நம்பிக்கை இழந்துவிட்டேன் நாராயணா..

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

செங்காளி


உன்னையே மிகப்போற்றி உயிர்வாழ்ந்த பாட்டனார்
தன்னுடைய பேரனுக்குத் திருமணம் செய்விக்க
திருமாலே நீவாழும் திருவரங்கத் திருத்தலத்தில்
அருமைப் பெரியோர்கள் அனைவரையும் அழைத்திட்டு

வேதங்கள் பலவோதி வெங்கடேசா உனைவாழ்த்த
ஏதுமறியா அவர்களையே ஏமாற்றி நீயும்தான்
தனலுக்கு இறையாக்கித் தண்டனைமிகத் தந்திட்டாய்
மனம்நொந்து கேட்கின்றேன் மாலனே உன்னைத்தான்

தர்மமெங்கே போனதென்று தகுந்தபதில் சொல்லிடுவாய்
கர்மவினை யெனக்காட்டிக் கவனத்தைத் திருப்பாதே
நம்பியுனை வந்தவரை நிலைகுலையச் செய்தவுன்மேல்
நம்பிக்கை இழந்துவிட்டேன் நாராயணா! நாராயணா!

natesasabapathy@yahoo.com

Series Navigation

செங்காளி

செங்காளி