This entry is in the series 20030518_Issue

பாரதிராமன்


நிலவைப் பார்த்துக்
குரைத்த நாய்கள்
மலையைப் பார்த்துக்
குரைக்கலாயின

பின்னர்

மனிதனைப் பார்த்துக்
குரைக்கத் தொடங்கின
இப்போதெல்லாம்
தங்களில் ஒன்றைப் பார்த்து மற்றொன்றாய்க்
குரைக்க ஆரம்பித்துள்ளன

இன்னும் சற்றுப் போனால்
தங்களைப் பார்த்தே
குரைத்துக் கொள்ளும்

குரல் உள்ளவரை
குரைப்பும் இருக்கும்.

kalyanar@md3.vsnl.net.in

Series Navigation