This entry is in the series 20020812_Issue

பொன். முத்துக்குமார்


சூர்யனில்லை நான் எதிர்பார்ப்பது.
சந்திரன்கூட யில்லை.
அவ்வப்போது சில மின்னல்களும்
எப்போதாவது ஒரு
வானவில்லும் போதும்.
தென்றல் என்னைத்
தழுவிச்செல்லத் தேவையில்லை.
வியர்த்த வேளைகளில்
என் பூக்கள் தலையாட்ட
சில்லென தொட்டுச்செல்ல
சிலபொழுது குளிர்காற்று போதும்.
மும்மாரி என்மாதத்தில்
அவசியமே யில்லை.
தகித்தலில் கருகிவிடாது
தாகப்பொழுதுகளில்
என் வேர்களுக்கு
சில சொட்டுக்கள்.
நீண்டு நிலம்பரவின
மாளிகைக்கு ஏக்கமில்லை.
தனித்திருக்கும் பொழுதுகளில்
முகம் புதைத்துக்கொள்ள
ஒரு கவிதைப் புத்தகம்.
மனம் களைத்த நேரங்களில்
யிதமாய் சுருண்டுகொள்ள
என் தலைக்கொரு மடி.

உயிர்வரை உயிர்த்திருப்பேன்.

***
pmkr@hotmail.com

Series Navigation