தடுத்து விடு

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

பா.சத்தியமோகன்


நிகழ்ச்சியின் மறுபக்கம் காணும் கண்ணை
மூடிவிடு இறைவா.

நான் கொடுக்கிறேன்
‘ஏமாறுகிறான் இவன் ‘ என அவன் நினைப்பதை
அறியாமல் தடுத்துவிடு இறைவா.

மறுபக்கம் காணும் கண்
நிகழ்காலத்தை அச்சமாக்குகிறது ஆதலால்
நன்மை செய்யும் ஒரே கண்
நன்மை காணும் ஒரே கண்
அதுவே தேவை எக்கணமும் என் கண்ணுக்கு.

*****
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்