தியாகம்
பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை

நண்பா! உன்
காதல் கசங்காமல்
காக்க கருதுகிறாயா ?
அப்படியானல் நீ
கந்தலாக வேண்டும்…
காத்லை கடவுளாக
மதிக்க மனம் துடிக்கிறதா ?
அப்படியானால் நீ
கற்பூரமாய் கரையத்தான் வேண்டும்…
காதலுக்கு எதையாவது
தியாகம் செய்வது அவசியம்
அது உன்
உயிராக கூட இருக்கலாம்…
தூண்டிலைபோல் காதல்
மீன் போல் பெண்
இருவருக்கும் இடையே
புழுவாக இருக்கத்தான்
ஆண்கள் பழகிக்கொள்ள வேண்டும்…
பா.ஸ்ரீராம்
மயிலாடுதுறை
balageethan@rediffmail.com