சி. கனகசபாபதி நினைவரங்கு

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

திலகபாமா


நடப்பியல் யதார்த்தமோடு

உடன் படாக் கருத்தை

உரைக்கின்ற மொழிகளை

விசாரணைக்கு உள்ளாக்குவோம்

இந்த வசனத்தை இந்த அரங்கின் முக்கிய முழக்கமாக வைத்து நிகழ்வு துவங்கியது

28.12.05 அன்று பாரதி இலக்கிய சங்கம் நடத்திய சி. க நினைவரங்கு, பல்வேறு பட்ட தங்களிலிருந்து படைப்பாக்கத்தை வாசிப்பு இளம் தலைமுறையினரிடையே வலுப்படுத்தும் நோக்குடன் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.

காலையில் நடந்த சி. கனகசபாபதி அரங்கத்தில் பேராசிரியர் தோதாத்ரி கனகசபாபதியின் எழுத்துக்களிலிருந்து அவரை தான் உணர்ந்த இடம் பற்றி விரிவாக உரையாற்றினார்,.

(திலகபாமா, ஏ ராஜலட்சுமி, விழி பா இதயவேந்தன், தோதாத்ரி,பொன்னீலன்)

அவரது உரையில்

புதுமைப் பித்தன் எனும் படைப்பாளியும் சி. க எனும் விமரிசகரும் எங்கு ஒன்றுபடுகின்றார்கள் என்றால், இலக்கியம் சுத்தமாக இருக்க வேண்டும் , பிரசாரமாக இருக்கக் கூடாது, சமூக விமரிசனம் இருக்க வேண்டும். எனும் இடத்தில் ஒன்று படுகின்றார்கள் கனகசபாபதியின் கட்டுரைகளில் ஆய்வு பாணி அதிகமாக தென்படுகின்றது. சுத்த இலக்கியம் அதற்குள் படைப்பாளி வரக் கூடாது. படைப்புகள் நனவிலி மனத்தின் வெளிப்பாடாக வருகின்றது என்பது சத்தியமான உண்மை என்ற போதும் நனவிலி மனத்தில் விகாரங்களை விளங்காத மொழியை மட்டும் தான் கூறுவேன் என்றால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது நினைவிலி மனத்தின் மூலமாக யதார்த்தம் வெளிப்பட வேண்டும்.

சங்க காலம் தொடங்கி நவீன காலம் வரைக்கும் நிறைய ஆராய்ச்சி செய்திருக்கின்றார். புதுக் கவிதைகள் மரபு வழி ஆய்வு செய்திருக்கின்றார். ரசனை உருவம் இரண்டையும் இணைத்துக் கொண்டு அவரது விமரிசனங்கள் இருந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய விமரிசன உலகில் இலக்கிய உருவத்தை மையப் படுத்தி விமரிசன கட்டுரைகள் எழுதியதில் அழுத்தமான அசைக்க முடியாத பங்கு சி. கவினதுஎன்றார்

(பொன்னீலன், விழி பா இதயவேந்தன், அமிர்தம் சூர்யா, வைகை செல்வி)

தொடர்ந்து பேராசிரியர் பொ. நா கமலா அவர்கள் ‘புதுக்கவிதை விமரிசனத்தில் சி. க வின் இடம் ‘ எனும் தலைப்பில் அவரது விமரிசனம் இன்றைய கவிதை போக்குகளுக்கு எவ்வளவு பிரயோசனமாக இருக்கின்றது என்பதை பற்றி பேசினார்.

ஆவணப் படங்கள் திரையிடல் நிகழ்வில் ‘வெற்றிகளின் மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு ‘ எனும் படம் திரையிடப்பட்டது. நோர்வேயில் வசித்து வரும் புகைப்படக் கலைஞர் தமயந்தியின் ‘ ஆதலினால் காதல் செய்வீர் ‘ எனும் ஒளியோவியத் தொகுப்பு திரையிடப் பட்டது. அசையாத படங்கள் பலரது நெஞ்சையும் அசைத்து விட்டிருந்தத . சி. சு செல்லப்பா விடம் எடுக்கப் பட்ட பேட்டி( யதார்த்தா பென்னேஸ்வரன் நிதிவசதி இல்லாததால் முழுமையாகாத) திரையிடப் பட்டது. பல வரலாற்று தகவல்களை உள்ளடக்கிய ஆவணம் இது.

(பொன்னீலன், விழி பா இதயவேந்தன், அமிர்தம் சூர்யா)

‘மையம் கொண்டுள்ள மாற்றிதழ் அதிர்வும் தமிழ் வெளியில் அதன் பிரதி பலிப்பும் ‘ எனும் தலைப்பில் அமிர்தம் சூரியா வடக்கு வாசல் இதழையும் பெண்ணே நீ இதழழயும் மையமாகக் கொண்டு பேசியது பல்வேறு சிந்தனைகளை பலருக்குள் கிளப்பியிருந்தது. அதேநேரம் கட்டுரையாளர் , ஒரு கருத்தையும் மாற்றுக் கருத்தையும் வைத்துக் கொண்டே போன தொனி , பார்வையாளர்களை ஒரு படைப்பாளியாய் உங்கள் கருத்து என்ன ? என்று தப்பிச் செல்ல விடாது கேள்வி கேட்க வைத்திருந்தது.

(தோதாத்ரி)

பெண்ணே நீ இதழ் பற்றிய வைகைசெல்வி விமரிசனமும், கையோடு இன்றைய எழுத்தின் வக்கிர , கருத்துச் சுதந்திரம் எனும் பேரில் இலக்கியம் வணிக மயமாக்கப் படுவதால் பெண்ணுக்கு நேருகின்ற அவலத்தை சுட்டிக் காட்டுவதாய் இருந்தது. நிகழ்வுக்கு வந்திருந்த மாணவி வளர்மதி வடக்கு வாசல் இதழை பற்றிய விமரிசனத்தை முன்வைத்தார், சுகுமாரன், கலாப் பிரியா கவிதைளுக்கு எதிராக நிறைய கேள்விகளை எழுப்பினார்.அதிலிருந்த நேர்காணல்களை வெகுவாக பாராட்டினார். வானகமே வையகமே சுற்றுப் புறச் சூழல் சார்ந்த இதழை முத்து பாரதி விமரிசன உரை நிகழ்த்தினார். . கவிஞர் வில் விஜயன் ஏற்புரை வழங்கினார்.

(வானகமே வையகமே கெளரவ ஆசிரியர் வில் விஜயன்)

மாலை 4. 30 மணிக்கு பரிசளிப்பு விழா வும், சி கனகசபாபதியின் ‘ புனைகதைகள் ‘ நூல் வெளியீடும், நடை பெற்றது. சி. கனகசபாபதி நினைவுப் பரிசை எனக்கான காற்று தொகுப்பின் ஆசிரியரான ஏ. இராஜலட்சுமி யும் சி. சு செல்லப்பா நினைவுப் பரிசு மலரினம் மெல்லிது எனும் நூலின் ஆசிரியர் விழி. பா இதயவேந்தனுக்கும் பொன்னீலன் விருதை வழங்க லச்மி அம்மாள் ரொக்கப் பரிசு ரூபாய் 5000 வழங்கினார். இருவரது ஏற்புரையும் , பொன்னீலனது நூல் அறிமுக உரையும் நிகழ்ந்தது.

அந்த உரையில் சி. க 40 ஆண்டுகாலம் விமரிசன உலகில் மிகச் சிறப்பாக பணியாற்றிய பல்கலை வல்லுநர். அன்று விமரிசகர்கள் ஆங்கிலம் , அல்லது சமஸ்கிருதம் படித்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் விமரிசனம் செய்யும் போது தமிழே என்னிலிருந்து தான் துவங்கி வருகின்றது என்று சொல்வார்கள். சி. க அப்படி இல்லை தமிழ் மட்டும் படித்த பேராசிரியர்கள் 18 ஆம் நூற்றாண்டுகளோடு தமிழ் இலக்கியம் முடிந்து விட்டது என்றும் பாரதியைக் கூட ஒத்துக் கொள்ள தயங்குபவர்களாக இருந்தார்கள். ஆங்கில , ஜெர்மன் இலக்கியமும் தமிழ் இலக்கியமும் படித்து அறிந்த பல்கலை செம்மல் அவர். எனவே அவரது விமரிசனம் பரந்து பட்டதாய் இருந்தது. 1950 இலக்கியம் இரண்டாக உடைகின்றது. . குறுங்குழுவாதம் இங்கே தமிழக இலக்கியத்தை முடக்கி வைத்திருக்கின்றது. ஒன்றாக இருந்து எல்லா கோட்பாடுகளையும் கற்று தன்னுடைய புதிய சிந்தனை ஊடாக விரிவாக ஆராய்ந்தார். தெற்கே வானமாமலை, வடக்கே சி. க. சரியான உருவம் ஏற்படாத எந்த உள்ளடக்கமும் உள்ளத்தை தைக்காது . இலக்கியம் இன்றிலிருந்து நாளைக்கு மாறுகின்ற செழுமையை செய்ய வேண்டும். உருவமும் உள்ளடக்கமும் சரியாக வந்தால் தான் இலக்கியம் வலிமையாக இருக்கும் . அந்த அளவில் இரண்டையும் வலியுறுத்தி விமரிசனம் செய்தவர் சி. க என்றும் தனி மனிதத்துவத்தை எதிர்த்தும், கால வரிசையில் தன்னுடைய விமரிசனத்தை வைத்தவர் என்றும் பேசினார்

(லட்சுமி கனகசபாபதி)

150 மாணவிகள் பங்கேற்றிருந்தனர் . பரிசுக் காக அனுப்பட்ட நூல்களின் ஒரு பிரதி இராசபாளையத்தை அடுத்துள்லள முறம்பு எனும் சிற்றூரில் அமைக்கப் பட்டிருக்கின்ற நூலகத்திற்கு அன்பளீப்பாக வழங்கப் பட்டது

—-

mathibama@yahoo.com

Series Navigation

திலகபாமா

திலகபாமா