நிஜங்கள் சுடுகின்றன

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

ஷம்மி முத்துவேல்


சில நேரம் ….
நிஜங்கள் சுடுகின்றன
கத கதப்பு போய்
நெருப்பின் கங்குகளாய் ….
அழகின் சாயலில் ….
உருவகத்தின் தொனியில் …..

பொய் சொல்லியே
தேற்றப்பட்ட மெய்யின்
வன்மை …..
நீறு பூத்த நெருப்பாய்
கனன்ற படி …..

உணர்வுக்கொலை
சமர்பிக்கப்படாத…….
சட்ட சிக்கலுக்கு உட்படாத
ஒரு மௌனித்த தண்டனை …..
ஊழி தண்டவமாய் ….

நாடகமேடையின்
இன்றைய வேஷம் …
அரிதாரம் கலைந்தும் கூட
மிச்சப்பட்ட எச்சங்கள்
தோளுக்கு அடியில்
புதைந்து போய்……
வடுக்களாய் ………………

ஷம்மி முத்துவேல்
சின்ன தாராபுரம்

Series Navigation