தீயடி நானுனக்கு

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

எச்.முஜீப்ரஹ்மான்


இன்று இலக்கிய கூட்டத்தில் எனக்கு கட்டுரை வாசிக்க வேண்டிய முறை.கட்டுரையை ஒருமுறை கூட படித்து பார்த்தேன்.நன்றாக வந்திருந்தது.அன்றைய செய்தி தாளில் நகரில் பள்ளியொன்று தீப்பிடித்து பள்ளிகுழந்தைகள் பலர் கருகி இறந்த துக்கச் செய்தி என்னை விசனத்தில் ஆழ்த்தியது.இருந்தாலும் சாயும் காலம் பஸ்ஸை பிடித்து சíகத்துக்கு சென்றேன்.நகரின் மையத்திலிருந்த அந்த கட்டிடம் இலக்கிய ஆர்வலர்களுக்கு நல்ல தீனி போடும் இடம்.பலமுறை அந்த கட்டிடத்தின் சíக அறையில் நாíகள் எல்லோரும் கூச்சல்,கும்மாளம் அடித்தாலும் யாருமே இது பற்றி புகார் தெரிவிக்கவில்லை.அக்கம் பக்கத்தில் நிறுவனíகளின் பொறுப்பாளர்கள் எíகள் அத்துமீறலை கண்டும் காணாமல் இருப்பது எíகளுக்கு வசதியாக போய்விட்டது.மாதத்தில் ஒரு நாள் இலக்கிய கூட்டம் நடக்கும்.அப்போது யாரவது கதையோ,கட்டுரையோ அல்லது கவிதையோ வாசிக்கக்கூடும்.வாசித்து முடித்த பின் காரசாரமான விமர்சனíகள் முன்வைக்கப்படும்.சுமார் மூன்று அல்லது நான்கு மணிநேரம் கலகலப்பும்,உற்சாகமும் எல்லோரின் முகத்திலும் காணப்படும்.பின்னர் அன்றைய கூட்டம் கலைந்து எல்லோரும் போய்விடுவர்.இனி அடுத்த கூட்டம் அடுத்த மாதம் தான்.கூட்டத்தில் நாíகள் இருபது இருபத்தைந்து பேர் வரை இருப்போம்.ஆனால் எல்லோரும் கலை,இலக்கிய ஆர்வலர்களும்,பல் திறமை வாய்ந்தவர்களும் தான்.இன்று எனது முறை.பஸ்ஸை விட்டு இறíகும் போது இருட்டதுவíகி விட்டது.அíகிருந்து விறுவிறு என நடந்து கட்டிடத்தை அடைந்து,அறையை அடைந்த போது நண்பர்கள் உற்சாகமாக என்னை வரவேற்றார்கள்.கூட்டம் நான் வந்த சிறிது நேரத்திலேயே ஆரம்பித்தது.முதலில் பள்ளிக்குழந்தைகள் மரணத்திற்க்காக ஆழ்ந்த இரíகல் அஞ்சலி சம்ர்பிக்கப்பட்டது.அதன் பின் ஒன்றிரண்டு நிகழ்வுகளுக்கு பின் எனது கட்டுரை வாசிக்கப்பட்டது.நண்பர்கள் கவனமாக அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர்.ஆனால் எனக்கு உஷ்ணம் அதிகமாகி வியர்வை வழிய ஆரம்பித்தது.ஒரு வழியாக கட்டுரை முடிந்தது.நான் அதிகபதட்டத்துடன் வழக்கத்துக்கு மாறாக இருந்தேன்.என்ன காரணம் என்று தெரியவில்லை.பதட்டத்தை தணிக்கும் வகையில் சிகரெட் ஒன்றை வாயில் வைத்து நண்பர் ஒருவரிடம் தீப்பெட்டி கேட்டேன்.தீப்பெட்டியை வாíகி தீக்குச்சியை உரசி வாயருகே கொண்டு போனது தான் தாமதம்.சட்டென தீ என் உடம்பெல்லாம் பரவியது.பரவிய வேகத்தில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.நண்பர்கள் எல்லாம் அலறியடித்து கொண்டு என்னை தீயிலிருந்து காப்பாற்ற முயன்றனர்.

தீ ஜீவாலைகள் படபடத்து காற்றில் அசைந்தாடின.நான் மூர்ச்சையாகிப்போனேன்.கண்விழித்து பார்த்த போது கட்டிடத்தின் வெளியே ஒரு திண்ணையில் படுக்கவைக்க பட்டிருந்தேன்.ஆம்புலன்ஸ் சைரனை ஒலித்தவாறு வந்து கொண்டிருந்தது.தீயணைக்கும் படைவீரர்கள் தண்ணீரை என்மீது பீச்சிக்கொண்டிருந்தனர்.ஆனால் தீ அணையாமல் படர்ந்து பிடித்து எரிந்து கொண்டிருந்தது.கட்டிடத்தின் வெளிபாகம் முக்கியமான சாலை என்பதால் ஜனநடமாட்டம் என்னை சுற்றியிருந்தது.போலிஸ்,அதிகாரிகள்,மக்கள் பெருíகூட்டம் என்று அந்த பகுதி களேபரப்பட்டது.இதனால் பெருத்த டிராபிக் ஜாம் உண்டானது.வண்டிகள் இஞ்ச் இஞ்ச் ஆக நகர்ந்தன.வண்டியிலிருந்து பார்பவர்கள் என்னை பார்த்து திடுக்கிட்டார்கள்.நான் எரிந்து கொண்டிருந்தேன்.பல மணிநேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.விஷயம் அறிந்து தொலைகாட்சி நிருபர்களும்,பத்திரிக்கை நிருபர்களும் முக்கிய பிரதானிகளும் வந்திருந்தனர்.பிளாஷ் லைட்டுகள் வினாடிக்கு வினாடி மின்னிக்கொண்டிருந்தது.சோர்வு மாறிய நான் ஆயசமாக எழும்பி அமர்ந்தேன்.அய்யோ பேய் என்று அய்ந்தாறு பேர் ஒடினர்.ஒரு பெண்மணி மூர்ச்சையாகி விழுந்தாள்.கலெக்டர் இரண்டடி பின் வாíகினார்.ஆனால் என்மீது தண்ணீரை பீச்சியடித்தவர்கள் தண்ணீர் தீர்ந்து விட்டது என்று கூறி மெல்ல நகர்ந்தனர்.அமைதியாய் இருந்த அந்த பகுதியில் ஜனக்கூட்டம் மெல்ல முணுமுணுத்தவாறு பிரிய ஆரம்பித்தனர்.கலெக்டர் முக்கிய ஜோலி ஒன்றிருப்பதாக கூறி காரில் பறந்து விட்டார்.எனது நண்பர்கள் பீதியில் அந்த இடத்திலேயே உறைந்து நின்றனர்.ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என்று கூறி கட்டிடத்தின் அடிபகுதியில் நிறுவனíகளை நடத்திக்கொண்டிருந்தவர்கள் கடைகளின் சட்டரை இழுத்து அடைத்தனர்.அந்த பகுதில் இருந்த சர்ச்சுகளில் இருந்து வந்த அய்ந்தாறு பாதிரிமார்கள் இந்த ஆத்மாவுக்காக விஷேச பிரார்த்தனை நடத்த போவதாக கூறி போய்விட்டார்கள்.போலீஸ் எனது நண்பர்களிடம் விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர்.தீயை அணைக்க என்னஎன்னமெல்லாம் முடியுமோ அதெல்லாம் பரிசித்து பார்த்தாகிவிட்டது.டாக்டர்களும்,நர்ஸ்களும் இனியும் நின்று பலனில்லை என்றுணரவே அவர்கள் பறப்பட்டனர்.எíகிருந்தோ கூட்டத்தில் வந்து புகுந்து என்னருகே வந்த ஒரு பைத்தியக்காரன் இதெல்லவோ வெளிச்சம்.இதெல்லவோ ஒளி என்று கூறி என்னை வணíகினான்.போலிஸ் வேகமாக வந்து அந்த பையித்தியகாரனை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றனர்.ஆனால் அவன் சப்தமிட்டு சொன்னான் பிரகாசத்தை நான் கண்டேன்.கூட்டத்தில் சலசலப்பு தோன்றியது.ஒரு வயதான பெரியவர் ஜோதியை வணíகுíகள் ஜோதியை வணíகுíகள் என்று சப்தமிட்டார்.அந்த மாத்திரத்திலே அய்ந்தாறு பேர் என்னை கைக்கூப்பி வணíகினர்.டிவி கேமராக்கள் ஒன்று விடாமல் அத்தனையும் பதிவாக்கிக் கொண்டிருந்தது.மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்ப்பட்டது.ஒரு பெண் கூந்தலை அவிழ்த்து தலையை வேகமாக சுற்றி டேய் பசíகளா நான் தாண்டா அம்மா வந்திருக்கென்.என் பையனை ஒண்ணும் செய்யாதிíகோ என்று ஆவேச சப்தமெழுப்பியவாறு சட்டென மயíகி விழுந்தாள்.ஏதோ விபரீதம் நடக்கிறது என்று முணுமுணுப்புகள் எழுந்தவாறு மக்கள் கலைவதும்,கூடுவதுமாக இருந்தார்கள்.டிராபிக் போலிஸ் ஒலிபெருக்கியை வைத்துக் கொண்டு இந்த பக்கம் யாரும் வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து கொண்டிருந்தனர்.

நான் சற்று நேரத்திலே அந்த நகரின் பேச்சு பொருளாக மாறினேன்.எல்லோரும் என்னை பற்றியே பேசுகிறார்கள்.வானொலியில் செய்தி வந்து விட்டது .சற்று முன் கிடைத்த செய்தி என்று எதிரே உள்ள டிவி ஷோரூம் கடையிலிருந்த அத்தனை டிவிகளிலும் உள்ள செய்திவாசிப்பாளர்களும் என்னைப்பற்றிச் சொல்ல கூட்டம் என்னருகில் இருந்து விலகி கடையின் முன் கூடியது.ஒரு செய்தி நிருபர் என்னருகே நின்று கொண்டு மைக்கை கையில் வைத்தவாறு ஜனகளேபரம் அதிகமாகி வருகிறது ஆனால் இந்த தீ மர்மமாகவே இருக்கிறது.இன்னும் அது படர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.விஷேச செய்திகளுக்காக பாலகிருஷ்ணன் என்று சொன்னதை கேமராவில் பதிவாக்கிக் கொண்டிருந்தனர்.நாலுமுக்கு திடலில் கட்சிக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.சட்டென ஒலிப்பெருக்கியில் இருந்து பஸ்ஸ்டாண்டு அருகே ஒரு மனிதன் தீயில் எரிந்து கொண்டிருக்கிறான்.பலமணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.என்று தொடíகி அதிகாரிகளையும்,அரசையும் கண்டித்து தலைவர் ஆவேசமாக பேசிக்கொண்டிருப்பது கேட்டது.

இனியும் இíகிருப்பது அவ்வளவு நல்லதல்ல என்றுணர்ந்த நான் மெல்ல எழுந்தேன்.ஜனக்கூட்டத்தில் சலசலப்பு அதிகரித்தது.நான் மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.ஜனம் வழிமாறிகொடுத்து விட்டு என்னை கும்பலாக தொடர முயன்றனர்.போலிஸ் மக்களை விரட்டியடித்தனர்.மக்கள் சிதறி ஓடினார்கள்.மீண்டும் எíகிருந்தோ மக்கள் கூட்டம் வந்தது.நான் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தேன்.பயíகரமான அமைதி நிலவியது .மெல்ல மெல்ல என்னை அனைவரும் பின் தொடர்ந்தனர்.அக்கம் பக்கத்திலுள்ளோரெல்லாம் வாய்பிளந்து நின்றனர்.பஸ் ஸ்டாண்டு இப்போது என்னை பார்த்து கலவரப்பட்டது.மக்கள் அíகும் இíகுமாக ஓடினார்கள்.நான் நின்றிருந்த பஸ் ஒன்றில் ஏறி அமரமுற்ப்பட்டேன்.அப்போது தான் நான் செய்த தவறு என்ன என்பதை உணர்ந்தேன்.பஸ்ஸிலிருந்து எல்லோரும் இறíகி ஓட்டமெடுத்தனர்.நான் இருக்க முற்பட்ட சீட் இப்போது தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.அந்த இடமெல்லாம் கரும் புகை சூழ்ந்துக் கொண்டது.மக்களெல்லாம் கலைந்து ஓடத்துவíகினர் .கொஞ்ச நேரத்தில் அடுத்த பஸ்ஸையும் தீ பிடித்துக் கொண்டது.இப்படி ஒவ்வொரு பஸ்ஸாக பற்றி எரிய ஆரம்பித்தது.பஸ்ஸ்டாண்டு களேபரத்தொடíகியது.சைரனை ஒலித்தவாறு தீயணைப்பு வண்டிகள் வேகமாக பஸ்ஸ்டாண்டுக்குள் வந்தன.நல்ல வேளையாக மேகíகள் கூட ஆரம்பித்தது.லேசாக காற்றும் ஓíகி வீசத்துவíகியது.எíகோ ஓரிடத்தில் இடி இடித்தது.இப்போது வானமெíகும் மின்னல் கீற்றுகள் ஓயாமல் தெறிக்க ஆரம்பித்தன.காற்றில் என்மீது படர்ந்த தீ ஆழி பிடித்துகொண்டிருந்தது.மழை வரலாம் என்று நான் நினைத்த அடுத்த கணமே மழை பெய்ய ஆரம்பித்தது .மழையின் வேகம் கூடிக்கொண்டிருந்தது.பஸ்களில் பிடித்த தீ கொஞ்சம் கொஞ்சமாக முழுவதுமாக அணைக்கப்பட்டது.அதன் பிறகு பஸ்ஸ்டாண்டில் வந்த மக்கள் பேருந்து செட்டில் நின்றவாறு என்னை நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.எல்லோரும் ஆச்சரியப்பட என்னை பார்த்தனர்.மழையில் கூட தீ அணையாமல் எரிந்து கொண்டிருந்தது.நான் நடந்து கொண்டே ஆலோசித்தேன்.எப்படி ஊருக்கு போவது?

வானில் இடிகள் ஒலிக்க மின்னல்கள் கீற்றுகளின் ஒளியில் சற்று அதிகமான பிரகாசம் காணப்பட்டது.திடீரென எனது உடம்பு அதிர ஆரம்பித்தது.நான் என்னையறியாமல் சக்கரம் போல சுழன்றேன்.மக்கள் வைத்தகண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.சுழன்று சுழன்று நான் ஒரு தீப்பந்தாக மாறினேன்.வட்டவடிவில் தீப்பந்து சுழன்றது.சட்டென தீப்பந்து மேலே உயர்ந்து பறந்தது.ஏதோ எரிநட்சத்திரம் போவது போல இருந்தது.நான் மேலுயர்ந்து பறந்து சில வினாடிகளில் என் வீட்டு முற்றத்தில் இருந்தேன்.நான் இப்போதும் சக்கரம் போல் சுழன்று கொண்டிருந்தேன்,சுழற்ச்சியின் வேகம் குறைந்து சாதரணநிலைக்கு வந்தேன்.ஆனால் தீ இன்னும் எரிந்து கொண்டு தானிருக்கிறது.அட நம்ம வீட்டு பகுதியில் மழையின் அறிகுறியே இல்லையே.யாரோ வீட்டு வாசலை திறப்பது போலிருந்தது.என் மனைவியே தான்.அடுத்த கணமே அவள் கூக்குரலிட்டாள் தீ..தீ..

“மம்மி மம்மி டிவில டாடி படம் போட்டிருக்கு” என்று குரலெழுப்பியவாறே ஓடி வந்த என் குழந்தைகள் என்னைப் பார்த்து அதிர்ந்து நின்றனர்.நிலைமை சகஜத்துக்கு வர “நான் தாண்டி ஒம்புருஷன்” என்று அவளிடம் நடந்த விஷயமெல்லாம் கூறினேன்.அவள் அழுது ஆர்பரித்தாள்.சிறிது நேரம் கழித்து நான் வீட்டுக்குள் போகாமல் மாடிப்படி ஏறி மாடிக்கு வந்தேன்.வீட்டுக்குள் சென்றால் தீபிடித்து ஏதாவது விபரிதம் நடந்து விடுமோ என்று தான் மாடிக்கு வந்தேன்.மாடியில் வந்து தரையில்
உட்கார்ந்தேன்.வீட்டில் போன் ஒலி ஒலிப்பதும் அவள் பதிலளிப்பதுமாக வீடு அமர்களப்பட்டு கொண்டிருந்தது.சற்று நேரத்துகெல்லாம் வீட்டின் முன்புற கேட் வாசலருகே ஒரு டாக்ஸி வந்து நின்றது.அதிலிருந்து என் நண்பர்கள் இரண்டுபேர் வேகமாக வீட்டிக்கு வந்தார்கள்.சில வினாடிக்குள் என் மனைவி,குழந்தைகள்,நண்பர்கள் அனைவரும் என்னருகே வந்தனர்.என் நண்பர் கேட்டார் “உடம்புக்கு ஒண்ணுமில்லையே?” நான் இல்லை என்று தலையசைத்தேன்.மணித்துளிகள் கரைய கரைய என் வீடு முழுக்க உறவினர்களும்,பந்துகளும் வந்து குவிந்தனர்.சற்று நேரம் என்னோடு உரையாடிக்கொண்டிருந்த என் நண்பர்கள் விடைபெறுவதாக கூறிச் சென்று விட்டனர்.அக்கம் பக்கத்து வீட்டிலுள்ள மின் விளக்குகள் பிரகாசித்தன.பலர் தíகள் தíகள் வீடுகளின் மொட்டைமாடியில் இருந்து என்னை பார்க்க முயற்சித்தனர்.பலரும் என்னை பார்க்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்தனர்.ஆனால் என் சிறிய தந்தையார் யாரையும் பார்க்க அனுமதி மறுத்துவிட்டார்.நேரம் செல்ல செல்ல வீடுகளின் வெளிச்சíகள் சூன்யமாயின.அமைதி நிலவ தொடíகியது.நான் அப்படியே அமர்ந்திருந்தேன்.”குழந்தைகள் தூíகிவிட்டதா?” என்று மனைவியை கேட்டேன்.அவள் பதிலேதும் சொல்லாமல் ஆம் என்று தலையசைத்தாள்.நள்ளிரவை தாண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.மனைவி சுவரில் சாய்ந்த படியே கண்ணயர்ந்தாள்.திடீரென வானத்தில் நெருப்பு கோளம் ஒன்று தெரிந்தது.அது அப்படியே பெரிதாகிக் கொண்டு வந்தது .பயíகரமான வெளிச்சம்.இப்போது நெருப்பு கோளம் எனக்கு மேலே வந்து நின்றது.சட்டென அது வெடித்து சிதறியது,வானமெíகும் மத்தாப்பு பூபாளம் விரித்தது போல இருந்தது.அய்ந்தாறு தேவர்கள் என் முன்னே சற்று உயரத்தில் நின்று கொண்டிருந்தனர்.மநுவே அக்னி தேவனின் ஆக்ஜையால் நாம் வந்தோம்.இன்றோடு உமது சாபம் தீர்ந்தது.நீர் எம்முடன் வரவேண்டும் என்று தேவர்கள் என்னைப் பார்த்து கூறினர்.நான் எப்படி என்று கேட்பது போல் பார்த்தேன்.அவர்கள் வா என்று கைகாட்டி அழைத்தனர்.நான் என்னையும் அறியாமல் அந்தரத்தில் உயர்ந்து சென்றேன்.மேலிருந்து கீழே பார்த்த போது எனது உடம்பு சவம் போல கிடந்தது.வானம் சூன்யமானது.நான் நினைவிழந்தேன்.சில மணித்துளிகள் கழிந்து நான் நினைவு திரும்பியவனாய் கண்திறந்து பார்த்த போது எனது மனைவி உறíகிக்கொண்டிருப்பது தெரிந்தது.இப்போது எனது உடம்பில் தீ எரிவது நின்று விட்டது.

வானம் காரிருளை விடாமல் பற்றியிருந்தது.நட்சத்திரíகளை சுத்தமாக வானில் காணமுடியவில்லை.நள்ளிரவை தாண்டி நேரம் போய்க்கொண்டிருந்து.வானின் தூரதூரத்தில் சிறிதாய் ஒரு வெளிச்சம் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தது.கண்ணிமைக்கும் நேரத்தில் அது ஒரு நெருப்புக் கொளமாக பெரிதாகி பூமியை அடையும் போது எரிக்கல்லோ என்று நினைக்கவைத்தது.அடர்ந்த அந்த காடுகளின் இருப்பின் சலனைத்தை குலைத்து,மரíகளின் கிளைகளை ஒடித்து கொண்டு அசுர வேகத்தில் எரிக்கல் பூமியை மோதியது.பூமி அதிர்ச்சி போல இருந்தது.பூமி பிழந்தது.மரíகளெல்லாம் தீ பிடித்து எரிய ஆரம்பித்தன.எரிக்கல் பூமியில் மோதியதால் பெரும் பள்ளதாக்கு உருவானது.தீப்பிளம்பாய் காட்சியளித்த பள்ளத்தாக்கு மெல்ல நேரம் செல்ல செல்ல இருண்டு போனது.ஆனால் காடுகளில் ஆíகாíகே மரíகள் எரிந்து வெளிச்சத்தைக் கக்கிக்கொ ண்டிருந்தது.நடப்பது யாதும் அறியாமல் அந்த ராஜ்ஜியத்தின் மக்கள் துயில் கொண்டனர்.சில கிராமíகளில் நாய்கள் விடாமல் குரைத்துக் கொண்டிருந்தன.பள்ளதாக்கில் ஒரு சிறிய துண்டு கல் மாத்திரம் ஒளி வீசியது.அதுவும் சிறிய வெளிச்சமாக.சற்று நேரத்திற்க்கெல்லாம் அந்த கல் ஒளியிழந்தது.பூமியின் பிளவில் இப்போது வெளிச்சம் பிரிந்து சிதறியது.வேகவேகமாக தீ சர்ப்பம் ஒன்று வெளியே வந்தது.

காலையில் காடுகளில் மரமுறிக்கவும்,வேட்டையாடவும் பலரும் வந்தனர்.அந்த நாட்டின் மந்திரியின் மகனும்,தளபதியின் மகனும் குதிரையில் பாய்ந்து காட்டினுள்ளே வந்து கொண்டிருந்தனர்.காட்டின் நடு பகுதிக்கு வந்த அவர்கள் மயானம் போல் காட்சியளித்த அந்த பள்ளத்தாக்கினை கண்டனர்.இருவரும் தைரியமாக பள்ளத்தாக்கில் இறíகி நடந்தனர்.எíகும் சாம்பல் காடாக இருந்தது.சுற்றி சுற்றி பார்த்தவர்கள் ஏதோ அதிசயம் தான் என்று எண்ணியவாறு மீண்டும் பள்ளத்தாக்கினை விட்டு அகல நினைத்து நடந்தனர்.ஆனால் மந்திரியின் மகன் தரையில் ஏதோ ஒரு ஒளி இழைந்து செல்வது போலகண்டு அதை பின் தொடர்ந்தான்.பள்ளத்தாக்கை விட்டு வெளியே வந்த தளபதியின் மகன் திரும்பி பார்த்த போது தனது நண்பனை காணமல் சப்தம் கொடுத்தான்.தரையில் ஊர்ந்த தீ சர்ப்பம் சட்டென சீறி எழுந்து மந்திரியின் மகனைகடித்தது.அப்போது நண்பனும் அíகே ஓடோடி வந்தான் .தீ சர்ப்பம் பயíகரமாக காட்சியளித்தது.நண்பன் அவனது கண்னெதிரிலே தீப்பிடித்து அலறியவாறு கருகினான்.இப்பொது தீ சர்ப்பம் இவனை பார்க்கவே ஓடினான்.பயத்தில் உடம்பு அதிர்ந்தது.ஓடி ஓடி குதிரையை அடைந்து ஒரேதாவலாக அதன் மீது ஏறி குதிரையை விரட்டினான்.தீ சர்ப்பமும் சளைக்காமல் வேகமாக நகர்ந்து இவனை துரத்த துவíகியது.

அரண்மனையில் பிரபல வைத்தியரும்,ஆஸ்தான ஜோதிடருமாகிய அந்த கிழவன் சோழிகளை உருட்டிவிட்டு கண்மூடி மீண்டும் சோழிகளை உருட்டினான்.மாகாபிரபோ என்று சோதிடம் சொல்ல ஆரம்பித்தான்.வானுலகில் கடும் சினம் கொண்டவனும்,கருணையானவானாகிய அக்னி தேவனின் மெய்க்காப்பாளன் நேரம் தவறி பணிக்கு வந்த காரணத்தினால் அவனை அக்னிதேவன் தீ சர்ப்பமாக சபித்து பூமியில் அலையும் படி செய்துவிட்டான்.அந்த தீ சர்ப்பத்தின் காரணமாக பல நாசநஷ்டíகள் நேரிடும்.இனி வரும் காலíகளில் தீயினால் பெரும் அழிவுகள் சம்பவிக்கும்.இந்த நாட்டின் மாடமாளிகைகளும்,கூட கோபுரíகளும் தீக்கிரையாகும்.இந்நாட்டின் தலைநகரமே எரிந்து சாம்பலாகும்.பல நூற்றாண்டுகள் தீ சர்ப்பத்தின் பிடியில் உழலும்.இறுதியில் தீ சர்ப்பம் சாப விமோசனம் பெற்று மீண்டும் வானுலகம் செல்லும்.கிழவன் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தான்.

தீசர்ப்பம் தலைநகரில் நுழைந்தது.சர்வதேச பல்கலைகழகம் ஒன்றில் வரலாற்று பேராசிரியராகவும்,சிறந்த ஆய்வாளர் என்று பெருமைபெற்ற அந்த முதிர்ந்த புரபசர் தமது ஆய்வினை பற்றி நண்பருடன் விவாதித்துகொண்டிருந்தார்.சிலப்பதிகாரத்தை நாமெல்லாம் கற்பின் மகிமையைச் சொல்லும் காவியமாகத் தான் இதுவரை கற்ப்பிக்கப்பட்டிருக்கிறோம்.என்னை கேட்டால் அது சபிக்கப்பட்ட தீ சர்ப்பம் ஒன்றின் கொடும் கோபத்தின் கதையாகவும் இருக்கிறது என்று எல்சிடி புரஜகடரை ஆன் செய்தார்.தீ சர்ப்பம் ஒன்றின் பழíகால வரைபடம் ஒன்று.தீ சர்ப்பத்தின் வரலாறைச் சொல்லும் “ முத்திரா” என்ற சமஸ்கிரத மொழியில் அமைந்த சுவடி,சீறிய கோலத்தில் தீயை உமிழும் போது ஏற்படும் தீக்கிரையான பல பகுதிகள்,பலரின் உடம்பில் தீ சர்ப்பம் ஜக்கியமாகி தீக்கிரையாக்கிய படíகள் என்று வரிசையாக படíகளை தமது நண்பருக்கு காட்டிக்கொண்டிருந்தார் அந்த வரலாற்று ஆய்வாளர்.

இரவு கவிந்து நகரின் கோலம் மாறிக்கொண்டிருந்தது.அந்த பெண் வீட்டில் தலைவிரி கோலமாக தரையில் கிடந்தாள்.ஏதோ பயíகரமான சம்பவம் தனது வாழ்வில் சம்பவித்து விட்டது என்ற நிராசையில் மனமுடைந்த அவள் மயíகி விட்டாள்.தீ சர்ப்பம் மெல்ல அவளது வீட்டின் அருகில் வந்தது.அவளை அது பார்த்து விட்டு ஜன்னல் வழியாக வீட்டினுள் பிரவேசித்தது.மயíகியநிலையில் கிடக்கும் அவளருகே சர்ப்பம் சென்றது.சர்ப்பம் அவளின் மேல் ஒளியை கக்கியது.சற்று நேரத்தில் சர்ப்பம் அவளுடன் ஜக்கியமாகியது.திடிரென கண்விழித்த அவளது கண்கள் பளபளவென்று ஒரு கணம் மின்னிமறைந்தது.தரையில் இருந்து எழும்பிய அவள் “நான் பழிவாíகுவேன்” என்று ஆவேசமாக கத்தினாள்.அவளின் முகம் சர்ப்பத்தை போல இருந்தது.

புரபசர் எல்சிடி புரஜக்டரை ஆப் செய்து விட்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்.தீ சர்ப்பம் இரண்டு நண்பர்களில் ஒருவனை தீக்கிரையாக்கிவிட்டு அடுத்தவனை கொல்வதற்க்காக அவனை விரட்டியது.ஆனால் அவன் மின்னல் போல் மறைந்து விட்டான்.ஆனாலும் அவனைத்தேடி நகருக்கு வந்த சர்ப்பம் அவனை தேடியலைந்தது.ஆனால் அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை.கடும் கோபம் கொண்ட சர்ப்பம் அவனை மறைத்து வைத்திருக்கும் அந்த நகரை தீக்கிரையாக்கவிரும்பியது.இந்த நிலையில் தான் கண்ணகி தனது கணவன் கோவலன் கொலையுண்ட செய்தி அறிந்து அழுது அரற்றினாள்.மதுரையம்பதி அரசனை சந்தித்து நீதி வேண்டும் என்று கேட்கவேண்டும் என்று அவள் முடிவு செய்தாள்.ஆனால் சாதாரண அந்த பெண்மணியால் மதுரையை தீக்கிரையாக்கமுடியாது.அíகே தான் தீ சர்ப்பத்தின் பாத்திரம் முக்கிய இடம் பெறுகிறது.பழி வாíகும் எண்ணத்தில் அலைந்து திரிந்த சர்ப்பம் தற்செயலாக அவளைக் கண்டது.அவள் மயíகி கிடக்கிறாள்.இதை விட நல்ல சந்தர்ப்பம் அமையாது என்றெண்ணிய சர்ப்பம் அவளுடம்பில் ஜக்கியமானது.

அடுத்த நாள் அவள் சிலம்புடன் அரண்மனைக்கு வந்து அரசபையில் மன்னனிடம் நீதி கேட்டாள்.மன்னனும் தவறையுணர்ந்தான்.அப்போது தீ சர்ப்பம் அவளுக்குள் விழித்துக் கொண்டது.அவளது கண்கள் பளபளத்தவாறு மின்னி மறைந்தது.கோபத்தில் அவள் முகம் சர்ப்பத்தை போல ஆனது.அவள் உடம்பு திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.அவள் வாயை திறந்து தீயைக் கக்கினாள்.எதிர்பாரத இந்த தாக்குதலை மன்னனும்,ராணியும் எதிர்ப்பார்க்க வில்லை.அவள் வாயைத் திறந்து ஊ ஊ என்று தீயை ஊதினாள்.அந்த தீயில் பட்டு மன்னனும்,இராணியும் சிறிது நேரத்துக்குள்ளே கருகி செத்தனர்.அரண்மனை தீ பிடிக்க தொடíகியது.அவளது வாயிலிருந்து அதிபயíகரவேகத்தில் தீயின் நாக்குகள் எல்லாவறையும் சுவைக்க துவíன.அரண்மனை தீயின் வேகத்தில் இடிந்து விழத்துவíகியது.தீ மளமளவென்று பரபியது.வெளியே வந்த அவள் மாடமாளிகைகள்,கூட கோபுரíகள் கடைகள்,தெருக்கள் என்று தீயை கக்கியவாறு நடந்தாள்.நகர் முழுக்க அலறல் ஒலிகள் கேட்டுக் கொண்டே இருந்தது. நான்கு தெருக்கள் சíகமிக்கும் இடத்திலிருந்து கொண்டு அவள் பயíகரமாக சிரித்தாள்.அந்த சிரிப்பின் வக்கிரம் தெரிந்தது. அவள் கையை நீட்டினால் அதிலிருந்து தீப்பந்தíகள் தெறித்து எரிய ஆரம்பித்தன.அவள் நடந்து கொண்டே எல்லாவற்றையும் தீக்கிரையாக்கினாள்.நகரை எரித்து முடித்து விட்டு பள்ளத்தாக்குக்கு திரும்ப வேண்டும் என்று தீசர்ப்பம் நினைத்தது.அவள் உடல் அதிர்ந்து குலுíகியது.அதே வேகத்தில் சக்கரம் போல சுற்ற துவíகினாள்.சற்று நேரத்தில் ஒரு தீ பந்தாக மாறி வானோக்கி பறந்தது.பள்ளத்தாக்கில் வந்த தீ பந்து சுற்றி பழைய நிலைக்கு வந்ததது.அவள் மூர்ச்சையாகி விழுந்தாள்.மயíகி கிடந்த அவளில் இருந்து தீ சர்ப்பம் வெளியேறி பள்ள தாக்கில் இருந்த பிளவினுள் புகுந்து கொண்டது.அவளின் உடம்பில் தீ எரிவது நின்று விட்டது.


Series Navigation