சிலாபம்!

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

மணவை அமீன்கால்கள் சகதியில் சிக்கி
விழி பிதுங்கி நிற்கிறது-
கொக்கு ஒன்று!

இறக்கை அடிக்கும் ஓசைகள்
காற்றில் குறியீடுகளாக..!

அலகினை சகதியில் புதைத்து
கால் சிக்கலெடுத்து இறக்கை
விரிக்க முற்பட்டும்
மூச்சுக் குழாயின்
முக்கல்களும்..முனகல்களும்..!

பார்வையாளர்கள் உணரவில்லை..
கொக்கின் அவஸ்தை!

வந்த வரை லாபமென
கண்ணிப் போட்டு கடத்தும்
கூட்டமொன்று!..
இருக்கும் வரை யோகமென
கல் விட்டு எறியும்
கூட்டமொன்று!..

திடீரென..
குறியீடுகளின் திசை நோக்கி
அயல் தேச ராஜாளியொன்று
எச்சமிட்டுச் சென்றது.

கூட்டங்கள் கூட்டுக்குள் ஒடுங்கின.

நிலமெங்கும் நிர்மூலங்கள்
நீலம் பாவித்துக் கொண்டிருக்க..

கொக்கின் தொன்மங்கள்
எங்கோ ஒரு ஆழியில்
சிலாபம் செய்கிறது!!!

*மணவை அமீன்*

Series Navigation

மணவை அமீன்

மணவை அமீன்