தனித் தமிழ்

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

ஜோதிர்லதா கிரிஜா



தனித் தமிழில் எழுதுவது அபத்தம் என்று ஒரு போதும் நினைத்தவள் அல்லேன். மாறாக, பிற மொழிச் சொற்களை மிகப் பொ¢ய அளவுக்குத் தவிர்த்து, இயன்ற வரையில் தனித் தமிழில் எழுதி வந்துள்ளேன்.(கதை மாந்தா¢ன் உரையாடல்கள் மட்டும் விதி விலக்கு.) முப்பது ஆண்டுகளுக்கும் முன்னால் பழம் பெரும் இதழாளர் திரு நவீனன்அவர்கள் தினமணி கதிரில் எனது புகைப்படத்துடன் வெளியிட்டிருந்த குறிப்பைப் பற்றிக் கூற வேண்டிய கட்டாயம் நேர்ந்துள்ளது..(இப்படி ஒரு சேதியைச் சொல்லித் தம்பட்டம் அடித்துக்கொள்ளுவதற்கும் பீற்றிக்கொள்ளுவதற்கும் நேர்ந்தமைக்குத் திண்ணைக் கட்டுரையாளர்களே பொறுப்பேற்க வேண்டியவர்களாகிறார்கள். அந்தப் பக்கத்தை அப்படியே நகல் எடுத்து அனுப்பும் வசதி என்னிடம் இல்லை. தவிர, அக்குறிப்பு வெளிவந்த இதழ் அகப்டவும் இல்லை. எனினும் அதன் ஒரு பகுதியை மட்டும் கூறுகிறேன். நம்புகிறவர்கள் நம்பட்டும். நம்பாதவர்கள் நம்பாதிருக்கட்டும்.)

என்னைப்பற்றிய குறிப்புகளிடையே,” பஸ் ” என்னும் சொல்லைத் தவிர்த்து, “பேருந்து” என்று எழுதுவதில் எனக்குள்ள ஆர்வத்தை நவீனன் புகழ்ந்திருந்தார் என்று சொன்னால் போதும் என்று நினைக்கிறேன்.

ஒரு மொழியின் மீது ஒருவர்க்கு இருக்கக்கூடிய ஆர்வம், பற்று ஆகியவற்றுக்கும் அதன் பாற்பட்ட வெறிக்குமிடையே உள்ள வேறுபாடு எல்லாருக்குமே தொ¢ந்ததுதான் என்று நான் நினைத்துவிட்டதால் அதை விளக்கவில்லை.

எனினும் இப்போது கூறுகிறேன் – வட இந்திய மாநிலங்களில் பேருந்துகளிலும் கார்களிலும் வீட்டுக் கதவுகளிலும் இந்தி இலக்கங்களை இந்தி வெறியர்கள் எழுதுகிறார்கள். இது மொழிவெறி சார்ந்த செயல் என்று தோன்றுகிறது. இதனால் வடநாட்டுக்கு வரும் மற்ற மாநிலத்தவர்க்கு ஏற்படும் இன்னல்கள் பற்றிக் கவலைப் படாதவர்கள் இந்தி வெறியர்கள் என்றும் தோன்றுகிறது. குழப்பமும், இடையூறும் மற்றவர்க்கு ஏற்படாத முறையில் மொழி மாற்றங்களைச் செய்யலாம்தான். இதை மறுக்கவில்லை. (கார் என்பதை ‘நெய் ஊர்தி’ என்று என்னைப் பொறுத்த வரையில் எழுதமாட்டே -. பெற்றோலில் ஓடுகிற எல்லா ஊர்திகளுமே நெய் ஊர்திகள்தான் என்பதால். கார், லா¡¢, ஆட்டோ ¡¢க்ஷா, டாக்சி போன்றவற்றையும், கா·பி போன்ற சொற்களையும் அப்படியே பயன்படுத்தலா மென்று தோன்றுகிறது. உலகம் சுருங்கி வருவதை முன்னிட்டும்,’ யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்னும் தமிழா¢ன் உயர்ந்த குறிக்கோள் கருதியும், அனைத்துலகத்திலும் பரவியுள்ள சில சொற்களை அப்படியே ஏற்கலாம் என்று தோன்றியதால் அவ்வாறு குறிப்பிட நேர்ந்தது. ‘தனித் தமிழில் எழுதுகிறேன் பேர்வழி என்று’ எனது கட்டுரையில் குறிப்பிட்டதன் அடிப்படை இதுதான். தனித் தமிழில் எழுத முயல்கிறவர்களையோ, தனித்தமிழில் எழுதுகிறவர்களையோ நான் குறைவாக மதிப்பிடவில்லை என்பதை, என் எழுத்துகளை வாசித்தவர்கள் அறிவார்கள். ஏனெனில் நானே தனித்தமிழில் எழுத முயல்கிறவள்தான்! கட்டுரையாளா¢ன் துணிபு சா¢யெனில், என்னை நானே இழிவுபடுத்திக் கொள்ளுவதாகவே அந்தச் சொற்றொடர் பொருள்படும்!. Buzzer எனும் ஆங்கிலச் சொல்லுக்கு “முரல்” என்னும் தமிழ்ச் சொல்லையும், terminus என்பதற்குக் “கடைநிறுத்தம்” என்பதையும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திவருபவள் நான். மேலும் சில சொற்களைச் சொல்லிக் கட்டுரையை
நீட்ட விரும்பவில்லை.

“சிறு நீர்ப் பாசனம்” என்பது ரசக்குறைவாக இருப்பின், “குறு நீர்ப் பாசனம்” என்று
சொல்லலாமே!

செய்தித்தாள்கள், பிற இதழ்கள் ஆகியவற்றை வெளியிடும் அலுவலகங்களில் சிறப்புத் தமிழைப் பாடமாக எடுத்துப் படித்து அதில் தனித் திறமை பெற்றவர்களைப் பிழை திருத்துவோராக அமர்த்தவேண்டும் எனும் கருத்து ஏற்கெனவே சிலர் சொன்னதுதான் என்பது தொ¢யாது. தொ¢ந்திருப்பின், ‘ஏற்கெனவே சிலர் சொல்லியுள்ளது போல் பத்தி¡¢கை அலுவலகங்க்ளில் தமிழ்ப் புலமை படைத்தோரைப் பிழை திருத்துபவராய் நியமிக்க வேண்டும்’ என்றுதான் எழுதுவேனே தவிர, அது நான் சொல்லும் கருத்துப் போல் ஒருகாலும் எழுத மாட்டேன். 1980களின் தொடக்கத்தில் தரமணியில் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் நடத்திய ஒரு மாநாட்டில் இக்கருத்தை நான் கூறியது அங்குள்ள ஆவணங்ககளில் பதிவாகியுள்ளது. அதற்கும் முன்னால் இதே கருத்தை யாரேனும் சொல்லியிருப்பார்கள்தான். மறுக்கவில்லை.
இந்தக் கருத்து என்னுடையது மட்டுமே என்று நான் ஒன்றும் சொந்தம் கொண்டாடவில்லை!

‘அவைத்தலைவர்’ போன்ற சில தனித் தமிழ்ச் சொற்களைச் சிலர் எதிர்த்தார்கள் என்பதோ, அவ்வாறு எதிர்த்தவர்கள் யார் என்பதோ எனக்குத் தொ¢யாது. அவர்கள் யாரார் என்பதையும் நண்பர் தொ¢வித்தல் நல்லது. தகவலாக என் போன்றோர் பயன்படுத்த உதவும்.

jothigirija@hotmail.com . . . . . . . . .

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா