தாகூரின் கீதங்கள் – 35 யாத்திரைப் பயணி நான் !

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


கனிவு முகத்துடன்
காட்சி அளிக்கும் தீரனே !
குறிவைத்து ஏவு உன் அம்பை !
என் விலா எலும்பைத் துளைத்து
எதிரொலிக் கட்டும்
அரவம் மாறி !
அதிரச் செய்யட்டும் எனது
இதயத்தை
கடும் வேதனை கொடுத்து !
இளமைத் திருவுருவம்
எடுத்தோனே !
இடி முழக்கும் உன் சங்கை
எடுத்தூதி
எம்மை உன் அழைப்பு
இழுத்துச் செல்ல
அழுத்தி அறிவிப்பாய் !

++++++++++++++

விழித்தெழ வேண்டும் நாம் !
வீட்டுப்படி தாண்டி
வெளிநடக்க வேண்டும் நாம் !
நமதுயிரை
அர்ப்பணிக்கத் தயாராய் இருப்போம் !
சொற்களைக்
கவனமாய்க் கேட்போம் !
திரும்பிப் பாரோம் !
கண்ணீர் விடோம் !
அடிமைப் பிணைப்பு எமைப்
பிடித்துப் போடாது !
தனிப் பாதை தேர்ந் தெடுக்கத்
தயக்க மில்லை !
காலம் பாரோம் ! நாள் பாரோம் !
கணக்கிடோம் !
மனிதர் தம்மை
எடை போடோம் !
ஆத்திரக் காரர் நாமெல்லாம்
யாத்திரைப் பயணிகள் !

++++++++

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 8, 2008)]

Series Navigation