This entry is in the series 20030518_Issue

பாரதிராமன்


எதிலும் இல்லை என்றான் ஒருத்தன்
எதிலும் இருக்கிறது என்றான் இன்னொருத்தன்
சண்டை முற்றி சமாதானமாயிற்று

இப்போது சண்டையில் இல்லை
சமாதானத்தில் இருக்கிறது என்றான் முதல்வன்
சமாதானத்தில் இருக்கிறது
சண்டையிலும் இருக்கிறது என்றான் இரண்டாமவன்
மீண்டும் சண்டைக்குப்பின் சமாதானம்

இப்போது சமாதானத்தில் இல்லை
சண்டையில் இருக்கிறது என்றான் முதல்வன்
சமாதனத்திலும் இல்லை
சண்டையிலும் இல்லை என்றான் இரண்டாமவன்

இப்போது
சண்டையுமிருக்கிறது சமாதானமுமிருக்கிறது
என்றானது இருவருக்கும்

kalyanar@md3.vsnl.net.in

Series Navigation