திறவி.
அருண்பிரசாத்.

நட்சத்திரங்கள் சிரிக்கின்றன
ஒளிர்ந்து மறைகிறது
உன் முகம்.
அடர்ந்த தென்னையினூடே
எழுந்து பறக்கிறது
துக்க கழுகு.
வளைகளும், நண்டுகளுமாய்
புதிய கடற்கரைக்களம்
அர்த்தமிழக்கும் என் ஒளியல்கள்.
படரும் சிரிப்பலையில்
உயிர்பெறும் பீனீக்ஸாய் இதயம்.
சேர்ந்து வரைந்த
மணற்கோலங்களில்
கருமையாய் நிழல் கோடுகள்.
நினைவுப் பெட்டகத்தின்
தொலைந்த திறவியாய் நீ.
everminnal@yahoo.com