செந்தமிழ்ப் பாட்டன்

This entry is part [part not set] of 28 in the series 20030504_Issue

பசுபதி


செல்லரித்த பண்டையோலை சென்றலைந்து தேடியே
புல்லரிக்க வைக்குமினிய புத்தகங்கள் பொன்னொளிர்
செல்வம்யாவும் சேர்த்தவர்க்கென் சென்னியென்றுந் தாழுமே
. . . சீலன்சாமி நாதனுக்கென் சென்னியென்றுந் தாழுமே (1)

தேமிகுந்த காப்பியங்கள் தீச்செலாமல் காத்தவன்;
தோமிலாத பார்வைகொண்டு தொன்மைநூல்கள் ஆய்ந்தவன்;
சாமிநாத ஐயனுக்கென் சென்னியென்றுந் தாழுமே
. . . சங்கநூல்கள் மீட்டவர்க்கென் சென்னியென்றுந் தாழுமே (2)

இஇன்றுநேற்றி ரண்டுகாலங் கூடும்பால மாகியே
கண்டகாட்சி சொந்தவாழ்வு காகிதத்தில் வார்த்தவன்;
தென்னிசைக்கு நண்பர்முன்பு சென்னியென்றுந் தாழுமே
. . . செந்தமிழ்தன் பாட்டனுக்கென் சென்னியென்றுந் தாழுமே. (3)

~*~o0o~*~
உ.வே.சாமிநாதய்யர் நினைவுநாள் கவிதை
pas@comm.utoronto.ca

Series Navigation