சனிட்டறி

This entry is part [part not set] of 32 in the series 20050623_Issue

இளைய அப்துல்லாஹ்


அந்தக்காலத்தில் கிராமங்களில் பெரிய நோய் என்றால் மலேரியாக்காய்ச்சல் தான். நுளம்பு குத்தி காய்ச்சல் வரும் என்று தான் நம்பிக்கை. டி.டி.ரி பவுடர் தெளpப்பதற்கு மருந்தடிக்கிற ஆட்கள் வரும் போது வீட்டிலை உள்ள பொம்பிளைகளுக்கு பெரிய வேலை. ஓவசியர் சகிதம் வெளடிளி நிறத்தில் நீளமான ‘நுளம்படிக்கிறபம் ‘ என்று தான் சிறுபிராயத்தில் சொல்லுவோம். ஆனால் அது நுளம்படிக்கிற அல்ல டி.டி.ரி பவுடரையும் தண்ணியையும் கலந்து அடிக்கிற பம்.

எங்களது வீடுகளில் அப்படிப் பம்பைக்காண முடியாது. நான் அந்த நுளம்பு மருந்தடிக்கிற பம்பைப் பார்த்து ஆசைப்பட்டிருக்கிறேன். அது வலு அழகாக இருக்கும். அதன் வடிவமைப்பு கவர்ச்சியாக இருக்கும். காற்றாடிக்கும் கம்பி மேலே இருக்கும். சைக்கிள் பம்ப் மாதிரி. அதனால் மருந்து விசிறுவது இலேசு.

புளியங்குளம் சந்திக்கு நுளம்பு மருந்து அடிக்கிற ஆட்கள் வந்து விட்டினம் என்றால் எங்களுக்கு சந்தோசம். ஏன் சந்தோப்படுகிறோம் என்றில்லாத சந்தோம். காலையில் தபால் காரர் வந்தால், முல்லைத்தீவு மாங்குளம் பஸ் வந்தால், பதினொரு மணி போல மீன் கார சிங்கள மாமா பெல்லடிச்சுக் கொண்டு பெட்டி கட்டி சைக்கிளில் மீன் கொண்டு வந்தால், பின்னேரம் பாண்காரர் பாண் கொண்டு வந்தால், உழவு மெசின் எங்கள் வயலுக்கு உழ வந்தால், எங்கள் முத்தையன் கட்டு வாய்க்காலில் தண்ணி வந்தால், மார்கழி மாசம் பனிப்பெய்தால், பனையில் இருந்து பனம் பழம் விழுந்தால், தறுமண்ணை காலையில் கூப்பிட்டு தயிர் தந்தால் எல்லாத்துக்குமே சந்தோம்.

இந்த சின்னச் சின்ன சந்தோங்களில் திளைத்துப் போய் மனம் நிறைந்து போவேன் அனேகமாக எல்லோருக்கும் இந்தச் சந்தோம் இருக்குமாக்கும். கிராமம் ஒரு சந்தோமான ஒன்று தானே.

வீட்டில் அம்மாதானே எல்லாம். சமைப்பது, உடுப்புக்கழுவுவது, தண்ணி அள்ளி குடத்தடியில் வைப்பது, ஜிம்மிக்கு சோறுவைப்பது. எங்களைப்பராமரிப்பது எல்லாம்.

சந்திக்கு நுளம்பு மருந்தடிக்கிற ஆட்கள் வந்தால் அம்மாவிடம் ஓடிப்போய் சொல்ல வேண்டும். அவதான் அந்த ஒழுங்குகளை எல்லாம் செய்வா. அவசர அவசரமாக வீட்டில் உள்ள சாப்பாட்டுச் சாமான்களை சாக்குப்போட்டு மூடி வைக்க வேண்டும். உடுப்பை மூட வேண்டும். மற்ற சாமான்களை முற்றத்தில் கொண்டு வந்து வைக்க வேண்டும். இந்த வேலைகள் அவசரமாக நடக்க வேண்டும். அல்லது மருந்தடிக்கிறவைக்கு இதெல்லாம் ஒரு பெரிய விசயமே இல்லை. எல்லாத்துக்கும் மருந்தடிச்சுப் போட்டுப் போய்விடுவினம்.

அவர்கள் மருந்தடிக்கும் போது கிஸ்….ஸ்….கிஸ்….ஸ்… என்று சத்தம் வரும். நல்லா விசிறி எல்லா இடங்களிலும் படும். அடிச்சிட்டுப் போனாப்பிறகு டி.டி.ரி மணம் வீடுமுழுக்க இருக்கும். ஓட்டில், சிலாகையில் சுவரில் எல்லாம் வெண் புள்ளிகளாய் மருந்து படிந்திருக்கும். நுளம்பு கொஞ்ச நாட்களுக்கு அந்தப் பக்கமே வராது.

எங்கள் வீட்டில் வயலுக்கு மருந்தடிக்கிற பம்ப் ஒன்று இருந்தது. அது சிவப்பு நிறம். காற்றை இடது பக்ககையால் மேலும் கீழும் இழந்து ஆட்டித்தான் அடிக்க வேண்டும். அதனால் மருந்தடிப்பது கடிடம் செல்லையாண்ணை வீட்டில் ஒரு மெசின் பம்ப் இருந்தது. புளியங்குளத்தில் எனக்குத் தெரிய இருந்த ஒரே மெசின் பம்ப் அதுதான் செல்லையாண்ணையின் மகன் பாலசிங்கம் வயலுக்கு அதனால் மருந்தடிக்கும் போது மெசின்சத்தம் கருவேலன்கண்டல் சந்தி வரை கேட்கும்.

பள்ளிக்கூடத்தில் சனிட்டறிக்கு பயப்படுகிறமாதிரி நாங்கள் யாருக்கும் பயமில்லை. சனிட்டறி சுகாதாரப்பரிசோதகர். சுகாதாரப்பரிசோதகர் வலு உசாரான மனிதன். பார்த்தால் படு கம்பீரம். மீசையும் இருக்கு. சிவலை நிறம். சனிட்டறி சும்மா அதிபரைச் சந்திக்க வந்தாலே கதை முழு பள்ளிக்கூடத்திற்கும் பரவிவிடும். அவர் திரும்பிப் போகும் வரைக்கும் பயம். கையில் எப்பொழுதும் ஆயுத சாமான்கள் வைத்திருப்பார். ஆயுத சாமான்கள் என்றால் ரத்தம் குத்தும் ஊயசி மற்றும் கண்ணாடிகள், சொட்டு மருந்து கொடுக்கும் உபகரணங்கள் ஊசி போடுவது, அம்மைப்பால் குத்தும் உபகரணங்கள். இந்த சாமான்கள் வைத்திருக்கும் யாரையும் கண்டால் பயம் வரத்தானே செய்யும்.முஸ்லிம் பிள்ளைகளுக்கு சுன்னத் எடுக்கும் ஒஸ்த்தா மாமாவைக்கண்டால் வரும் பயம் போல..

மலேரியாக் காச்சல் குளிசை சரியான கசப்பு நாக்கில் முட்டுப்பட்டாலே அன்று முழுக்க ஓங்காளம் வரும். காச்சல் வரமுதல் ஒரு அசுமாத்தம் தெரிந்தால் ஓகுளோறப்பெனிக்கல்ஒள குளிசையோடு வந்து விடுவார் சனிட்டறி. எல்லா வகுப்பையும் ஒவ்வொன்றாய் கூப்பிட்டு குளிசையை ஒவ்வொருத்தர் வாயில் போட்டு விழுங்கும் வரைக்கும் விடமாட்டார். அவர் அதிலை வலு கவனம்.

பல்லுப்பாக்கிறதில் இருந்து ஊயசி போடுதல், அம்மைப்பால் குத்துறவரைக்கும் எல்லா வேலைகளையும் முறை வைத்துச் செய்வார்.

அம்மைப்பால் குத்துறது ஒரு பெரிய வேலை. எல்லாரும் பயந்தது அதுக்குத்தான். புஸ்ப்பராஜன் சரியான குளப்படி. வீரனைப் போல இருப்பான். ஆனால் பயந்தவன். ஏழாம் வகுப்பு படிக்கிறநேரம் புஸ்ப்பராஜன் எல்லாருக்கும் அடிப்பான். அவனோடு சேரக்கூடாது என்று அம்மா ஓரே சொல்லி அனுப்புவா. அவனோடு சேராவிட்டாலும் அடிப்பான். ஏன் சேரமாட்டியோ என்று. சேர்ந்தது கேள்விப்பட்டால் அம்மா அடிப்பா.

சனிட்டறி வந்தார் அம்மைப்பால்குத்த எங்களுக்கு வந்த நேரம் தெரியாது என்ன விசயம் என்று மூன்று மூலை தகரத்தில் கதவு மாதிரி ஒன்றை எடுத்து மேசை மீது வைத்தார். அதற்குள் ஸ்பிறிற் விளக்கு ஒன்றை வைத்தார். என்ன செய்கிறார் என்று நாங்கள் புதினம் பார்த்தோம். ஆனால் அது எங்களுக்குத்தான் என்ற போது பயம் வந்தது. ஒவ்வொரு வகுப்பாக வரிசையில் நிற்கும் படி தில்லையம்பலம் வாத்தியார் சொன்னார். தில்லையம்பலம் வாத்தியார் சொன்னால் அது சொல்லுத்தான். முதலில் ஆறாம் வகுப்பு ஓஏஒள பிறகு ஓபீஒள என்ன நடக்கிறது என்று புதினம் பார்த்தோம். ஸ்பிறிற் விளக்கில் ஒரு ஊசி மாதிரி ஒன்றைச் சூடுகாட்டி அதனை மருந்தில் தொட்டு இடது கையில் ஒரு இடத்தில் மூன்று கோடுகள் வீதம் இரண்டு இடத்தில் ஆறு கோடுகள் கிழித்தார்.

பிள்ளைகள் பயத்தில் அழுது கொண்டே இருந்தனர். ஆம்பிளை பொம்பிளை என்ற பேதமில்லாமல் எல்லோரும் அழுதனர். ஒப்பாரி மயமாகவே இருந்தது பள்ளிக்கூடம். அம்மைப்பால் குத்தின பெடியன்களின் கையைப்பிடித்துப்பார்த்தால் கோடு மாதிரித்தான் இருந்தது.

புஸ்ப்பராஜனைக் காணவில்லை. தேடினோம் வகுப்பறைகள், ஒப்.•பிஸுக்கு மேலே உள்ள சீமெந்துத்தட்டு பின்பக்கத்தில் நின்ற காஞ்சூர மரம் எல்லா இடமும் தேடியாச்சு ஆள் இல்லை. பார்த்தால் கம்பும் கையுமாகப் போன தில்லையம்பலம் வாத்தியார் பிடித்துக்கொண்டு வந்தார் சயன்ஸ் லாப்பில இருந்து.

இடது கையில் புஸ்பராஜனுக்குத் தான் எங்கள் வகுப்பில் முதலாவதாக குத்தினது.

சனிட்டறி குத்தினது இத்தனை வருங்களின் பின்பும் இடது கையில் இரண்டு பால் தழும்புகள் அடையாளமாகவே இருக்கிறது.

அம்மைப்பால் குத்தின நேரம் இந்துமதி, கிருபா, நந்தினி, சகுந்தலாதேவி, மோகன வதனி, யமுனா எல்லோரும் அழுதது நேற்றுப்போல் உள்ளது. ஓசனிட்டறிஒள எப்பவும் பிள்ளைகள் விசயத்தில் கவனிப்போடுதான் இருப்பார். ஆனால் அவரொ என்றால் பிள்ளைகளுக்குப்பயம்.

கல்விச்சுற்றுலா எப்பவும் சந்தோமான விசயம். ஆனால் இந்தமுறை சனிற்றரியும் எங்களோடு வந்தார். ஓஉவர் ஏன் எங்களோடைவாறார்ஒள என்று பல பெடியன்கள் விசனப்பட்டார்கள்.

அது ஒரு ரயில் பயணம் சனிட்டறி சுகாதார மாகத்தான் எல்லோரையும் கூட்டிக்கொண்டு போவதற்கு ஆலோசனை சொன்னார் வீட்டில் இருந்து சுட்டாறிய தண்ணீர் கொண்டு வரச்சொன்னார். பயணத்தில் சத்தி எடுக்கிற ஆக்களுக்கு குளிசை தந்தார். பயணத்தில் வயிறு முட்டச்சாப்பிடக் கூடாது என்று ஆலோசனை சொன்னார். போகுமிடத்தில் மூடி வைத்த உணவுகளையே உண்ணுவதற்கு உத்தரவிட்டார்.

ஒரு நாள் சுற்றுலா அது தொண்டைமானாறு வெளpக்கள ஆய்வு நிலையத்தில் பிள்ளைகளுக்கு ஒரு வெளpப்புறப்படிப்பு.

காற்றாடிக்குப்பக்கத்தில் நாகதாளி புடுங்கி ஆராய்ச்சி செய்ததாக ஞாபகம் என்ன ஆராய்ச்சியோ தெரியாது. கடும் வரண்ட பிரதேசங்களில் முட்செடிகள் மட்டும் எப்படி வளர்ந்து வருகின்றன. கள்ளி, நாகதாளி, ஈச்சமரம், தொட்டாச்சுருங்கி, நெருஞ்சி என்று முள்ளுகள் கொண்ட எல்லாம் வளருக்கின்றன. பார்த்து ஆச்சரியப்பட்டோம். கட்டிக்கொண்டு போன சோற்றுப் பார்சலை தொண்டைமானாறு சந்நிதி கோவில் மடங்களில் வைத்து சாப்பிட்டோம். சனிட்டறியும் தில்லையம்பலம் வாத்தியாரும் சாப்பிட்டார்கள்.

சுற்றுலா போய்விட்டு வந்த ஒரு கிழமையில் எனக்கு குலைப்பன் காச்சல். சனிற்றறி தான் ஞாபகத்துக்கு எனக்கு ஒரு பெரிய விசயமில்லை. எங்களின் ஆஸ்பத்திரியில் அரசாங்க மருந்துகள் தான் இருக்கும் அடிப்படை மருந்துகள் மட்டும். வருத்தம் கூட என்றால் ஒரு இருபத்தைந்து ரூபா கொடுத்தால் பிறைவேற்றாக டொக்டர் வீட்டில வைத்து மருந்து தருவார். அந்த மருந்துக்கு அனேகமாக காச்சல் நிற்கும். வேறு நோய்களுக்கும் மருந்து தருவார் டொக்டர் வீட்டில்

இரண்டு கிழமையாக காய்ச்சல் தொடர்ந்தது. இது நிமோனியாவோ என்று என்னைப் பார்க்க வந்தவர்கள் பேசிக்கொண்டது கேட்டது. உடம்பு பலவீனமாகிவிட்டது பார்த்தால் ஷசலம்| தேத்தண்ணி நிறத்தில் போகிறது குலைப்பன் நின்று போய் மஞ்சள் காமாலை வந்துவிட்டது. அது ஈரலைத்தான் பாதிக்கும் என்று வாறவை போறவை சொல்லுகினம். எனக்கு எல்லாம் காச்சல் தான்.

ஓபெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போங்கோஒள என்று சிலர் சொல்லிச்சினம். ஊர்ப்பரியாரியார் வந்து பார்த்து விட்டுச் சொன்னார் ஒரு கிழமைக்குள்ளை ஓசலத்தை தண்ணியாக்கிறன்ஒள. ஆயுர்வேதக் குளிசைக்கு அந்தளவு சக்தியிருக்கிறது என்பதனை எனக்கு வந்த காச்சல் நிரூபித்தது. கீழ்காய் நெல்லி குளிசை ஏழு நாள்த்தான் குடித்தது. பரியாரி சொன்னது போல சலம் பச்சைத் தண்ணி நிறத்துக்கு மாறிவிட்டது. கைநகம் கண்எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் நிறம் வழமைக்குத் திரும்பியது. குழந்தை வேலர் வந்து தண்ணி ஓதி விட்டுப் போனார். வாய்க்கச்சல் கொஞ்ச நாளைக்குப் பிறகு தான் மாறியது.

ரவி கிணத்துக்குள் விழுந்துவிட்டான் என்ற செய்தி என்னை அதிரப்பண்ணியது. ரவியின் வீட்டுக்கிணறுசுற்றி முழுக்க கட்டப்படாமல் இருந்தது. பாடசாலையில் இருந்து வந்தவன் தண்ணி குடிக்க துலாவில் தண்ணி அள்ளியிருக்கிறான். துலாக் கொடி வழுக்கி ரவி கிணற்றுக்குள் விழுந்துவிட்டான். தத்தளித்து, தத்தளித்து இருந்தவனைத் துhக்கி வெளpயில் போட்டார்கள். செத்துக்கிடந்தான்.

எங்களுhரில் கிணத்துக்குள் விழுந்து செத்தவர்கள் குறைவு. ரதி அக்கா தற்கொலை செய்து கொள்வதற்கு முதலில் பொலிடோல் குடிச்சவா. பிறகு வயல் கிணத்துக்குள் விழுந்தவா பொலிடோல் குடிச்சநேரம் ஓடிப்போய் பாத்தனான். கால் கையை அடிச்சுக்கொண்டு கிடந்தவா.

எங்கள்ஊர் ஆஸ்பத்திரியிலை அதுக்கு மருந்து இருந்தது. புனல் மாதிரி ஒன்று வாயில் வைச்சு அள்ளி அள்ளி ஓடலி வாயில் ஊத்துவார். சவுக்காரத் தண்ணி என்று தான் பெயர். வயித்துக்குள்ளை கிடக்குறது எல்லாம் வெளpயிலை வரும். ரதி அக்காவுக்கு வயித்துக்குள்ளை கிடந்த நாடாப்புழு வெல்லாம் வெளpயிலை வந்ததைப் பார்த்தேன்.

இரண்டாவது முயற்சி கிணத்துக்குள் விழுந்தது. அப்பொழுது எல்லோரும் கண்டிட்டம். வயல்பக்கமாய் ஓடி.. பிறகு கிணத்துக்குள் விழுந்ததை துhக்கி காப்பாற்றியாச்சு.

ஏதோ அக்காவின்ரை புருனோடை பிரச்சனை என்றது மட்டும் தான் எனக்குத் தெரியும். இது இரண்டாவது ஆனால் ரவி எங்களோடை படிச்சவன் எங்களோடையே பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்தவன் பிரேதமாய்க் கிடந்தான்.

ஓசனிட்டறிஒள எல்லாத் துன்பமான காரியங்களுக்கும் போவாரொ பாம்பு கடிச்சால யாருக்காவது ஏதாவது வருத்தம் என்று துன்பங்களின் ஆபத்பாந்தவனாய் நிற்பார். முதலுதவி செய்வார். பள்ளிக்கூடத்துக்கு மட்டுமில்லை ஊருக்கும் வைத்தியம் சொல்வார். வீடுகளில் வந்து கதைத்துக்கொண்டிருக்கும் பொழுது தாழ்வாரத்தில் இருக்கும் சிரட்டைகளை தடியினால் கவிட்டு விடுவார். டயர்களை எரிக்கச் சொல்வார். டி.டி.ரி ஒழுங்கா அடிக்க வருகினமோ என்று கேட்பார். மீன் ரின்கள் நிமிர்ந்து இருந்தால் கவிட்டு விடுவார். எப்பவும் ஆட்கள் மீது அவருக்கு கரிசனை இருக்கும்.

அதற்குப்பின்பு எனக்கும் அந்தப்பழக்கம் தானாகவே வந்தது நுளம்புக் குடம்பிகளைக் கண்டால் அவற்றை அழிப்பது. ரின்களை பிரட்டி வைப்பது இப்படி….

எங்கள் வீட்டில் தேத்தண்ணி குடிப்பார். அடுத்தது செல்லையாண்ணை வீட்டில் வேறெங்கும் அவர் நாக்கு நனைத்ததை நான் காணவில்லை.

பள்ளிக்கூட நோட்டாஸ் போட்டில் நாளை போலியோ மருந்து கொடுக்கப்படும் என்று எழுதப்பட்டிருந்தது. ஓபோலியோஒள தொடர்பாக சின்னத்தம்பி அ.த.க. பாடசாலையில் ஒரு விவரணச்சித்திரம் போட்டார்கள். சுகாதாரப்பிரிவு அதனைச் செய்திருந்தது. அதில் சாதாரணமாக இருந்த ஒரு பிள்ளைக்கு போலியோ வந்து கால் சூம்பிப் போய்விட்டது. வெளடிளைத்திரை நிப்பாட்டி படம் காட்டினார்கள்.

உடனே கலாவின் ஞாபகம்தான் வந்தது. அவளின் சின்னக்கால போட்டோ இன்னுமிருக்கிறது பார்த்தால் ஆச்சரியப்பட்டு விடுவீர்கள். அப்படி அழகான இரண்டு கால்கள். ஏழுவயதில் ஓஅம்மா உழையுது அம்மா உழையுதுஒள என்று சொன்னாள்… ஒருவரும் ஆகவில்லை கால் கொஞ்சம் கொஞ்சமாய் சூம்ப ஆரம்பித்தது. எனது கண் முன்னலேயே சூம்பி சின்னனாய் போய்விட்டது.

வீட்டில் இருந்து ஒரு பொட்டலத்தில் சீனி கொண்டு வந்தோம். பிறகுதான் தெரிந்தது போலியோ சொட்டு மருந்து இனிப்பு. அதுக்கு சீனி தேவையில்லை அது ப+ச்சி மருந்துக்குத்தான் முதலில் வாயில் சீனியைப் போட்டுவிட்டு அண்ணார வேண்டியது தான் சனிட்டறி நெத்தியில் பிடித்து நிமித்திடி மூன்று சொட்டு ப+ச்சி மருந்தை சீனி வாயில் ஊத்துவார். வாயை மூடிக்கொண்டு போக வேண்டியது தான்.

அந்தமுறை இல்லை இதற்கு. இது வெறுமனே வாயைத்திறந்தால் வாய்க்குள் இனிப்பான மருந்து சனிட்டறி எங்கள் விசயத்தில் மிகவும் கவனம். வீட்டுக்கு வந்தாலும் அவரின் நினைப்பு வரும். ஒரு நாள் புடிப்பராஜன் சனிற்றறியின் சைக்கிளுக்கு காத்து திறந்துவிட்டுட்டான். ஊசி போடுற கோபம். எங்களுக்கும் தான் போடுறார். நாங்கள் என்ன கோபமே.

பள்ளிக்கூட அசம்பிளி நீண்டு கொண்டே போனது. வெளடிளிக்கிழமை என்றால் இப்படித்தான். குளித்து முழுகி ரூபா, யோகா, இந்து எல்லோரும் வந்து ப+ வைத்து ஓநமச்சிவாய வாழ்க…. பாடத்துவங்கின மெண்டால் ஓரே இழுவை…. 2 பாடத்தின்ரை நேரம் எடுபடும்.

அசெம்பிளி முடிந்து வெளpயில் வர அந்தக்கதை எனது காதில் விழுந்தது. சனிற்றரியை இரிகேன் டிப்பாட்மென்டுக்கு முன்னாலை வைச்சு ஓபுடையன்ஒள கொத்திப் போட்டுதாம் திடாரென்று அதிர்ச்சியாய் இருந்தது. இரிகேன் டிப்பாட்மென்ட் எல்லாம் சீமெந்து போக்குகள் போட்டு வைச்சிருந்தவை. புடையன். மட்டுமல்ல எல்லாவித நச்சு சாமான்களும் அதுக்குள்ளை இருக்கும்.

எத்தினை தடவை காய்ஞ்ச செட்டைகளை கண்டிருக்கிறோம். எத்தனை தடவை பிணைஞ்சு கொண்டு போன அரவங்களை விரட்டியிருக்கிறோம். எத்தினை தடவை கொட்டாவியை முகர்ந்திருக்கிறோம்.

புடையன் அந்த நல்ல மனிசனைக் கொத்திப்போட்டுது. இனி யார் எங்களுக்கு ப+ச்சி மருந்து தாறது. இனியார் எங்களுக்கு ஊசி போடுறது. இனியார் எங்களுக்கு அம்மைப்பால் குத்துறது. இடது கையைத் தடவிப் பார்த்தேன் இன்னும் இரண்டு தளும்புகள் இருந்தன. அது எதுக்கு குத்தினது என்று ஞாபகமில்லை.

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்