சிரிக்கும் தருணங்கள் ….!

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

கலாசுரன்


————————————————————–
பலதும் மறைக்கப்படுகிறது
சிலது தெளிவில்லாது
தெரியக்கூடும்

இதற்கு இரவு என்று பெயர்
என்றதும் ஒவ்வாமையின்
சிரிப்பை அணிந்துகொள்கிறான்

பெரும்பாலானவை நன்றாக தெரிகிறது
சிலது முற்றிலும்
மறைக்கப்படலாம்

இதற்கு பகல் என்று பெயர்
சொன்னதும்.. அணிந்தவற்றை
தூக்கி வீசப்பட்டது

யாரும் எதிர்பார்ப்பதில்லை
ஒரு சிரிப்பின் பின்னால் ஒரு
பைத்தியம் ஒளிந்திருக்கிறதென்று….

காரணமற்ற சலனங்கள்
சிலசமயம் சொல்லக்கூடும்
இவனுக்கும் பைத்தியமென்று….

அவன் எழுந்து சென்றதும்
பார்த்துக்கொண்டிப்பவர்களில்
சிலர் சிரிப்பார்கள் …
——————————————————-
கலாசுரன்…

Series Navigation

கலாசுரன்

கலாசுரன்