சலிப்பு

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

அருண்பிரசாத்


வெளியேறும் கூட்டத்துடன்
பழக்கமான ஓசைகளும் அடங்கி
வெறிச்சோடியிருக்கும் அரங்கு
ஒரு இரண்டாம் காட்சிக்குப் பிறகு.

வெளியேற முடியா இருக்கைகள்
தங்களது சலிப்பை பகிர்ந்து கொள்கின்றன.

வெள்ளையாய் உறங்கும் திரை
நாளைய காட்சிகள் பற்றிய
எவ்வித எதிர்பார்ப்புமின்றி.

everminnal@yahoo.com

Series Navigation

அருண்பிரசாத்

அருண்பிரசாத்