திருந்தாத கேஸ்

This entry is part [part not set] of 34 in the series 20100926_Issue

சிறி. ப. வில்லியம்ஸ்ஒப்புவித்த
மூதுரையும் நாலடியும்
தேர்வு முடிந்த கையோடு
நினைவிலிருந்து நழுவியது

இன்னொரு அம்பானியக்க முயன்று
மண்ணைக்கவ்விய அப்பாவும்
தலைவிதிப்படி ஆகட்டுமென்று
தண்ணீர் தெளித்து விட்டார்

தாலி கட்டியவள்
தன்பங்குக்கு வாரியிறைத்த
தலையணை மந்திரங்களும்
அதிகாலைககுப் பிறகு
அதிகப்பிரசங்கித்தனமானது

வாழ்க்கைக்கும் வார்த்தைக்கும்
சம்பந்தமில்லாத
நண்பர்களும் நலம்விரும்பிகளும்
நமக்கேன்வம்பென்று
நாவடக்கிச் சென்றார்கள்

ஆன்மிக வகுப்புகளும்
தியானப் பயிற்சிகளும்
ஓவர்டோஸ் மாத்திரைகளை
ஒரேடியாய் வீழ்த்த
சன்மார்க்கமும் சரிப்பட்டு வரவில்லை

கண்டிப்பாயிருக்கும்
களம் மூப்பு பற்றிய கவலையற்று
மெய்ப்பொருள் காணும் வேட்கையுமற்று
வாலிபத்தில் இருந்து
வயோதிகத்துக்கு தாவுகிறேன்

சிறி. ப. வில்லியம்ஸ்

Series Navigation

சிறி. ப. வில்லியம்ஸ்

சிறி. ப. வில்லியம்ஸ்