சூழலியல் கவிஞர், மற்றும் பெண் சாதனையாளர் விருது பெற்ற வைகை செல்வி

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

அறிவிப்பு


வாழ்த்துகிறோம்

சூழலியல் கவிஞர், மற்றும் பெண் சாதனையாளர் விருது பெற்ற வைகை செல்விக்கு

திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரி பிப்ரவரி 24 ,25 ஆகிய தேதிகளில் நடத்திய ‘ அறிவியல் தமிழும் கணிணிப் பயன்பாடும் ‘ எனும் கருத்தரங்கில் நிறைவு விழா நிகழ்ச்சியில் ‘ சூழலியல் கவிஞர் ‘ என்ற விருதும்

உலக மகளிர் தினத்தை ஒட்டி பொதுத்துறை நிறுவனங்களின் பெண்கள் அமைப்பு , நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் பிரிவு, எழுத்து மற்றும் சமுதாய சாதனைகளைப் பாராட்டி ‘ பெண் சாதனையாளர் ‘ எனும் விருதும்

கவிஞரும் மாசுக் கட்டுப் பட்டு துறையில் பணி செய்பவருமான வைகை செல்விக்கு வழங்கப் பட்டிருக்கின்றது.

நல்ல பெயர் எடுக்க நாள் செல்லும் என்பது கண்கூடாய் இருக்கின்ற இந்த கால கட்டத்தில் , அதையும் தொடர் உழைப்பின் பரிசாய் பெற்று தன் பணிகளில் எழுத்தாய் இருந்தாலும் அலுவலக பணியாய் இருந்தாலும் நிறைவையே வெற்றியாய் கை சேர்த்திருக்கும் வைகை செல்விக்கு, எனது சார்பிலும் பாரதி இலக்கிய சங்க சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லி மகிழ்வை பகிர்ந்து கொள்கின்றேன் .

திலகபாமா

—-

mathibama@yahoo.com

Series Navigation