சமத்துவங்களின் மீதான துரத்தல்கள்

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

ராம்ப்ரசாத்


ரீங்கரித்துப் பறக்கும் வண்டுகளை
விடாமல் துரத்துகின்றன பூக்களின்
வாசங்கள்…

நெருக்கங்களின் வனப்புகளை
வண்டுகளைப் போன்றே
துரத்த முயல்கின்றன பூக்கள்…

சமத்துவங்களின் அத்துவானங்களை
பாலின வெளிகளாய் பார்க்கின்ற‌ன‌‌
பூக்கள்…

– ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)

Series Navigation

ராம்ப்ரசாத்

ராம்ப்ரசாத்