தி.கோபாலகிருஷ்ணனின் ஹைகூ கவிதைகள்
தி.கோபாலகிருஷ்ணன்

1.
கடிதம் வராமல்
சோர்ந்த வேளையில்
அழைப்பிதழ் வந்தது.
2.
எந்த முகவரிக்கு
அஞ்சல் பெட்டியில்
எச்சமிட்டது காகம் ?
3.
பசுவையும் கன்றையும் பிரித்துக் கட்டி
பால்காரி அமர்ந்தாள்
மார்பில் குழந்தையுடன்
4.
பாக்கெட்டில் பணம் இருக்கும்
கவலையின்றி
பிக்பாக்கெட்
5.
இளைய தாரத்தை
சிரித்து வரவேற்கும்
காலண்டர் குழந்தைகள்
gk_aazhi@rediffmail.com
தி.கோபாலகிருஷ்ணனின் ஹைகூ கவிதைகள்
தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

1.
இருட்டறைக்குள் தள்ளி அடைத்தேன்.
இருட்டையே விரட்டி விட்டது
தீபம்.
2.
பனி முத்துக்களை
இந்தக் கிண்ணத்தில் த ‘ன் சேர்த்து வைத்தேன்
எங்கே ?
3.
திருட்டுப் பூனை
குடித்துவிட்டது
கன்றிடமிருந்து திருடிய ப ‘லை
4.
சிலந்தி வலையில்
சிக்கியது
பனித்துளி
5.
ஓட்டையை அடைக்குது
ஊசி
குத்திக் குத்தி
***
gk_aazhi@rediffmail.com
thigopalakrishnan@ambalam.com
தி.கோபாலகிருஷ்ணன்