நீங்கள் விரும்பியதையெல்லாம் வணங்கிக்கொள்ளுங்கள்!

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

அபூ முஹை”யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் இறைத்தூதர்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும்” என்று தமது மரணப் படுக்கையில் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர். (நூல்: புகாரி) — அபூ முஹை எழுதியதிலிருந்து – கடிதம் ராம்கி http://www.thinnai.com/?module=displaystory&story_id=808052910&format=html

உண்மை கசக்கத்தான் செய்யும் என்பதற்காக சொல்லாமல் இருக்க முடியுமோ!

இவ்வளவு சொல்லியும், இதெல்லாம் எனக்குத் தெரியாது, தெரிந்திருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டேன் என்று நாளை வாதிடும் இயல்புடைய மனிதனிடம் உண்மையைச் சொல்லித்தானே ஆகவேண்டும். இல்லையா பின்னே,

சினம் வேண்டாம்,

மண்ணறையை வணங்கக்கூடாது என்று முஸ்லிம்களை எச்சரித்து விட்டு, பிற மதத்தவர் விரும்பியதையெல்லாம் வணங்கிக்கொள்ளட்டும் (திருக்குர்ஆன், 039:015) என்றும் இஸ்லாம் கூறியுள்ளது.

//இஸ்லாமியர்கள் சற்று வலைபரப்புகளை நிரப்புவதை விடுத்து, உள்முகமாக சிந்தித்து, உங்கள் மத இளைஞர்களுக்கு இணக்கமாக வாழப் பயிற்சியளியுங்கள். நாட்டிற்கும், நாநிலத்திற்கும் நலம் !// – கடிதம் ராம்கி, மேற்கண்ட அதேச் சுட்டி.

இதையே அவ்விடத்துக்கும் சொல்லிக்கொள்கிறேன்.

எல்லா இடத்திலும் சில தறுதலைகள் இருக்கின்றனர். நீங்கள் திருத்தி விட்டீர்களா? என்பதைப் புனிதப்படுத்திக்கொள்ளுங்கள் நன்றி!

*****

//45) திரு. அபூ முஹை அவர்களுக்கு : http://www.thinnai.com/?module=displaystory&story_id=80805222&edition_id=20080522&format=html

காந்தியைப் பின்பற்றுபவர்களை காந்தியவாதி என்றால் அவர்கள் ஏற்றுக்கொள்வர். அதுபோல நீங்களே //இறைத்தூதர் முதல் முஸ்லிமாக செயல்படுத்தி, பிற முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள். // என்று சொல்லும்போது முகமதை, வழிகாட்டியை பின்பற்றுபவர்களை ‘முகமதியர்’ என்பது சரிதானே?

நீங்கள் ‘இறைத்தூதர் முதல் முஸ்லிம்’ என்று சொல்வதால் அவர்க்கு முன் பிறந்தோர் எவரும் முஸ்லிம் இல்லை என்றாகிறது. ஆனால் வஹ்ஹாபி உலகில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் முஸ்லீம்களே என்றிருக்கிறார். இரண்டையும் சேர்த்தால் இறைத்தூதருக்கு முன்னால் குழந்தைகள் பிறக்கவில்லை என்றும், அதாவது முகமதுதான் உலகத்தின் முதல் மனிதன் என்றும் ஆகிறது. இதெல்லாம் நமக்கு சகஜம்தான் என்றாலும், நான் எதற்காக இதை எழுதுகிறேன் என்றால், வஹ்ஹாபி, ‘முகம்மதுக்கு முன்பே இஸ்லாம் இருந்தது’ என்றும் சொல்லியிருக்கிறார். நீங்கள் ‘இறைத்தூதர் முதல் முஸ்லிம்’ என்று சொன்னால் அவர் நேசகுமார் மீது கேஸ் போட்டது போல் உங்கள் மேலும் போட சான்ஸ் இருக்கு. பாத்துக்குங்க.// http://www.thinnai.com/?module=displaystory&story_id=80806056&format=html – கார்கில் ஜெய் அவர்களுக்கு,

//காந்தியைப் பின்பற்றுபவர்களை காந்தியவாதி என்றால் அவர்கள் ஏற்றுக்கொள்வர்.// – இது கட்டாயத் திணிப்பு. இது பற்றி நானெங்கும் பேசவில்லையே!

//வஹ்ஹாபி உலகில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் முஸ்லீம்களே என்றிருக்கிறார்.// – வஹ்ஹாபி இப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. யூத நம்பிக்கையின்படி ஒரு யூதன் பிறக்கத்தான் முடியும் – யூத மதத்தை எவரும் தழுவிட முடியாது. ஒரு முஸ்லிமல்லாதவர் எந்த நொடியிலும் முஸ்லிமாகி விடலாம் என்பதையும், முஸ்லிம் ஆக முஸ்லிமாகப் பிறக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பதையும் வஹ்ஹாபியின் எழுத்துகளிலிருந்து அறிய முடிகிறது.

முதல் முஸ்லிம்

”முஸ்லிம்களில் நான் முதலாமானவன்” என்று கூறுவீராக! (திருக்குர்ஆன், 006:163)

இக்கருத்து முஹம்மதுக்கு முன்பு முஸ்லிம்களே இருக்கவில்லையா? என்ற வாதத்தையெழுப்பும் என்றிருந்தாலும், இறைத்தூதர் முஹம்மத் நபியை முஸ்லிம்கள் வணங்கவில்லை என்பதை மலர் மன்னனுக்குக் கூறிக்கொள்ளவே திண்ணைக்குக் கடிதம் எழுதினேன். அதில், வணங்குபவர் வணக்கத்திற்குரியவரல்ல என்பதைச் சுட்டவே முஹம்மத் முதல் முஸ்லிமாக இருந்து இறைவனை வணங்கினார் என்ற கருத்துக்காக மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் சேர்க்கப்பட்டது.

”வணக்கத்தை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை நான் வணங்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டுள்ளேன். முஸ்லிம்களில் முதலாமவனாக நான் ஆக வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்” (திருக்குர்ஆன், 039:011, 012)

முஹம்மதே முஸ்லிமாகத்தான் இருந்திருக்கிறார்.

அப்படியானால் முஸ்லிம்களில் முதலாமவன் என்பதின் பொருள் என்ன?

”நாங்கள் முஸ்லிம் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்றனர். (திருக்குர்ஆன், 003:052) இது ஈஸா நபியின் மாணவர்கள் சொன்னது.

எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!” என்றனர். (திருக்குர்ஆன், 007:126) இது மூஸா நபியின் சமூகத்தினர் சொன்னது.

”நான் முஸ்லிமாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்” (திருக்குர்ஆன், 010:072) இது நபி நூஹு கூறியது.

என் சமூதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பி, முஸ்லிம்களாக இருந்தால் அவனையே சார்ந்திருங்கள்” என்று மூஸா கூறினார். (திருக்குர்ஆன், 010:084)

”நான் முஸ்லிம்” என்று (ஃபிர்அவ்ன்) கூறினான். (திருக்குர்ஆன், 010:090)

”நாங்கள் முஸ்லிம்களாக இருக்கிறோம்” (என்று சுலைமான் நபி கூறினார். திருக்குர்ஆன், 027:042)

”இதற்கு முன்னரே நாங்கள் முஸ்லிம்களாக இருந்தோம்” என்று (முந்தைய வேதம் வழங்கப்பட்டவர்களில் சிலர்) கூறுகின்றனர். (திருக்குர்ஆன், 028:053)

இன்னும் பல வசனங்கள் இறைத்தூதர் முஹம்மதுக்கு முன்பே முஸ்லிம்கள் இருந்தனர் என்பதைக் கூறுகின்றது. ஒவ்வொரு சமுதாயத்துக்கும் வேதத்துடன் தூதரை அனுப்பிய போது, அந்த இறைச் செய்தியைப் பெற்றுக்கொள்ளும் முதல் மனிதராக அந்த நபியே இருப்பார். இறைச் செய்தியைப் பெற்றுக்கொண்ட அந்த நபி அதைப் பினபற்றும் முதல் முஸ்லிமாகவும் இருந்தார்.

உதரணமாக:

நபி மூஸாவின் சமூகத்தினருக்கு இறைவன் ஒரு நாளைக்கு 50 வேளைத் தொழுகைகளைக் கடமையாக்கினான். 50 வேளைகள் தொழவேண்டும் என்ற இறைக்கட்டளை நபி மூஸாவுக்கே முதலில் இறைச் செய்தியாக அறிவிக்கப்பட்டது. அவரே முதல் முஸ்லிமாக தொழுது, தமது சமூகத்தினரையும் தொழும்படி வழிகாட்டினார். இங்கு மூஸா நபி முதல் முஸ்லிமாக இருந்தார்.

முஹம்மது நபிக்கு ஒரு நாளைக்கு ஐவேளைத் தொழுகைகளை இறைவன் கடமையாக்கினான். இந்த இறைக் கட்டளையை முஹம்மது நபிக்கே இறைச் செய்தியாக முதலில் அறிவிக்கப்படுகின்றது. ஐவேளைத் தொழுகையின் கட்டளை வந்தவுடன் அதில் முதல் நேரத் தொழுகையை முதலில் நிறைவேற்றிய முதல் முஸ்லிம் முஹம்மது நபி. பின்னர் இப்படித்தான் தொழவேண்டும், இந்த நேரங்களில் தொழவேண்டும் என தாமும் தொழுது, இச்சமூகத்தினரையும் தொழும்படி வழிகாட்டினார்.

முஹம்மது நபி இஸ்லாத்தை மறு பிரச்சாரம் செய்யும் போது, அந்தப் பிரச்சாரத்தை முதலில் ஏற்ற முதல் முஸ்லிம் முஹம்மது நபி. இப்படி ஒவ்வொரு முந்தைய காலகட்டத்திலும் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த நபிமார்களே முதல் முஸ்லிமாக இருந்தனர் என்பது முஹம்மத் முதல் முஸ்லிம் என்பதற்கு முரணானதல்ல!

நன்றி!

அன்புடன்.

அபூ முஹை

abumuhai@gmail.com

http://abumuhai.blogspot.com

Series Navigation