திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நாற்காலி

This entry is in the series 20041216_Issue

நெப்போலியன்


நான்கு கால்
உயர்திணை.

சட்ட
வரம்புகளுக்குட்பட்ட
இதிலமர்ந்து
வரம்பு மீறும்
கட்டைகள்.

இருபுறமும்
கைவைத்து
எடுக்கையால்
இருக்கை.

அமர்ந்தவன் ஆட்சி
எழுந்தவன் வீழ்ச்சி
இருவரும் சீச்…சி.

முகமில்லா முதுகுகளும்
துரோகப் புட்டங்களும்
உட்கார்ந்து தேய்த்ததில்
உலுத்துப்போய்
பீடத்தில்,
நாறும் காலிகளைச்
சுமந்தபடி
நாற்காலி.

kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

About நெப்போலியன்

நெப்போலியன்

View all 62 articles →

நாற்காலி

This entry is in the series 20030615_Issue

புஸ்பா கிறிஸ்ரி


கட்டைக் கால்களில்

ஏறி நின்று

கற்றவர் அமர்ந்திட

இடம் தரும் நாற்காலி..

அறிவில்லா, வாயுள்ள,

நாய் போன்ற

அரசியல்வாதிக்கும்

இடம் தரும் நாற்காலி

பணமாகாது, பானமாகாது,

பதவியாகியே மனிதனை

விழுங்கும் நாற்காலியே..

காலமாகி, கனவாகி,

ஞாலத்தின் நிழலாகி

வாழ்வைத் தரிசிக்கும்

மனித்னுக்கும் நீ ஓர்

தடைக்கல்லா ?

இல்லை நல்ல நடைபாதையா ?

நீ இருக்கும் இடத்தில்

மனிதர்கள் நிற்பதேனோ ?

உன் கால்களில் நீ நிற்பதாலா ?

இருக்கும்.. இருக்கும்..

அவர்க்கும்

தம் காலில் தாமே

நின்று கொள்ளும்

ஆர்வம் இருக்கும்

உன்னைப் போல…

புஷ்பா கிறிஸ்ரி

pushpa_christy@yahoo.com

Series Navigation

About புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி

View all 63 articles →

நாற்காலி

This entry is in the series 20021207_Issue

ஆ.பா.அருண் கணேஷ்.


தாத்தா…
தன் வாழ்வின் கடைசி கனவுகளை
உன்னில் தான் பதியம் போட்டாராம்
அம்மா அடிக்கடி சொல்வாள்

காலை காப்பி முதல்
இரவு மாத்திரை வரை
எல்லாமே உன் மடியில் தானாம்

உன் தோளில் கைபோட்டு தாத்தா
செய்திதாள் வாசிக்கும் கம்பீரமே தனி
அப்பா சொல்லி
சிலிர்த்து போவார்

சுருட்டால் தன் நுரையீரல் நசிந்தாலும்
உன் மேனி பொசிங்கிடாது பாதுகாப்பாராம்
அவரின் கடைசி சுவாசம்
காற்று மண்டலத்தை கரைத்த போது
அருகிருந்தது நீ மட்டும் தானாம்

சாய்வு நாற்காலியே…
பாதியிலேயே விட்டுப்போன பாட்டியைவிட
அப்படி என்ன பாசம் உனக்கு
தாத்தா போன கொஞ்ச நாட்களிலேயே
சோகத்தில் செல்லரித்து
உதிர்ந்தே விட்டாயாமே!!!

abarun@pacific.net.sg

Series Navigation

About ஆ.பா.அருண் கணேஷ்.

ஆ.பா.அருண் கணேஷ்.

View all 3 articles →