நதியலை தீரத்தில் யாசித்த பறவை

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

ஹெச்.ஜி.ரசூல்


எங்கும் வீசுகிறது காற்று
செடி கொடி தாவரங்களின் பேச்சு
நதியலைத் தீரத்தில் நின்று
கால்கடுக்க யாசிக்குமொரு பறவை
வெற்றுத் தாள்களுக்கு பயமில்லை
எழுதப்படாத அதன் பக்கங்கள்
ஏதோ ஒன்றின் தொடுதல் நோக்கி
அந்திமம்வரை காத்திருக்கிறது.
அந்த வெற்றுப்பக்கத்தின் உள்ளிருந்து
ஒரு பச்சைக்கிளி
தாவி வந்து உட்கார்ந்திருக்கலாம்
என் சின்ன மகளின்
பென்சில்முனை வரைந்து தள்ளிய
கிறுக்கல் ஓவியத்திலிருந்து
ஒரு பிளிறிய யானை வெளிப்பட
மெளனங்களோடு புதைந்து கிடந்த
கவிதை ஒன்று
வார்த்தைகளாய் இடம் பெயர்ந்து
கொடி அசைத்து செல்கிறது.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation