சொல்லிப் பிாிதல் உனக்குச் சுகமே! நினைவு நீங்கா எங்கள் தோழனுக்கு எங்கள் அஞ்சலி!

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

தாஸ்


ஈழப்போராட்டத்தினை துவக்கி வைத்த முன்னோடிகளில் ஒருவரும், |ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்| நூலினை எழுதியவரும், சபாலிங்கம் மறைந்தபோது சபாலிங்கம் நன்பர்கள் வட்டத்தினை உருவாக்கி |தோற்றுத்தான் போவோமாஹ தொகுப்பினை வெளிக்கொணர்ந்தவரும், இலக்கியச் சந்திப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரும், புகலிட அரசியல் இலக்கியத் தளத்தில் உளவியல், இருத்தலியல், அமைப்பியல், பின்அமைப்பியல், பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் என்று கலை இலக்கிய, சமூகவிஞ்ஞான தளங்களில் தோன்றுகின்ற பல்வேறுபட்ட சிந்தனைக்; கூறுகள் குறித்தும் தீவிர விமர்சனங்கள் குறித்தும் ஒவ்வொரு இலக்கியச் சந்திப்பின் பின் இரவுகளிலும் எங்களுடன் கதைத்தும் பேசியும் விவாதித்தும் வந்த சிதம்பாி புஸ்பராசா அவர்களின் குரல், அவரது ஜம்பத்தி நான்காவது வயதில,; பாாிஸ் நகாில், சொல்லிப்பிாிந்து அடங்கிவிட்டது.

ஆம், அப்படித்தான் சொல்ல முடிகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அவர் சுகவீனமுற்று இருக்கிறார் என அறிந்து தொடர்பு கொண்டபோது அவர் சொன்னார் ” தாஸ!; உங்கள் எல்லோருக்கும் சொல்லிப் பிாிகின்ற சுகம் எனக்கு கிடைத்திருக்கிறது.” எனது குரல் தளுதளுத்தது இல்லை அண்ணை என்று இழுத்தேன.; தொடர்ந்து சொன்னார் ”நாங்கள் ஒருபோதும் சாவைக் கண்டு அழவோ அஞ்சவோ கூடாது. என்ன ஆமிக்காரன் ஆய்க்கினை செய்யயிக்க போகாத உயிரை கான்சர் கொண்டு போகப்போகுது அவ்வளவுதான் கடைசியாக ஒருக்கா மையிலிட்டிக்குப் போகவேண்டும் போல இருக்கு. சாி அதை விடு ஸார்த்தாின் நூற்றாண்டில் சாகின்ற வரம் எனக்குக் கிடைத்திருக்கிறது” என அந்த இறுதித் தருணத்திலும் பிற எவரையும் விடவும் ஒருமனிதனின் ஆக்கத்தில் சுதந்திரத்திற்கும் நிர்ணயத்துக்கும் உாிய இடத்தினை வழங்கியவர் அவர்தான் என ஸார்த்தர் பற்றிய தத்துவம் பேசினார்.

தன்னை எப்பொழுதும் ஒரு பொியாாிஸ்டாகவே சொல்லிக் கொள்ளும் அவர். நவீன போக்குடன், பழைய ஜதீகங்களுக்கெதிராக ஒரு காட்டுத் துணிச்சலுடனே இயங்கிவந்தார். குருட்டுத்தனமான வழிபாடுகள் குறித்தும் அரசியல் வன்முறைகள் குறித்தும் ஓங்;கி ஒலித்த அவர் குரல் அடங்கிய சூழலில் ஒரு துணிச்சலான அரசியல் செயற்பாட்டாளனை இழந்த வெறுமையில் நாம் எல்லோரும் தள்ளப்பட்டுள்ளதாக நான் உணர்கின்றேன்.

ஏப்பொழுதும் அவரை நான் ”அண்ண” என்று அழைத்தாலும் அவர் என்னை தோழர் என்றே விளித்துக் கூறுவார். இறுதியாகக் கூறுகின்றேன் போய்வா தோழனே!

ஈழத்தில் தமிழரும் அவர்கள் வரலாறும் இருக்கும் வரை உன் சுவடும் இருக்கும்.

சொல்லிப்பிாிதல் உனக்குச் சுகமே! அவாின் பிாிவால் துயருறும் மனைவி மீரா, பிள்ளைகள் கீதாஞ்சலி, விதுரன், துரோணன், வீஸ்மன் மற்றும் உறவினர் நண்பர்கள் துயாில் நாமும் இணைந்துகொள்கிறோம்.

இனி இலக்கிய நண்பர்கள்

தாஸ் (டென்மார்க்)

thasan@vejen-net.dk

Series Navigation