‘சிதறும் நினைவுகள் ‘–நேரான நினைவு நோக்கி

This entry is part [part not set] of 28 in the series 20051230_Issue

கற்பக விநாயகம்


****

சுதந்திரம் கிடைத்தபின் கவர்னருக்கு இத்தகைய துணிவு வந்திருக்குமா எனக் கேட்டு மலர்மன்னன் நம் ஹிந்து தர்ம சிந்தனையைக் கிளறி இருக்கிறார்.

(சிதறும் நினைவுகள்-மலர்மன்னன்)

வந்திருக்குமா வந்திருக்காதா என்பதெல்லாம் யூகத்தின் அடிப்படையில்தான் சொல்ல இயலும்.

ஆனால் 1947க்குப் பிறகு சிலர் துணிந்து செய்ய முடிந்த கீழ்க்கண்ட செயல்கள் நினைவில் நிற்கின்றன.

1) காந்தியை 1947 வரைக்கும் காயம் படாமல் காப்பாற்ற முடிந்திருக்கிறது. 1948ல் ஓர் ஆர் எஸ் எஸ் இயக்க ஹிந்துவால் அவரைக் கொல்லும் துணிவு வந்தது

2) 1947க்குப் பிறகுதான் பாபர் மசூதியுள் திருட்டுத்தனமாய் இரவில் நுழைந்து ராமன் சிலை வைத்து கலவர விதை தூவ சிலருக்கு துணிவு வந்தது.

3) பூமி பூஜை எனப் பொய் சொல்லித் திட்டமிட்டு மசூதியை இடித்து ரதயாத்திரை விட்டு 3000 பேர்களுக்குமேல் முசுலீம் மக்களைக் கொல்லும் துணிவு வந்தது.

4) வாக்காளர் பட்டியல், ரேசன் கார்டு – கணிணி உதவியுடன் குஜராத்தில் 3000 பேர்களுக்கு மேல் முசுலீம் மக்களைக்கொன்றுவிடும் துணிவு வந்தது.

5) தொழுநோயாளிகட்குத் தொண்டாற்றிய கிறிஸ்துவப் பாதிரியைக் குழந்தையுடன் கொளுத்தும் துணிவு வந்தது.

6) நடத்தை கெட்ட மடாதிபதிகள் நாடாளும் மக்களுக்கு ஆலோசனை சொல்லும் துணிவும், தவறைச் சுட்டிக்காட்டும் ஆளை அடியாள் வைத்துக் கொல்லும் துணிவும் வந்தது.

மலர்மன்னன் கவனத்திற்கு சில:

1) 1984 க்குப்பிறகு சென்னையில் திடார் திடார் என பிளாட்பாரத்தில் முளைத்த விநாயகர் கோவில்களை (எண்ணிக்கையில் 2500க்கும் மேல்; நடைபாதையை விழுங்கிய, போக்குவரத்திற்கு இடஞ்சல் செய்கிற)இடித்து மக்கள் நடக்கவும், போக்குவரவுக்கு இடையூறை அகற்றவும் செய்யும் துணிச்சல் யாருக்காவது இருக்கிறதா ?

ஹிந்து தர்மத்திற்காக கண்ணீர் விடும் மலர்மன்னன்,

1) ரெட்டை கிளாஸ் டாக்கடைகள் நடத்தும் ஹிந்துப்பெருமக்கள் பற்றி அறிவாரா ?

2) சென்னை போன்ற நகரங்களில் தலித் மக்களுக்கு வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஹிந்து மக்கள் பற்றி அறிவாரா ?

3) திண்ணியம் ஊரில் தலித் மக்களை மலம் திண்ண வைத்த ஹிந்து மக்களை அறிவாரா ?

4) கொடியங்குளம் தொடங்கி நெல்லை,தூத்துக்குடியில் ஹிந்து மக்களை, அவர்கள் உழைத்துச்சேர்த்த செல்வத்தை அழித்து ஆட்டம் போட்ட ஹிந்து மக்களின் செயல்களை அறிவாரா ?

5) ஹரியானாவில் செத்த மாட்டைச்சாப்பிட்ட தலித் மக்களைக் கல்லால் அடித்துக் கொன்ற ஹிந்து மக்களை அறிவாரா ?

மேற்கண்ட விசயங்களைப்போல் நிறையக்காரியங்களை நம் ஹிந்து சகோதரர்கள் செய்து வருகின்றார்கள். இவற்றைவிட கட்டிடப்பிரச்சினை மேலான விசயமாகத்தெரியவில்லை. இவற்றைச் சரிசெய்துவிட்டு ஹிந்து தர்மத்தை காப்பாற்றினால் ரொம்பவும் சரியாய் இருக்கும்.

****

vellaram@yahoo.com

Series Navigation

author

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்

Similar Posts