குடியரசு தலைவர் அப்துல் கலாம் – மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

மயிலாடுதுறை சிவா


நமது குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் கடந்த வாரம் தமிழகம் வந்து இருந்து,

கொடிய தீ விபத்தில் பலியான கும்பகோணம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், பாதிக்கப்

பட்ட குழந்தைகளுக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார். அதேப் பயணத்தில் கடலூர் அருகே

உள்ள பெரும் தன்னிறைவு பெற்ற கிராமம் ‘கீரபாளையம் ‘ சென்று அங்கு உள்ள மக்களைப்

பாராட்டிவிட்டு, அப்படியே இந்தியாவின் மிக முக்கிய பல்கலைக் கழகமான செட்டிநாட்டு

அரசரின் அண்ணாமலைப் பல்கலை கழகத்தின் பவள விழாவிலும் கலந்துக் கொண்டார்.

அங்குப் பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தினார். பின்னர் பொறியயில் மாணவர்களை

சொந்தமாக தொழில் தொடங்கி அனைவரும் மிகப் பெரிய தொழில் அதிபர்களாக வரவும்,

இந்தியாவை வளமைப் படுத்தவும் கெட்டுக் கொண்டார்.

அதன்பிறகு அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் தமிழ்த் துறையில் முனைவர் பட்டம் பெற்ற

மாணவர்களிடமும், தமிழில் ஆர்வம் உள்ளவர்களிடத்தும் திருக்குறளைப் பற்றி மிகப் பெருமையாகப்

பேசிவிட்டு, திருக்குறளின் மூலச் சுவடுகளைப் பற்றி ஆராயுமாறு கேட்டுக் கொண்டார். குடியரசு

தலைவருக்கு திருக்குறளின் மீதுத் தீராதப் பற்று உள்ளது. இதே ஆவலை கடந்த ஆண்டு

அமெரிக்காவில் நியுசெர்சி மாநிலத்தில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை நடத்திய தமிழர்

திருவிழாவில் நடந்த விழாவில் செயற்கைக் கோள் மூலம் கிட்டத் தட்ட 2000 தமிழர்களிடம்

உரையாடினார். அப்பொழுதும் திருக்குறளின் மூல சுவடிகளை ஆராயுமாறு தமிழர்களிடத்தும்,

குறிப்பாக உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன தலைவர் திரு அழகப்பா ராம்மோகனிடமும் கேட்டுக்

கொண்டார். அதுமட்டும் அல்ல, குடியரசுத் தலைவர் 1330 திருக்குறளையும் படித்து இருப்பதாகச்

சொன்னார். அப்பொழுதும் திருக்குறளின் மீது உள்ளப் பற்றை தமிழர்களிடத்து பகிர்ந்துக் கொண்டு,

அவருக்கு மிகவும் பிடித்தத் திருக்குறளாக ‘வெல்லத்தனையது மலர்நீட்டம், மாந்தர்தம்

உள்ளத்தனைய உயர்வு ‘ என்றுச் சொல்லி அதற்கான பொருளையும் விளக்கினார்.

அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் விழாவில் பேசிய பொழுதும் சரி, தற்பொழுது அண்ணாமலைப்

பல்கலைக் கழகத்தில் பேசிய பொழுதும் சரி, குடியரசு தலைவர் அவர்கள் திருக்குறளின் மூலச்

சுவடிகளை ஆராய்ந்து கண்டுப் பிடித்தால், திருக்குறள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு எழதப் பட்டது

என்றும், திருவள்ளூவர் எங்குப் பிறந்தார் ? என்பதும் தெரிய வரும் என்றார். அதுமட்டும் அல்ல, நாம்

தீவிரமாக ஆராய்ந்தால், நிச்சயம் இந்தியாவிற்குள் எங்காவது ஓர் மூலையில் மூலச் சுவடுகள் நிச்சயம்

கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தமிழ் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு எழதப் பட்டது

என்றும், நாம் தோராயமாக தமிழ் மொழியின் வயதைத் தெரிந்துக் கொள்ளலாம் என்றும் நம்பிக்கைத்

தெரிவித்தார். நம் குடியரசு தலைவர் பிறப்பால் இஸ்லாமியர் ஆனாலும், புனித நூலான திருக்குரானை

மட்டும் படிக்கமால், திருக்குறள், பகவத் கீதை, பைபிள் அனைத்தையும் நன்கு ஆழமாகப் படித்து

இருக்கிறார். தற்பொழுது திருக்குறளுக்கு உரையும் எழுதுக் கொண்டு இருக்கிறார். இந்தியாவின்

மிக உயர்ந்த பதவிக்கு சென்ற பொழுதும் தாய் மொழி மீது அவர் வைத்துள்ள பற்று, தாய் மொழி

வளர்ச்சிக்கு அவர் தன்னால் ஆன முயற்சிகள் எடுத்து வருவது தமிழர்கள் அனைவருக்கும்

பெருமையாக உள்ளது.

நன்றி

அன்புடன்

மயிலாடுதுறை சிவா…

Series Navigation

மயிலாடுதுறை சிவா

மயிலாடுதுறை சிவா