பதவி ஏற்று அவரும் நில ஊழல் காரணமாய், பதவியை ராஜினாமா செய்து, எஞ்சியிருந்த இரண்டு சட்ட மன்ற உறுப்பினர்களில் ஒருவரான மோன்ஸ் ஜோசப் குலுக்கல் முறையில் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றார். ஓட்டப்பந்தயத்தில் ஓடி ஜெயிக்க வேண்டும், விளையாட்டில் ஆடி ஜெயிக்க வேண்டும், பரீட்சையில் படித்து ஜெயிக்க வேண்டும், அரசியலில்? சூதாடியா? அல்லது வாரிசாகவா?
எழுபதுகளில் நடுவில் நான் கல்லூhயிpல் படிக்கும்போது இந்திய அரசியலின் குறியீடாக (இண்டக்ஸ்) மேற்கு வங்காளம் மற்றும் கேரள அரசியலைப் பற்றி கூறுவார்கள் நாளைய இந்தியாவின் முன்ணோடிதான் இந்த இரு மாநில அரசின் அன்றைய அரசியல் என்று ஒரு மதிப்பீடு உண்டு. சுமார் 30 வருடம் கழித்து மேற்கு வங்க அரசியல், மத்தியில் வெளியிருந்து அதரவுடன் அரசமைப்பது, மேற்கு வங்கத்தில் “சிபிஎம்” ஒரு கம்ய+ணிச அடிப்படைவாதக் கட்சியாக தொடர்ந்து 40 வருடம் ஆட்சியில் இருந்ததைத் தவிர இந்திய அரசியலில் பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை.
ஆனால் கேரள அரசியலின், கூட்டணி அரசியல், இந்தியாவின் மத்தியிலும் பல மாநிலங்களிலும் தமிழகம் உட்பட, வேரூன்றி வருகிறது. தற்போது முதன் முதலாகக் குலுக்கல் முறையில் மந்திரிகள் நியமிக்கப்படுவதும், மெதுவாக மத்திய மற்றும் இதர மாநில அரசுக்கும் பரவலாம்.
நம் அரசியலமைப்புச் சட்டத்தில் ஆர்டிக்கல் 164ன் கீழ் முதல் அமைச்சரை கவர்னர் பெரும்பான்மை பலம் பெற்ற அல்லது ஆதரவு பெற்ற கட்சியின் பரிந்துரையில் நியமிப்பார். அப்படி நியமனம் செய்யப்பட்ட முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் இதர அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த மந்திரி சபையின் அறிவுரையின் பேரிலேயே ஆட்சி நடக்கும். அரசியலமைப்புச் சட்டம் இயற்றியபோது இப்படி குலுக்கல் முறையில் அமைச்சரை தேர்ந்தெடுப்பது பற்றி யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். தற்போது நடந்த தேர்தலில் கேரளாவில் மொத்தம் 140 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் சிபிஎம் 61, சிபிஐ 17, ஜனதாதளம் (எஸ்) 5, கேரள காங்கிரஸ் (ஜே) 4 ஆர்.எஸ்பி 3, காங்க (எஸ்) 1, என்சிபி 1, கேரள காங்கிரஸ் (எஸ்) 1, ஐ.எம்.எல் 1, சுயெட்சை 1 ஆக 98 நபர்கள் கொண்ட (எல்டிஎப்) அமைச்சரவையில் கேரள காங் (ஜே)வில் 4 பேர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அதில் இருவர் மந்திரிப் பதவியை ஏற்றவுடன், இடையில் குற்றச்சாட்டுக் காரணமாய் இழந்தவர்கள் மீதமுள்ள இருவரில் யார் திறமையானவர் என்று தேர்ந்தெடுக்க முடியாததால், குலுக்கல் முறையில் தேர்வு. எம்.டி.ஆர் குலோப்ஜாமூன் விளம்பரத்தில் உள்ள காமெடிபோல அப்பா நான் ஸ்கூலில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது என்று மகன் சொல்ல, ப+ரித்த தந்தை, பாராட்டிவிட்டு, எத்தனைப் பேர் ஓடினார்கள் என்று கேட்க, மகன் – இரண்டு பேர் என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவான். தந்தை ஆச்சரியத்துடன் பார்ப்பார்! விளம்பரத்தில் இது நகைச்சுவை. நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் தகுதியுள்ள இரண்டு அங்கத்தினர் உள்ள ஒரு கட்சியில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க குலுக்கல் முறை! வாழ்க கேரள அரசியல். நாளைய இந்திய அரசியலின் வழிகாட்டி! உண்மையில் கேரளாவில் கல்வியறிவு பெற்றோரின் புள்ளி விபரம் என்ன தெரியுமா? 2001ன் கணக்கெடுப்படி, 94.5மூ! கல்வியறிவில் இந்தியாவின் முன்னோடி மாநிலம். கல்வியறிவு ஜனநாயக அரசாட்சியில் இப்படி சில விநோதங்களையும் நிகழ்த்துமா? என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். படித்தால் மட்டும் போதுமா?
சொல்லி மறந்த கதை : மறதி என்பது நமக்குள்ள வரப்பிரசாதம். பத்திரிக்கைகளுக்கு அன்றாடம் சுடச்சுட செய்தி வேண்டுமாகையால், பழைய செய்தி காப்பி டம்ளரில் சூடாக காப்பி குடித்துவிட்டு அடியில் மீதிவைத்த காபி. இப்போது சொல்லி மறந்த கதை; கேரள காங்கிரஸ் (ஜே) முன்னாள் பொதுப் பணித் துறை அமைச்சர் ஐ.ஜே. ஜோசப், கிங் பிஷ்ஷர் விமானப் பணிப் பெண் லக்ஷ்மி கோபக்குமாரிடம் தரகுறைவாக நடந்து, சென்னை போலீசாரால் 2006 அக்டோபரில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று, 2007 வரை வழக்கு நகராமல் ஜோசப் சட்டமன்ற உறுப்பினராய் கேரள காங் (ஜே) கட்சியில் தொடர்ந்து செயல்படுகிறர். நடிகை பத்மபிரியா விஷயத்தில் கூட டைரக்டர், நடிகர் சங்கத்தில் மன்னிப்புக் கேட்டு ஒரு வருடம் சஸ்பென்ட் செய்யப்பட்டு ஓரளவு நடவடிக்கையாவது எடுக்கப்பட்டது. ஐ.ஜே. ஜோசப்பிற்கு தார்மீக அடிப்படையில் மந்திரிப் பதவி ராஜினாமா செய்தது தவிர வேற தண்டனை இல்லை. வழக்கு பதிவானது வெறும் பேப்பர் செய்திதான் வழக்கு நடந்து தண்டனை என்று வருமுன் இருக்கவே இருக்கிறது ஆயிரம் இழுத்தடிப்பு வழிகள். நம் ஜனநாயகத்தில் அரசியல் வாதியை தண்டிப்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. கேரளாவில் பாலகிருஷ்ண பிள்ளை கேஸ் போல, ஐகோர்ட் இல்லாவிட்டால், சுப்ரீம் கோர்ட்டில், ஏதாவது வாதாடி தப்பித்துக் கொள்ளும் சாமார்த்தியம் அரசியல் வாதிக்கு உண்டு. நம் சட்டத்தின் ஆட்சியே அமைச்சர்களையும் அரசியல் வாதிகளையும் அதிகாரத்தில் இருப்பவர்களை கரிசனத்துடன் காப்பாற்றும். தங்கர் பச்சன் இது போன்ற “சொல்லி மறந்த கதை”யை எடுத்தால் நிச்சயம், கதைக்குப் பஞ்சம் இருக்காது!


kmvijayan@gmail.com

Series Navigation