தொடக்கம்
தமிழ்மணவாளன்

சலிப்பின் விளிம்பில்
செயலிழக்கச் செய்யுமிந்த
மனத்தை உற்சாகமூட்டும்
மாமருந்தாய் துலங்குமதன்
அடையாளம் தேடித் தேடி
புள்ளியினுருவினதாய்
புலப்பட
போதுமதுயினி காலவெளியின்
பெருஞ்சுற்றின்
தொடக்கமாகி விரியும்
இன்றுமுதலாய் இனி.
tamilmanavalan@yahoo.co.in