நிசப்தம்

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

ப.மதியழகன்


துக்க வீட்டில்
உறவினர்கள் கதறலுக்கிடையே
உணரும் நிசப்தம்
கோவில் மணியோசை
நின்ற பிறகு
உணரும் நிசப்தம்
பள்ளிக்கு குழந்தைகள்
சென்ற பிறகு
வீதியில் நிலவும் நிசப்தம்
சுவாரஸியமான திரைப்படத்தில்
இடைவேளை தரும்
சுகமான நிசப்தம்
ரயில் கடந்த பிறகு
லெவல் கிராஸிங்கில்
காத்திருந்தவர்கள்
உணரும் நிசப்தம்
அறைந்தவனுக்கு
பதிலடியாய் திரும்ப
அறைதலுக்கிடையேயான
நிசப்தம்
உதவி கேட்டு
கையேந்தி நிற்கும் நிலையில்
என்ன பதில் வருமோவென்று
காத்திருப்பதில் கிடைக்கும்
பேரவஸ்தையானதொரு நிசப்தம்.

mathi2134@gmail.com

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்