தீர்ப்பு சொல்கிறேன்
பா.சத்தியமோகன்

ஒருபுறம் –
ரகசியத்தைப் புலப்படுத்தியபடியே உள்ளன
மக்களின் சொற்களும்
பெண்களின் அலங்காரங்களும்
மறுபுறமோ –
மூடுதல் எனும் திரையை அகலமாக்கவே திறக்கின்றன
மக்கள் வாய்கள்
உண்மை உண்மையென்று
சொல்லும்போதே
தயாராகின்றன பொய்கள்
உலகில் –
இரண்டில் ஒன்றுதான் இருக்கவேண்டும்
வாய்கள் அல்லது பொய்கள்.
————————————
cdl_lavi@sancharnet.in