This entry is in the series 20040930_Issue

திலகபாமா


வேரடி மண்ணீர் குடித்தும்

வானிருந்தும்

புவி நோக்கி வீழ்ந்த கதிரொளி சமைத்தும்

சுவாசித்த காற்றை வாசமாக்கி

பூத்தும் கொழுந்து விட்ட படியும் நானிருக்க

சூழுகின்றன கள்ளிகள்

சிலநாள் வான் பொய்க்க நேர்ந்த

சந்தர்ப்பங்களில்

அசைய முடியாது போன போதும்

அசைந்தால் இலைகள் கிழியும் போதும்

வீறு கொள்கின்றன

என் பச்சையங்கள்

மெல்ல வளர்ந்த என் உயரங்கள்

கிழிக்கும் கள்ளிகளை அழிக்க

விரிக்கும் தன் கிளைகளை விருட்சங்களாய்

நான் பரப்பும் நிழல்கள்

கத்தி கொண்டு அடிவேர்

சீவுதலிலும்சுத்தமாய்

அழுகச் செய்து காலி செய்யும்

எனை சூழ் கள்ளிகளை

—-
mathibama@yahoo.com

Series Navigation