திண்ணை வாசகர்களுக்காக சில விஷயங்கள்.

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

அரவிந்தன் நீலகண்டன்


திருவாளர்.பிறைநதியுடனோ அல்லது இராஜ பரம்பரைத்தனமாக தன்னை ‘நாம் ‘ என அழைக்கும் திருவாளர்.பித்தனுக்கோ (பல ஆளுமை வியாதியோ என்னவோ) பதில் எழுதுவது போல நேரத்தை வீணடிக்கும் செயல் எதுவுமில்லை. , திண்ணை வாசகர்களுக்காக சில விஷயங்கள்.

[ரூமி முதல் தக்கலை பீரப்பா வரையான கடந்தகால ஞானிகளுடனும் கபீர் ஹெல்மின்ஸ்கி, இனையத் கான், டாக்டர் அப்துல்கலாம் ஆகிய நவீன இஸ்லாமிய ஞானிகளிடம் உரிய மன்னிப்புடன் இப்பதில் எழுதப்படுகிறது.- இங்கு இஸ்லாம் என குறிப்பது கிணற்றுதவளைகள் விற்க முயலும் ஒரு அராபிய மேன்மைவாத பயங்கரத்தை.ஒரு வசதிக்காகவே இந்த கிணற்றுத்தவளை எழுப்பும் குரல்களை இஸ்லாம் என அழைக்கிறேன். ]

1. ஹிந்து மத அடிப்படை: வேத மந்திரங்கள் பல அந்தணரல்லாதவர்களால் கொடுக்கப்பட்டவை. தன்னை விஸ்வரூபியாகக் காட்டிய மாட்டிடையன் கூட ‘நீ நான் சொன்னதை செய்யாவிட்டால் நரகம் ‘ என்று சொல்லாமல், ‘உன் அறிவால் தேர்ந்தெடுத்து நீ நன்றாக வாழ்வாயாக ‘ என்று கூறிய சுதந்திரம் ஹிந்து கலாச்சாரத்தின் ஆணிவேர். ‘நான் உன்னைப்படைத்தவன், அதனால் நீ என்னைத்தான் வணங்கவேண்டும் ‘ என்ற இரணியக் குரலுக்கு ஹிந்துதர்மத்தில் இடமில்லை. மனு ஸ்மிருதி ஒரு சட்ட நூல். மற்றெந்த பழம் சட்ட நூல்களையும் போல அது தன் சட்டதிட்டங்களுக்கு புனிதச் சான்றினை அழைக்கிறது. ஒவ்வொரு அராபிய நாட்டிலும் நிலவிய மெளல்விகளுடனான சம்மதத்துடன் நிலவிய மத்தியகாலச் சட்டங்களை மனு ஸ்மிருதியுடன் ஒப்பிட வேண்டும். மத்திய கால அரேபியாவில் நபி என நம்பப்படும் முகமது பிறந்தார் என்கிற காரணத்துக்காகவே அவரது இனத்திற்கு முதன்மை அளிக்கப்பட்டு வந்ததுடன் அது புனிதம் உடையதாகவும் கருதப்பட்டது. மத்திய கால அரேபிய சட்ட நூல்களும் இதற்கு சான்று பகர்கின்றன. (ஆதாரம்: அன்வர் ஷேக் எழுதிய “Islam Arab Nationalist movement”, பக் 31-31)

மாறாக, மறைநூல்களை ஒப்பிட வேண்டுமெனில் உபநிடதம், பகவத் கீதை, திருமந்திரம் ஆகியவற்றுடன் முஸ்லீம்கள் இறைவனால் இறக்கப்பட்டதாக நம்புகிற குரான் என்கிற நூலை ஒப்பிடலாம். திண்ணையிலேயும் கூட இதைச் செய்யலாம். எது எவ்வாறு தேருகிறது எனப் பார்க்கலாம். அதே நேரத்தில் ஹிந்து கலாச்சாரத்தின் மேதமை மனு ஸ்மிருதியை காலத்தால் மாறக்கூடிய ஸ்மிருதியாக ஏற்றதில் உள்ளது. அதேநேரத்தில் மற்றொன்றையும் கூற வேண்டும். முன்னேறும் எந்த மானுடசமுதாயமும் தம் மதநூலுக்கு தன்னைக் கட்டிப்போடுவதில்லை. மாறாக தம் மதநூல்களை தம் அனுபவத்திற்கு ஏற்றவாறு வியாக்கியானம் அளித்து ஏற்கின்றன.ஆனால் மத்திய கால நியதிகளை அனைத்து நாடுகளுக்கும் அனைத்து காலங்களுக்கும் ஏற்றதாக கூறி விற்கும் புரட்டுத்தனத்திற்கு ஹிந்து தர்மத்தில் இடமில்லை.

அஸ்வமேத யாகத்தின் அடிப்படை கூட அறியமுடியாத தளத்திலிருந்து கொண்டு, அஸ்வமேத யாகத்தை குறித்து பேசுகிறார் மனிதர். அஸ்வமேத யாகத்தின் குறியீட்டுத்தன்மை விரிவான ஆராய்ச்சிகள் பல இருக்கலாம் (உதாரணமாக காண்க: இண்டிகா, பாகம். 39, எண். 2, செப்டம்பர் 2002, பக்.191) ஆனால் தூர் வாராத கிணற்றின் கிணற்றுத்தவளைக்கு இதெல்லாம் கண்ணில் பட வாய்ப்பில்லை. என்ற போதிலும் இஸ்லாமில் இருக்கும் பல நம்பிக்கைகளையும், கதைகளையும் வர்ணிக்கலாமா ? இன்றைக்கும் ஹைதராபாத்தில் சிறுமிகளை மணம் செய்து செல்லும் அராபிய கிழவர்களிலிருந்தா அல்லது ஒருவர் மேல் இறை வசனங்களை இறக்குவது தேவதூதனா அல்லது தீய ஆவியா என கண்டுபிடிக்க உருவாக்கப்பட்ட அறிவியல் பரிசோதனையை விளக்கலாமா ?

2. அயோத்தியும் அறிவியல் பார்வையும்:

தொடக்கம் முதலே ஹிந்து இயக்கங்கள் முன்வைத்த வாதம் தெள்ளத்தெளிவானது. இராமர் எங்கு பிறந்தார் என்பதல்ல கேள்வி. இராம ஜென்ம பூமியாக ஹிந்துக்கள் நம்பிய இடத்தில் கோவில் இருந்து அது உடைக்கப்பட்டு அங்கு மசூதி போன்ற அமைப்போ அல்லது மசூதியோ எழுப்பப்பட்டதா என்பதுதான் கேள்வி. பாபரிமஸ்ஜித் நம்பிக்கையாளர்கள் அவர்களுடனான ‘வரலாற்று ஆசிரியர்களும் ‘ செய்தது என்ன ? ஏதோ கேள்வியே இராமர் பிறந்தது எனும் சரித்திர நிகழ்ச்சியைக் குறித்தது போன்ற பிரமையை உருவாக்க முயன்றனர். இவ்வேறுபாட்டை விஸ்வ ஹிந்து பரிஷத் தம் விவாதத்தின் போது அடிக்கோடிட்டுக் காட்டியது.

சர்ச்சை இராமர் பிறந்தாரா அல்லது இராமர் கற்பனையா என்பதல்ல மாறாக இராமரின் ஜன்ம பூமியாக மதிக்கப்பட்ட இடத்தில் ஒரு கோவில் இருந்ததா ? அது இடிக்கப்பட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதா ? என்பதுதான். ஒரு உதாரணம். வேளாங்கண்ணி மாதா ஆலயம் என்னைப் போன்ற ஹிந்து தீவிரவாதிகளால் உடைக்கப்பட்டு அங்கு ஒரு வேல்-நெடுங்கண்ணியம்மன் ஆலயம் கட்டப்பட்டது என வைத்துக்கொள்வோம். இப்போது கேள்வி, அந்த இடத்தில்தான் வேளாங்கண்ணி மாதா ஒரு கால்முடமான ஒரு இடையனுக்கு காட்சி அளித்தாரா இல்லையா என்பதா அல்லது அங்கு ஒரு தேவாலயம் இருந்து அது அரவிந்தனால் உடைக்கப்பட்டதா என்பதா ? அதைப்போல 1992 டிசம்பர் 6 வரை விஸ்வ ஹிந்து பரிஷத்தினர் அளித்த பல அக மற்றும் புற சான்றுகள், அங்கு கோவில் இருந்ததாகக் காட்டின.

மேலும் அவ்விடம் 1992 டிசம்பர் 6 வரை நாற்பது வருடங்களாக செயல்பாட்டளவில் கோவிலாக இருந்தது. நமாஸ் நடத்தப்படவில்லை. எனவே அங்கு உடைக்கப்பட்டது உண்மையில் மசூதியுமில்லை. இத்தனைக்கும் மேலாக அங்கு அகழ்வாராய்ச்சி நடந்த போது அகழ்வாராய்ச்சி அறிக்கை வெளிவரும் முன்னரே சகாமத்தும் அதன் தலைவரும் அகழ்வாராய்ச்சில் ஸ்நானப்பிராப்தி கூட இல்லாதவரான பொருளாதார வரலாற்றாசிரியருமான இர்பான் ஹபீப் படு அப்பட்டமாகவே மடத்தனமான அறிக்கைகளை வெளியிட்டார். ‘மதச்சார்பற்ற ‘ அணியிலிருந்த சில வரலாற்றறிஞர்களே ‘காம்ரேட் ஹபீப் சாகேப் அடக்கி வாசியுங்கள் இல்லாவிட்டால் நமக்கு மூளை இருக்குமிடத்தில் இருப்பது டாரிசெல்லி வெற்றிடமா (with due apologies to comrade whatzhizname) என ஐயப்படுகிறமாதிரி ஆகிவிடும் ‘ என்று கூறுகிற அளவுக்கு அன்னாரின் சில்லுண்டித்தனங்கள் போயிற்று. (அயோத்தி பிரச்சனையில் அறிவியலுக்கு எதிராக போலி மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் நடத்திய லீலைகளை எழுத ஆரம்பித்தால் ஒரு சுவாரசியமான புஸ்தகமாகவே அது மாறிவிடும். தாங்களே வெளியிட்ட நூல்களை தேடிப்பிடித்து மறைக்கிற வேலையில் ஆரம்பித்து, சுண்ணாம்பு பூச்சு இஸ்லாமிய படையெடுப்பாளர்களால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது என்ற உளறல் உட்பட பல திடுக்கிடும் அத்தியாயங்களை கொண்டது அது.

எங்கிருந்து ஆரம்பிக்கலாம் ? டெல்லியின் நிலத்தடி ரயில் பாதைகள் அமைப்பதில் முக்கிய பங்காற்றிய தோஜோ இண்டர்நேஷனலைச் சார்ந்த கனாடிய நிலவியலாளரான க்ளாடு ரோபில்லார்ட் ‘பாபரி அமைப்பிற்கு கீழே ஏதோ ஒரு அமைப்பு உள்ளது. ‘ எனக் கூறியதிலிருந்து ஆரம்பிக்கலாமா ? அல்லது பாபர் மசூதி ஆதரவாளரான நவீத் யார்கான், உச்ச நீதிமன்றத்திடம் சர்ச்சைக்குரிய இடத்தில் அகழ்வாராய்ச்சியை நிறுத்த விண்ணப்பித்து அந்த விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டதிலிருந்து ஆரம்பிக்கலாமா ? (தி ஹிண்டு, 10 ஜூன் 2003). அல்லது உச்ச நீதிமன்றத்தின் முன் பாபரி மசூதி ஆதரவு அறிவுஜீவி வரலாற்றாசிரியர்களான சூரஜ் பானும், ஹபீப் சாகேப்பும் ‘அங்கு அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டிய தேவையில்லை ஏனெனில் பாப்ரி மஸ்ஜித்துக்கு கீழே எதுவும் இல்லை ‘ என திட்டவட்டமாக தங்கள் ஞானதிருஷ்டியில் அறிவித்ததைக் கூறலாமா ? அல்லது இத்தனைக்கு பிறகும் தைரியமாக கதைவிடும் பிறைநதிபுரத்தானின் கிணற்றுத்தவளை கொக்கரிப்பிலிருந்தே ஆரம்பிக்கலாமா ?

3. வீர சாவர்க்கர்-ஜின்னா:

நிச்சயமாக வீர சாவர்க்கர் வீரர்தான் ஜின்னா நீசர்தான். தமது கடும் சிறைவாசத்திற்கு பின்னரும், நேதாஜிக்கு உதவிய வீர சாவர்க்கர் எங்கே ? மதவெறியால் நாட்டைத் துண்டாடிய ஜின்னா எங்கே ? நேருவிற்கு நெருக்கமான அமெரிக்க அரசியல் பார்வையாளரும் இந்தியாவின் முதல் அமெரிக்க தூதருமான செஸ்டர் பவுல்ஸ் பாரத பிரிவினைக்கான காரணங்களை முஸ்லீம் லீக்கின் முரட்டுத்தனமும் காங்கிரஸின் விட்டுக்கொடுக்கும் போக்கும் எனக் கூறுகிறார் (சமாதானத்தின் புதிய பரிமாணங்கள்). உண்மையில் ஹிந்து மகாசபை காங்கிரஸ் அல்லது முஸ்லீம் லீக் அளவுக்கு வலிமை கொண்டதாக, குறிப்பாக ஒரு தேச வரலாற்றினை மாற்றும் அளவுக்கு வலிமை கொண்டதாக இயங்கவேயில்லை. 1940கள் வரை அது சமுதாய பணிகளிலேயே ஈடுபட்டது. உதாரணமாக, ஜின்னா போல வீர சாவர்க்கர் ஏதாவது ‘Direct Action day ‘ என அறிவித்து படுகொலைகளை நடத்தினாரா ? நவகாளி படுகொலைகளுக்கு பழி வாங்கும் விதமாக பீகாரில் ஹிந்துக்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்த போது மகாத்மாவின் கோரிக்கைக்கு இணங்க ஹிந்து மகா சபை ஹிந்துக்களை அமைதி காக்க அழைப்பு விடுத்தது. அதன் சமுதாய சீரமைப்பு பணிகளை பாராட்டியவர்களில் ஒருவர் டாக்டர்.அம்பேத்கர். (டாக்டர் அம்பேத்கர் வீர சாவர்க்கரை புகழ்ந்து எழுதிய வரிகளால் தேதி சகிதம் ஒரு திண்ணையை நிரப்பலாம்.)

4. குரு நானக் முதல் சைதன்யர் வரை: குரு நானக் பாபரை குறித்து எழுதியவற்றை முதலில் கிணற்று தவளையார் படிக்க வேண்டும். குரு அர்ஜுனையும், குரு தேஜ் பகதூரையும், குரு கோவிந்த சிம்மனையும் கொன்ற வெறி பிடித்தவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஒருவர் இந்த ஞானிகளை குறித்து பேசுவது மடத்தனம் மட்டுமல்ல வக்கிரமும் கூட. (முகலாய தாக்கத்தால் சீக்கியம் தோன்றியதாம். ஆனால் அனைத்து சீக்கிய குரு பெயர்களும் ஹிந்து பெயரையே கொண்டவையாக உள்ளதற்கான காரணம் என்னவோ ? உதாரணம்: குரு அர்ஜுன், குரு கோவிந்த், குரு அங்கத் ஏன் ஒரு குரு கூட குரு முகமது சிங் என இல்லை ?) குரு கோவிந்த சிம்மனுக்கு ஆதரவாக பல சூஃபி ஞானிகள் ஒளரங்கசீப்பின் வெறியாட்டத்தை எதிர்த்தனர். குரு கோவிந்த சிங் பெயரை தேச பக்தர் என கூறியதற்காக பிரிவினைக்கு முன் முஸ்லீம்லீக் கூட்டம் குதியோ குதியென குதித்தது. கிணற்றுதவளையாரும், பித்தர்களும் ஒன்றைத் தெரிந்து கொள்ளட்டும்.

ஜாதியை எதிர்ப்பது என்றால் அது முஸ்லீம் தாக்கம் என்பது மடத்தனமானது. மத்திய கால சூழலில் ஜாதிய அமைப்பிற்கு வெளியே சுதந்திரத்தை அளிப்பதாக இஸ்லாம் என்றென்றும் கூறவில்லை. ‘அடிமைக்கு அடிமையை கொல்லும் ‘ மனிதநேயத்தை மாற்ற இயலாத இறைஇறக்க திருமறையாக நம்புபவர்களின் மதம்தான் இஸ்லாம். எனவே சாதியத்திலிருந்து விடுதலையளிக்கும் இஸ்லாமிய மனித நேயம் என்பது அண்மையில் உருவாக்கப்பட்ட பிரச்சார மாயையே. வேதாந்தம் மட்டுமே ஜாதிக்கு எதிரான ஆன்மிகத்தை கருத்தியலாக மத்திய காலத்திலேயே முன்வைத்தது உலக இலக்கிய வரலாற்றிலேயே அனைத்து தரப்பு மாந்தர்களையும் மையநாயகர்களாக காட்டிய முதல் காவிய நூல் நான் அறிய பெரியபுராணம் தான்.

ஆனால் சமுதாய இறுக்கம் சாதிய உறைநிலை ஏற்படவே இஸ்லாமிய படையெடுப்பும், பிரிட்டிஷ் காலனியமும் வழிவகுத்தன. உதாரணமாக இஸ்லாமியராக பிறந்த கபீர் சாதியத்தை ஏற்கவில்லை. கபீர் பந்திகளாக இன்று வாழ்பவர்கள் யார் ? ஹிந்துக்கள். ‘ராமும் ரஹீமும் ஒன்றே ‘ எனும் கபீரின் மையப்புள்ளிக்கும் ‘ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி ‘ எனும் வேத வாக்குக்கும் இருக்கும் ஒருமை ஹிந்துக்களால் ஏற்கமுடிந்தது. சூஃபி ஞானிகளாலும் ஏற்க முடிந்தது. ஆனால் கிணற்று தவளையாருக்கோ அல்லது அவரது சக வகாபிகளுக்கோ ? இன்றைக்கு பாகிஸ்தானில் எத்தனை கபீர்பந்திகள் உள்ளனர் என்பதை விடுங்கள், பாகிஸ்தானிலும், மனித இறைச்சி தின்றவனுக்கு பெண்களை அனுப்பிவக்கும் அளவுக்கு மதவெறியில் மூழ்கிய இஸ்லாமிய நாடு (இடி அமீன் குறித்த ஹிஸ்டரி சானல் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு தெரியும்.) உள்ள அரேபிய கிணறுகளில் அஹமதியாக்களின் நிலை எவ்வாறு உள்ளது ? எனவேதான் பாபா சாகேப் அம்பேத்கர் இஸ்லாமிய ஆட்சியை ‘பெரும் கொடுமை ‘ என்றும் ‘பயங்கரம் ‘ என்றும் வர்ணித்தார்.

5. ஹிந்து வேதம் தெளிவாக ‘மனைவி உடன்கட்டை ஏற வேண்டுமெனக் ‘ கூறுவதாக கூறும் பிறைநதி மீண்டும் வெற்றிகரமாக தன்னை கிணற்றுதவளை என நிரூபிக்கிறார். மனு ஸ்மிருதி கூட மறுமணத்தை ஏற்கிறது. வேதங்கள் மறுமணத்தை வலியுறுத்துகிறது. இத்தனைக்கும் மேலாக எனக்கு என் பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயம் ஸ்மிருதியிலோ புராணங்களிலோ இருக்குமெனில் அதை நான் தூக்கி எறிந்து விடும் சுதந்திரம் ஹிந்து தர்மத்தில் உள்ளது. ஆனால் இஸ்லாமில் ? பத்வாக்களின் வரலாற்றினை பிறைநதி சிறிதே எடுத்துப்பார்க்கட்டும். முகமது நபி அன்று பெரிய சமுதாய சீர்திருத்ததை செய்துவிடவில்லை. மாறாக இஸ்லாமுக்கு முந்தைய அராபிய சமுதாயத்தில் விதவை தன்னை விட வயதில் இளைய ஒருவரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் அளவு விக்கிரக பல தெய்வ வழிபாட்டுச் சமுதாயத்தில் பெண்கள் சுதந்திரம் இருந்தது. (இது ஒன்று போதும் ஏதோ இஸ்லாம் இறங்குவதற்கு முன் அராபியர்கள் பெண் குழந்தைகளை கொல்வதாகக் கூறியதெல்லாம் பிரச்சாரக் கதைகள் என்பதை நிரூபிக்க.)

6. இறுதியாக, ‘கிருபா நிதியோ – பங்காரு லட்சுமனனோ ‘பூநூல் ‘ அணிந்துக்கொள்ள முடியுமா ? சங் பரிவாரம் விடுமா ? ‘ என்கிறார். வேண்டுமானால் திரு பிறைநதியே தான் கிணற்றுதவளையாக இல்லாமல் மனிதனாக விரும்பினால் வாருங்கள் சகோதரரே நீங்கள் ஹிந்துவாகவும்,. உங்களுக்கு அந்தணராக பயிற்சி அளித்து பூணூலும் அணிவிக்க தயாராக உள்ளது ஆர்.எஸ்.எஸ். ஏற்கனவே கேரளத்தில் சங்க அமைப்புகளால் பூணூல் அணிவிக்கப்பட்டவர்கள் தேவஸ்தானத்தால் கோவில்களில் பூசாரிகளாக நியமிக்கப்படவும் தகுதியுடையவர்களாக உள்ளனர். இலங்கையிலும் அவ்வாறே.

அடுத்தது பித்தன் (அவர் தம்மை ஏதோ மடாதிபதி அல்லது ராஜ பரம்பரை அல்லது பல்லாளுமை மனவியாதிக்காரர் போல நாம் என்று குறிப்பிடுகிறார்.) எனவே ராஜாதி ராஜ ராஜ கம்பீர ராஜ மார்த்தாண்ட பித்தர் என்று சொல்வதா அல்லது ஜகத்குரு பகுத்தறிவு சன்னிதான மடாதிபதி பித்தர்வாள் என்று சொல்வதா அல்லது பல பித்தர்கள் பித்தனுக்குள் இருப்பதால் பித்தர்களே என சொல்வதா தெரியவில்லை. எதுவானாலும் அவர்(கள்) கூறியதைப் பார்ப்போம்.

பித்தன்(கள்) தெரிந்து கொள்ள வேண்டும், நான் மேற்கோள் காட்டிய எந்த சங்ககாலப் பாடலுக்கும் நான் பொருள் திரித்து கூறவில்லை. ஏற்கனவே பல நூறு ஆண்டுகளாக பெரும் தமிழ் அறிஞர்களால் கூறப்பட்ட பொருளை இன்றைக்கு மிகச்சிறந்த தமிழறிஞர்களாக உள்ளவர்களிடமும் தெளிவு பெற்ற பின், அதை அவ்வாறே, நான் கூறியுள்ளேன். இதை ஒரு சவாலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். நான் மேற்கோள் காட்டிய பழம் பாடலில் எதை திரித்துக் கூறினேன் என பித்தன் சிறிதாவது நேர்மை இருந்தால் கூறட்டும். அதனை விரிவாக விவாதிக்கலாம். பித்தன் தயாரா ?

இயக்கத் தொடர்பற்ற தனிமனிதர்கள் கொலை செய்வது என்பது உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட விஷயம். அதே நேரத்தில் காந்திஜியுடனான சங்கத்தின் கருத்து வேறுபாடுதான் கொலைக்கு காரணமெனில் அம்பேத்கரும் ஏறக்குறைய ஆர்.எஸ்.எஸ் காரர்கள் காந்தியுடன் எந்த கருத்து வேற்றுமை கொண்டிருந்தனரோ அதைவிட அதிகமான கருத்து வேற்றுமை கொண்டிருந்தனர்.

கோட்ஸே ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து விலகியது உண்மை. அதன் பின் அவர் ஹிந்து ராஷ்ட்ர தள் எனும் அமைப்பைத் தொடங்குகிறார். தன் நாளேட்டில் ஆர்.எஸ்.எஸ்ஸை கடுமையாகத் தாக்குகிறார். ‘காங்கிரஸின் ஏவல் கூட்டம் ‘ என்கிற வசைமொழி உட்பட. படேலும் சரி, நேருவும் சரி இன்றைய அரசியல்வாதிகள் அல்லர். அவ்வாறே கபூரும் இன்றைய மாஜிஸ்ட்ரேட் அல்ல. இதற்கும் மேலாக பண்டிட் நேரு காந்தியை கொலை செய்த கூட்டத்தை குடியரசுதின விழா அணிவகுப்பில் பங்குபெற அழைக்கும் அளவிற்கு போவரா என்பதும் பித்தர் அவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம். (உங்களை சிந்திக்கச் சொல்வது ஒரு இரக்கமற்ற செயல் என நான் அறிவேன் என்றாலும் ஏதோ ஆர்வக்கோளாறில் கூறிவிட்டேன் மன்னிக்கவும்.)

நக்ஸலைட் இயக்கத்தில் இருந்து கொலைக் குற்றத்திற்காக கைதான ஒருவன் கலை இலக்கிய பெருமன்றத்தில் உறுப்பினனாக தன் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தான் என வைத்துக் கொள்ளலாம் அப்போது அவனது வன்முறைக்கு கலை இலக்கிய பெருமன்றத்தை காரணம் காட்டலாமா ? இத்தனைக்கும் கலை இலக்கிய பெருமன்றமும் சரி, நக்சலைட் இயக்கமும் இடதுசாரிகள் என்பதால் அவை இரண்டும் ஒன்றுதான் எனலாமா ? பித்தனின்(பித்தர்களின்) வாதப்படி சந்திரபாபு நாயுடுவினைக் கொலை செய்ய முயற்சித்த நக்சலைட்களில் எவராவது தன் வாழ்க்கையில் எப்போதாவது CPI(M) இல் இருந்திருந்தால் CPI(M) பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட வேண்டும். காந்தி கொலை வழக்கில் கோட்சேயுடன் சேர்ந்து பலர் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டனர். இவர்களில் ஆர்.எஸ்.எஸ் காரர்களாக இருந்தவர்களை விட நக்சலைட் இயக்க கொலைக்குற்றவாளிகளில் பலர் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்திருப்பர். எனவே பித்தன் சிபிஐ(எம்) தடை செய்யப்பட வேண்டும் என்பாரா ?

அடுத்ததாக தான் குற்றம் சாட்டுபவர்களை குறித்து சிறிதே அறிந்து கொள்வது நலம். பரம பூஜ்னீய டாக்டர்ஜி அவர்கள் சங்கத்தை உருவாக்கிய விதம் வீர சாவர்க்கர் அவர்களது சிந்தனையோட்டத்திலிருந்து மாறுபட்ட தளத்தில். சங்கத்திற்கும் ஹிந்து மகாசபைக்கும் எவ்வித ஒட்டுறவும் இருக்க கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தவர் டாக்டர்ஜி. இது குறித்து வீர சாவர்க்கர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். வீர சாவர்க்கரது கண்ணோட்டத்தில் அரசியலுக்கு முக்கியத்துவம் உண்டு. ஆனால் டாக்டர்ஜிக்கோ அரசியல் தொடர்பு சங்கத்திற்கு இருக்கக் கூடாது என்பதில் தீர்மானமான கருத்து இருந்தது. சங்கம் ஆரம்பிக்கப் பட்டு சில ஆண்டுகளுக்கு பின்னரே வீர சாவர்க்கர் முழுமையாக விடுவிக்கப்பட்டார்.

எனவே சங்கத்திற்கும் வீர சாவர்க்கருக்குமான தொடர்பு சித்தாந்த அடிக்கல் நாட்டிய தொடர்பல்ல. மாறாக ஒரு நலம் விரும்பி என்பதற்கு அப்பாலாக இல்லை. இது சங்க அமைப்பிற்கு குறித்து. எதற்கு இத்தனை விளக்கம் என்றால் பித்தர்(கள்) எந்த அளவுக்கு விஷய சூனியமாகவும் ஆனால் சளைக்காத விஷ சுரப்பிகளாகவும் உள்ளார்(னர்) என்பதுதான். வீர சாவர்க்கர் யாரையும் கொல்லவில்லை என்றாலும் அவரால் உத்வேகம் பெற்றவர்களால் கொல்லப்பட்டவர்கள் யார் ? கர்சனுக்கும் வீர சாவர்க்கருக்கும் என்ன வரப்பு தகராறா அல்லது சொத்துப்பிரச்சனையா அல்லது நகர்வாலா சமாச்சாரம் போல் ஏதாவதா ? அல்லது சாவர்க்கருக்கு ஏதாவது பட்டம் வழ்ங்குவதை கர்சன் எதிர்த்ததால் அவரைக் கொன்று கர்சனின் பெற்றோரைக் கொண்டே இது என் மகன் அல்ல என்று சொல்ல வைக்கிற குடமுருட்டி வீரத்தனமா ? ஆக பித்தனின் மூளையில் வீர வாஞ்சி, பகத் சிங், ராஜ்குரு, சுகதேவ், ப்ரீதிலதா வடேகர், சாபேகர் சகோதரர்கள், குடிராம் போஸ், பகா ஜதீன், உத்தம் சிங் ஆகியோரெல்லாம் ‘கொலைகாரன் ‘கள். நேருவும், காந்தியும், ராஜாஜியும் ஒருவேளை ‘உப்புத்திருடன் ‘கள், நேதாஜியும் ராஷ்பிகாரி போஸும் ஒளிந்து வாழ ஓடிப்போன கோழைகள் என்றெல்லாம் சொல்லுவார் என நினைக்கிறேன். ஆனால் பித்தன் மட்டும் ஜென் ஞானி!

திண்ணையில் வீர சாவர்க்கரை தூற்றி வைக்கப்பட்ட வாதங்களின் பண்பினை சிறிதே பார்ப்போம்:

அ) வீர சாவர்க்கர் கோழை ஏனெனில் அவர் மன்னிப்பு கடிதம் கொடுத்தார்.

கொடும் சூழலுக்கு எதிராக போராடும் வீரர்கள் உலகெங்கும் இத்தகைய உக்திகளை கடைபிடித்துள்ளனர். உதாரணமாக, கலிலியோ. கலிலியோ மன்னிப்பு கேட்ட பின் கிறிஸ்தவ பிரச்சாரகராக மாறியிருந்தால் அவரை கோழை எனலாம். அது போல தமது மன்னிப்புக் கடிதத்தின் பின் வீர சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசு ஆதரவாளராக மாறியிருந்தால் அவரை கோழை எனலாம். ஆனால் நேதாஜியின் ஐஎன்ஏ முயற்சிக்கு முக்கிய பங்களிப்பினை வீர சாவர்க்கர் அளித்தார் என்பது நிறுவப்பட்ட வரலாற்று உண்மை. ஜப்பானில் ஹிந்து மகாசபை தலைவராக இருந்த ராஷ்பிகாரிபோஸுக்கு வீர சாவர்க்கர் கடிதங்கள் எழுதினார். தாம் பாரதத்தில் இருந்து மறைவதற்கு முன்னதாக நேதாஜி வீர சாவர்க்கரை மட்டுமே சந்தித்தார். பின்னர் ஜப்பானில் ‘தோன்றிய ‘ நேதாஜி ராஷ்பிகாரி போஸிடமிருந்து இந்திய தேசிய இராணுவத்தின் தலைமைப்பொறுப்பினை பெற்றுக்கொண்டார். ஆஸாத் ஹிந்த் பவுஜின் தொடக்க வெற்றிகளின் போது ஆஸாத் ஹிந்த் வானொலி பேச்சில் வீர சாவர்க்கருக்கு நேதாஜி நன்றியைத் தெரிவித்தார்.

ஆ) வீர சாவர்க்கர் ஒரு ‘கொலைகாரன் ‘. பிரிட்டிஷ் அதற்காகத்தான் அவரை கைது செய்தது.

பிரிட்டிஷ் அரசாங்கமே வீர சாவர்க்கரின் மீது சுமத்தியது கொலைக்குற்றம் அல்ல பித்தனின் உளறல் வாதமான ‘சாவர்க்கர் ஒரு கொலைகாரன் ‘ என்பதல்ல குற்றம். வரலாறு தெரியாத பித்தன் ‘சாவர்க்கர் ஒரு கொலைகாரன் ‘ என்ற உளறலினை மீண்டும் மீண்டும் தெளிவாக சந்தேகத்திற்கிடமில்லாமல் சொல்லவைக்கவே அமைதியாக காத்திருந்தேன். இனி வீர சாவர்க்கர் மீது பிரிட்டிஷ் அரசு சுமத்திய குற்றச்சாட்டின் வரிகள் (ஜூலை 22 1910 அன்று பம்பாய் உயர்நீதி மன்றத்தில் ஸ்பெஷல் ட்ரிப்யூனலில் பிரிட்டிஷ் அரசு சுமத்திய குற்றச்சாட்டு) ‘நாம் குற்றவாளி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரினைத் தொடங்கியதும், பிரசுரங்களின் மூலம் அப்போரினைத் தூண்டிவிட்டது அதற்கான ஆயுதங்களை அளித்தல் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான இலக்கியங்களை வினியோகித்தல் என்னும் குற்றங்களை செய்தவர். ‘ ஒரு தனிநபர் அன்று உலக சாம்ராஜ்ஜியமாக விளங்கிய பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரினைத் துவங்கியதாக வீர சாவர்க்கர் குற்றம் சாட்டப்பட்டார். நம்பிக்கையற்றவர்களை கொலை செய்தால் மறுமையில் கருணையுள்ள (compassionate) ஏகஇறையால் கொடுக்கப்படும் மது-ஆறுக்காகவும் இன்னபிற சுகங்களுக்காகவும் தற்கொலை செய்ய தயாராகும் மூடநம்பிக்கைக் கொண்ட வெறியர்களை ஏவி அப்பாவி மக்களை கொல்கிற ‘புனிதப் போராளி ‘ அல்ல அவர். பிரிட்டிஷுக்கு அவர் போர் குற்றவாளி. தேசபக்தி கொண்ட இந்தியர்களுக்கு அவர் வீர சாவர்க்கர். ஆனால் பித்தனுக்கோ அவர் ‘கொலைகாரன் ‘ என்பதிலிருந்து பித்தன் எத்தகைய நேர்மையற்ற பொய்யர் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.

திடாரென வந்ததையா பெளத்தம் மேலும் ஜைனம் மேலும் காதல். கிறிஸ்தவ மதமாற்றிகள் இந்த இரு பிரிவினரையும் மதமாற்ற புதுபுது திட்டங்களாக வகுத்து வருகின்றனர். அதைப்பற்றியெல்லாம் பித்தர்(களு)க்கு கவலை இல்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் காரன் புத்தரை ஜைனரை நினைக்கிறானா ? என அறிய ஆர்வம் காட்டுகிறார். புத்தர்களும் ஜைனர்களும் இருந்தாலும் செத்தாலும் அவருக்கு கவலை இல்லை. ஆர்.எஸ்.எஸ்காரனை திட்ட ஒரு சான்ஸ் இதில் கிடைக்குமா என்பதுதான் அவருக்கு. இதற்கு பெயர் மனவியாதி என்று நான் சொல்லமாட்டேன் பகுத்தறிவு அதுவும் ஈவெரா பிராண்ட் பகுத்தறிவு. (பித்தர் செய்யும் ஆர்.எஸ்.எஸ் அர்ச்சனையை விட நான் ஒன்றும் பெரிதாக ஈவெரா அர்ச்சனை செய்து விடவில்லை.)

என்றாலும் விஷயத்திற்கு வருவோம். ஆர்.எஸ்.எஸ்ஸின் காலை பிரார்த்தனை ஜைனரையும் புத்தரையும், நானக்கையும் துதிக்கிறது. வேண்டுமானால் அண்மையிலுள்ள ஆர்.எஸ்.எஸ் காரியாலயத்திற்கு சென்று சங்க தினசரி பிரார்த்தனைகளை வாங்கி படிக்கவும். ஜைனரையும், புத்தரையும் மட்டுமல்ல கபீரையும் ரஸ்கானையும் (யாரென்கிறீர்களா ?) துதிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் சிறுவர்களுக்காக நடத்தும் ராஷ்ட்ரோத்தன் பதிப்பகம் வெளியிட்ட சிறுவர் நூல்களை பார்த்திருக்கிறீர்களா ? அஷ்பகுல்லா கானை உங்களுக்கு தெரியுமா ? பகத்சிங்கின் குரு. பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்டவர். இவரது படத்தை பார்த்திருக்கிறீர்களா ? நான் முதன்முதலாக இவரைப்பற்றி தெரிந்து கொண்டது ஆர்.எஸ்.எஸ் பிரசுரம் மூலம்தான். உங்கள் நியாயப்படி ஜின்னாவையும், கஜினியையும் கூறி இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை வளர்க்க வேண்டிய ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரசுரத்திலிருந்து சில வரிகளை படிக்கிறீர்களா ?

இதோ: இது நூலின் தொடக்கம்:

Ashfaqulla Khan, The Pathan patriot who kissed the hangman ‘s noose with the name of Allah on his lips. A youth endowed with a body of iron and a will of steel, he dedicated everything to the service of India and of freedom and challenged the cunning and strength of an empire.

இது நூலின் முடிவு:

It is the birth right and good fortune of every Indian to serve India. To whatever religion a man may belong, his first and highest duty is to serve the country – this was the lesson Ashfaq wrote in the hearts of all people with his blood. He has left a lasting impression on the life of every Indian by his noble martyrdom. May his ideal and his example shine for ever in our hearts.

கஜினி நடத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு மேல் வெள்ளை பூசி போலி மதநல்லிணக்கத்தை ஆர்.எஸ்.எஸ் ஏற்படுத்துவதில்லை. மாறாக, பிறைநதிகளும், இன்னபிற தூர்வாங்காத அராபிய கிணற்றுத் தவளைகளும் இந்திய இஸ்லாமியர்கள் மேல் சுமத்தும் வகாபிய ஒற்றைப்பரிமாண இஸ்லாமுக்கும் அப்பாலாக விளங்கும் ஒரு பாரதிய இஸ்லாமிய பாரம்பரியத்தை உருவாக்கும் சாத்திய கூறு கொண்ட ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ்தான். உண்மையில் ஒளரங்கசீப்பின் வெறியை நியாயப்படுத்தும் ‘மதச்சார்பற்ற ‘ அறிவுஜீவி தாரா ஷுகோவின் தியாகத்தை உதாசீனப்படுத்துகிறார்.

அடுத்ததாக திருமாவளவன் தன்னை ஹிந்து அல்ல என்று சொன்னபோது அது மனு ஸ்மிருதி கூறும் வரையறைக்கு உட்பட்டு சொன்னாரா அல்லது அம்பேத்கர் ஸ்மிருதி கூறும் வரையறைக்கு உட்பட்டு சொன்னாரா என்பது ஒருவேளை பித்தர்(களு)க்கு தான் புரியும் போல. ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஒன்றும் ஹிந்து என்று ஒவ்வொருவருக்காக சான்றிதழ் கொடுப்பதில்லை. மாறாக திருமாவளவன்தான் திடாரென ஹிந்து பெயர் வேறு தமிழன் பெயர் வேறு என்றெல்லாம் ‘கண்டுபிடித்தார் ‘. ஊர் ஊராக சுவர்களில் ‘நாம் இந்து பெயர்களை நீக்குவோம் தமிழ் பெயர்களை வைப்போம் ‘ என்றெல்லாம் எழுதினார்கள். பிறகு இப்போது அதைச் சுட்டிக்காட்டினால் பித்தர் ‘லபோ திபோ ‘ என்கிறார். சொல் சாமர்த்தியத்தால் ஏதோ பாஜக ஆட்சியில் ஹிந்துக்கள் கையில் கடப்பாறையும், திரிசூலமும் ஏந்தி மற்ற மதத்தினரை கொல்ல தெருதெருவாக திரிந்தது போல சித்தரிக்கும் பித்தனே, பாப்டிஸ்ட் சர்ச்சின் NLFTயினரால் எரிக்கப்பட்ட ஹிந்து வழிபாட்டுதலங்கள், ஏழை மாணவர் இல்லங்கள், ஹிந்துக்கள் என்பதற்காகவே, ஹிந்து திருவிழாக்களை கொண்டாடினர் என்பதற்காகவே கொல்லப்பட்ட அப்பாவி ஹிந்துக்களின் எண்ணிக்கை பஜ்ரங்தள் காரர்களால் உடைக்கப்பட்ட ஒட்டுமொத்த சர்ச் கண்ணாடி ஜன்னல்களைக் காட்டிலும் அதிகம். மதச்சார்பற்ற ஆட்சியின் போது ஜம்மு காஷ்மீரில் ஹிந்துக்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தி இன்றைக்கும் அங்கிருந்த ஹிந்துக்களை அகதிகளாக வாழ வைத்துள்ள மதச்சார்பின்மை அதற்கு வக்காலத்து வாங்கும் கீழ்த்தர வக்கிரபுத்திகள் காட்டுமிராண்டி ஜிகாதி இரத்த வெறிஓநாய்கள் ஆகியவற்றினால் உயிரிழந்த ஹிந்துக்களின் எண்ணிக்கையோடு உங்கள் போலி ஒப்பாரிகளுக்கு காரணமான செய்திகளை பட்டியலிடத் தயாரா ? ஹிந்துக்களை கொல்ல இரத்தவெறி பிடித்து AK-47 உடன் அலையும் போலி-மதச்சார்பற்ற தோல் போர்த்திய ஓநாய்க் கூட்டத்துடன் ஒப்பிடுகையில் பஜ்ரங்தள்காரர்கள் LKG சிறுவர்கள்.

அடுத்தது கிறிஸ்தவ-இஸ்லாமிய மண் சார்ந்த மதங்கள் என்பவற்றிற்கு வருவோமா ? பெளத்தம் சீனாவிற்கு போயிற்று அங்கு கன்பூசிய மதத்துடனோ தாவோயிசத்தையோ வேரும் வேரடி மண்ணுமாக களைந்தே தீர என்ன வழி என ஆராயவில்லை. மாறாக, ‘ஹிந்து மதத்தை அழிக்க என்ன வழி ? ‘ என்று அல்லும் பகலும் ஆராய்ந்து வரும் மதங்களை வேரற்ற மதங்கள் என்றுதான் கூறவேண்டும். கட்டாயமாக ஹிந்துக்களில் சிலர் ஏசுவை தங்கள் இஷ்ட தெய்வமாக ஏற்று வணங்கி வருவார்கள் அதே நேரத்தில் ஞானஸ்நானம் பெறாமல் ஹிந்துக்களாகவே இருப்பார்கள். இத்தகைய ஹிந்துக்கள்தான் எங்கள் திட்டத்திற்கு எதிரிகள் என போர் பிரகடனம் செய்யும் மதத்தை என்னவென்று சொல்ல ? உதாரணமாக ஒரு ஆர்ச் பிஷப் கூறுகிறார், ‘ திராவிட இயக்கம் என்பது இந்துமதத்தை அழிக்க நாங்கள் தமிழ் நாட்டில் வைத்திருக்கிற டைம்பாம் ‘. இப்போது பித்தரின் புத்தி படு சமர்த்தாக வேலை செய்யும். அந்த பிஷப் இந்துமதம் என்று சொன்னது இந்துமதத்தில் உள்ள மோசமான விஷயங்களுக்கான ஆகு பெயர் அவ்வளவுதான் என்று சொன்னாலும் சொல்வார்.

ஆனால் இந்துமதத்தை அழிப்பது என்றால் என்னவென்பதை பிட்டுபிட்டு வைக்கிறது திருவிதாங்கூர் சர்ச் மானுவல். ஊர்ப் பெரியவர் மதமாற்றம் செய்யப்பட்டவுடன் எப்படி கிராம தேவதை கோவில்களை ஊர் பெரியவர்களைக் கொண்டு உடைக்க வைத்தனர், அங்கிருந்த தேவியின் ஆபரணங்கள் இங்கிலாந்தில் உள்ள சர்ச்சுக்கு அனுப்பப்பட்டது (என்றைக்கோ அல்ல கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான்.) என்பதை அங்கு காணலாம். மட்டுமல்ல, ஹிந்துக்கள் அனைத்து ஜாதியினருக்குமான பள்ளிகள் ஆரம்பிக்க முயன்ற போது அதற்கு எதிராக சில பிராமணர்களை சர்ச் தூண்டிவிட்டதும் ஆவணப்படுத்தப்பட்ட உண்மை. இதற்கு சரி சமமாக அண்மையில் நடந்த விஷயம். கும்பமேளாவில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வணக்கத்துக்குரிய தலாய் லாமா அவர்களுக்கு முதல்மரியாதை செய்யப்பட்டபோது அதனை சில சங்கராச்சாரியார்கள் எதிர்த்தனர். இதை ‘மதச்சார்பற்ற ‘ பத்திரிகைகள் பெரிது படுத்தின. அந்த சங்கராச்சாரியார்களை கண்டித்து அல்ல. விஸ்வ ஹிந்து பரிஷத்தை கண்டித்து. அடுத்ததாக கல்வி சாலைகளைப் பொறுத்தவரையில். ஹிந்து மடாதிபதிகள் சமூக பொறுப்புடன் சேவை அமைப்புகளை உருவாக்க முயலும்போது ‘மதச்சார்பற்ற ‘ சக்திகள் அதற்கு முயன்ற வரை இடையூறுகளை உருவாக்குகின்றனர். ஏற்கனவே ஒரு உதாரணத்தை காட்டியிருந்தேன். ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் தங்களை சிறுபான்மையினராக்க கோர வேண்டுமானால் எந்த அளவு இடையூறுகளை அவர்களுக்கு மதச்சார்பற்ற அரசு ஏற்படுத்தியிருக்க வேண்டுமென்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன். களத்தில் ஹிந்து கல்வி நிலையங்கள் சந்திக்கும் இடையூறுகள் ஏராளம். அவையனைத்தையும் பட்டியலிட்டால் பக்கங்களுக்கு இப்பதில் நீண்டுவிடும்.

‘கோடிக்கணக்கில் கோவில்களில் குவியும் பணத்தை நம் குழந்தைகளின் படிப்புக்காகத் தரசொல்லி எத்தனை சங்பரிவாரிகள் கேட்டிருக்கிறார்கள் ? ‘ என்கிறீர்கள். சங்கம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இன்றைக்கு பாரதம் முழுமைக்குமாக பரந்த அளவில் ஹிந்துக்களில் நலிந்த பிரிவினரிடையே கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை அளிக்கும் அமைப்புகள் எவருடையவை என்று உங்களுக்கு தெரியுமா ? உங்கள் கேள்வியில் இருக்கும் உண்மையான கேள்விகளுக்கு நன்றி. சங்கத்திற்கு முன் இன்று நிற்கும் திருச்சபையை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் தங்களுக்கு வரும் நிதியில் ஒருபிரிவை சேவைக்கும் மற்றொரு பிரிவை பிரச்சாரத்திற்கும், மற்றொரு பிரிவை ஹிந்து சமுதாயத்தை ஆராய்ந்து அதில் எங்கே தங்கள் மதமாற்றத்தை நடத்தலாம் என அறியவும் செலவிடுவர்.

இந்த ஒவ்வொரு செயலையும் செய்ய ஒரு நல்ல தேர்ச்சி பெற்ற குழு இருக்கும். உதாரணமாக, வீடு வீடாக சென்று கிறிஸ்தவத்தை பரப்ப ஒரு குழு, மருத்துவ சேவை செய்ய ஒரு குழு, ஹிந்துமதத்தை பேய் மதம் என திட்ட ஒரு குழு என இருக்கும். ஒவ்வொன்றும் முழு பண பலத்துடன் இயங்கும். ஹிந்து அறநிலைய துறை என்ன செய்கிறது ? அல்லது எந்த அமைப்பு மாற்றத்தையும் செய்ய இயலாத மடாதிபதிகள் என்ன செய்கின்றனர் ? எவ்வளவு சொத்து இருந்தும் கைகளை கட்டிப்போட்ட படி உள்ளனர். ஒரு நிலையில் அவர்கள் உதிரவே ஆரம்பிக்கின்றனர். மற்றொரு விஷயம். கிறிஸ்தவ அமைப்புகளிலும் கட்டணம் படு கூடுதலாக உள்ள பள்ளிகளும் உண்டு. உதாரணமாக நாகர்கோவிலில் உள்ள கத்தோலிக்க டயோசிஸின் கீழ் உள்ள ‘அல்போன்ஸா மெட் ரிக்குலேசன் பள்ளி ‘யின் கட்டணத்தையும், திருவாவடுதுறை மட உதவியுடன் விஸ்வ ஹிந்து பரிஷத்தால் நடத்தப்படும் ஹிந்து வித்யாலயாவின் கட்டணத்தையும் ஒப்பிட்டால் உங்களுக்கு புரியும். சரி இந்நிலையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? ஹிந்துமதத்தை ஒரு பாதிரி பேய்மதம் என திட்டும் போது ஹிந்து முன்னணிக்காரன் ‘பேயை வணங்குவது யார் ‘ எனக் கூறுகிறான். ஹிந்து முன்னணிக்காரனிடம் நீங்கள் தெரசாவை பார் என்பீர்கள்.

உண்மையில் தெரசாவின் மிஷினரிஸ் ஆஃப் சாரிட்டி செய்துள்ள சேவையையும் பாரத் சேவாஸ்ரம சங்கம் செய்துள்ள சேவையையும் ஒப்பிட்டு பாருங்கள். தெரசாவுக்கு கிடைத்திருக்கும் பிரபலத்தில் ஆயிரத்தில் ஒருபங்கு கூட இல்லாமல் தொழிநோயாளிகளுக்கு இந்த அமைப்பினர் செய்திருக்கும் சேவை குறித்து நீங்கள் அறிந்திருக்க முடியாது. பீகாரில் மிஷினரிஸ் ஆஃப் சாரிட்டியினர் தாங்கள் தொடங்கிய ஒரு தொழுநோயாளி நிலையத்தை, தங்களுக்கு சரியான பயிற்சி இல்லாத காரணத்தால் பாரத் சேவாஸ்ரமத்தினரிடம் ஒப்படைத்தனர். அதே சமயம் தெரசாவினை பிரபலப்படுத்தும் நாவலாசிரியரும், தெரசாவின் உற்ற நண்பருமான டாமினிக் லாப்பயர் இராமகிருஷ்ண மிஷனைக் குறித்து எத்தனை கீழ்தர பிரச்சாரம் செய்தார்! சோனியாவை பொறுத்தவரையில் அவர் குடியுரிமை வாங்கிய விதம் எத்தகையது ? 15 ஆண்டுகளுக்கு பின்னர், தன் பெயரை குடியுரிமை பெறும் முன்னரே வாக்காளர் பட்டியலில் சேர்த்தது அல்லது அதனை தேர்தல் ஆணையம் நீக்கிய பின் தன் கணவர் பிரதமராகிற போது பெற்ற குடியுரிமை எத்தகையது ? தெரசா இவ்வாறா குடியுரிமை பெற்றார் ? இவ்வாறு குடியுரிமை பெற்ற பின் அரசு அமைப்பினைகுடும்பச் சொத்தாக முயன்று நீதி மன்றத்தால் தடுக்கப்படுகிறார்.

அவர் இன்று அரசியலில் ஈடுபட்டு பிரதமராக துடித்தது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டால் அதில் என்ன தவறு ? சங்கராச்சாரியார் என்ன செய்தார் என்கிறார். ஏனோ சங்கர நேத்ராலயா அவர் கண்களில் தெரியவில்லை. ஒரு நாளைக்கு ஏறத்தாழ 1500 ஏழை மக்கள் சங்கர நேத்ராலயா மூலம் பயன் பெறுகின்றனர். சங்கராச்சாரியார் ஒரு மடத்தின் ஆச்சாரியர்.

ஆனால் மாதா அமிர்தானந்தமயி அவர்கள் ? உலகெங்குமுள்ள ஹிந்துக்கள் அவரை ஆச்சாரியர்களுக்கெல்லாம் மேலான அத்வைத நிலையை அடைந்த ஜகன்மாதாவாக அவர் பாதங்களை பணிகின்றனர். அன்னை உதித்த குலம் எது ? மீனவ குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணின் காலில் எத்தனையோ ‘பிராமணாள் ‘ வரிசையில் நின்று விழுகின்றனரே! ஏன் அண்மையில் அத்வானி சக்தி பீடம் பங்காரு அடிகளார் பாதங்களில் பணிந்து நின்றாரே பங்காரு அடிகளார் பிராமணரா ?

அத்தனை பேர்கள் முன்னிலையிலும் சின்னதாயி எனும் மூதாட்டி விருது வாங்கி தன் காலை தொட்டதும், பதறி அந்த அம்மாவின் கால்களை தொட்டாரே வாஜ்பாய் இதெல்லாம் பித்தர்கள் கண்ணில் தெரியாததில் வியப்பில்லை. ஏனெனில் சித்தாந்த வளர்ப்பு அப்படி. சங்கராச்சாரியார்களின் கால்களில் விழுந்து அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்பவன் தான் ‘ஹிந்து ‘ என்றோ அல்லது வருணாசிரம மனுக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, சாதி பெயர்களை சொல்லி இந்திய சகோதரனை தள்ளி வைப்பவன் தான் ‘ஹிந்து ‘ என்றோ சங்கம் கூறவில்லை.

மனு ஸ்மிருதியை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொண்டதுமில்லை. ஏதாவது ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவர் அவ்வாறு கூறியுள்ளாரா ? ‘அவரால் அப்படி கூறமுடியாது எனவேதான் கூறவில்லை ஆனால் அதுதான் அவர்களது மனப்பாங்கு ‘ என பித்தன் கூறக்கூடும். டெலிபதி ? ஆனால் சாதியத்துக்கு எதிராக ஹிந்துக்களிடையே உழைக்கும் ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ் தான். இன்றைய தினத்தில் எந்த ஹிந்து அமைப்பு நலிவுற்ற குழந்தைகளுக்கு அதிக பால்வாடிகளை நடத்துகிறது ? எந்த ஹிந்து அமைப்பு தொழில் செல்ல வேண்டிய நிலையிலிருக்கும் குழந்தைகளுக்கு அதிக இரவுபள்ளிகளை நடத்துகிறது ? எந்த ஹிந்து அமைப்பில் பயிற்சி பெற்ற வனவாசி மாணவர்கள் மகாராஷ்ட்ரத்திலும்,மத்திய பிரதேசத்திலும் மாநில அளவிலான தேர்ச்சிகளை பெற்றுள்ளனர் ? ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் நடத்தப்படும் இயக்கங்களால் – நீங்கள் சங் பரிவார் என வெறுப்புடன் கூறும் அமைப்பினால். நிற்க, நீங்களும் ஹிந்து சமுதாய உறுப்பினர் என்னும் முறையில் என்ன செய்துள்ளீர்கள் ? அல்லது ஹிந்து சமுதாயம் எனும் சிறுவட்டங்களுக்கெல்லாம் அப்பால் நிற்கும் ஞானியா நீங்கள் ?

http://www.sufism.org/society/articles/HowIsDialogPossible.htm

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்